வாழ்க்கைத் தத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்க்கைத் தத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புறம் பேசுதல்

ஒருவரைப் பற்றி பேசுவதற்கு பதிலாக ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டால் இந்த உலகில் பெரும்பாலான பிரச்சினைகள் மறைந்து விடும் என்பார்கள்.

புறம் பேசுதல் (gossip). ஒரு போதையாக மாறிவிட்ட காலம் இது. 

போதைப் பழக்கம், போதைக்கு அடிமையாகி இருப்பவரை மட்டுமின்றி அவரைச் சுற்றி இருப்பவர்களையும் பாதிப்பதைப் போல, புறம் பேசுதலும் பேசுபவரை மட்டுமில்லாமல் அவரைச் சுற்றி இருப்போரையும் பாதிக்கிறது.

உலக அளவில் 60 சதவீதம் மக்கள் ஒருவரைப் பற்றி மற்றவர் ஏதேனும் பேசுகிறார்கள் என்கிறது ஆய்வு ஒன்று.

மனரீதியாக தன்னம்பிக்கை இல்லாதவர்களும் பிறருடைய கவனத்தை தாங்கள் கவர வேண்டும் என நினைப்பவர்களுமே பெரும்பாலும் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவார்கள். 

புறம் பேசுவதற்கு பல காரணிகள் இருந்தும்,இரண்டு  காரணங்கள் மிக முக்கியமானவை.

1. பொறாமை

நொடிப் பொழுதில் நிகழ்ந்துவிடும் தன்மைகொண்டது பொறாமை. தன்னிடம் இல்லாத ஒன்று பிறரிடம் இருக்கும்போது, அவர்மீது பொறாமை ஏற்படுகிறது. அவரிடத்தில் இருக்கும் அந்த ஒன்றோ அதைபோல் வேறு ஒன்றோ கிடைத்தால் அன்றி, பொறாமை போகாது. அல்லது அவர்களிடத்தில் அதைப் பற்றிய மதிப்பு குறைய வேண்டும்.

2. முக்கியத்துவ உணர்வு இழக்கப்படல்

நாம் இருக்கும் இடத்தில் எப்போதுமே ஓர் முக்கியத்துவ உணர்வைப் பெற விரும்புகிறோம். நண்பர்கள் மத்தியில், சுற்றி இருப்பவர்கள் மத்தியில், 'சிறந்தவர்' என்ற உணர்வைப் பெற விரும்புகிறோம். இந்த உணர்வை எல்லா இடத்திலும் நாம் எதிர்பார்ப்பதில்லை. நம்மைச் சுற்றி இருப்பவர்கள் மத்தியில் மட்டுமே எதிர்பார்கிறோம். தெரிந்த வட்டத்தில் சிறந்தவராக விளங்க வேண்டும் என்ற உணர்வு. அவ்வாறான முக்கியத்துவம் இழக்கப்படும் போது மற்றவர்கள் தொடர்பில் புறம் பேசத் தொடங்குகின்றார்கள்.

புறம் பேசப்படுபவர்களை மட்டுமல்ல பேசுபவர்களையும் கேட்பவர்களையுமே அது மனரீதியாகப் பாதிக்கும். உண்மையில் புறம் பேசு பவர்கள் தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்ளவே செய்கிறார்கள். இவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் அல்ல என்ற எண்ணத் தைத்தான் பிறர் மனதில் விதைக்கிறார்கள். 

நீங்கள் ஒருவரைப் பற்றி என்ன பேசுகிறீர்களோ அது முதலில் நீங்கள் யார் என்பதையே பிரதிபலிக்கும். தவிர அது அவருக்கு என்ன விளைவை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அந்த விளைவு உங்களிடம் இருந்தே ஆரம்பம் ஆகும். 

மற்றவர்களை மகிழ்ச்சி படுத்துவது அவர்களுக்கு தரும் மறுமலர்ச்சி அல்ல அது உங்களுக்கே மகிழ்ச்சிதரக் கூடியது. இதைப் புரிந்து கொண்டால் மகிழ்ச்சி மனதில் நிறையும்.

சிறு வினோத தகவல்கள்

ஏழாண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் நட்பு வாழ்நாள் முழுதும் நீடிக்குமாம். 

அடிக்கடி ஒருவர் நினைவு வந்து கொண்டிருந்தால், அவரும் உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறாராம். 

எல்லாவற்றுக்கும் எரிச்சல் படுகிறீர்கள் என்றால், எதையோ இழந்த நிலையில் இருக்கிறீர்களாம்.

குழுவாக அமர்ந்திருக்கையில் யாராவது நகைச்சுவை சொன்னால், சிரித்துக்கொண்டே யாரைப் பார்க்கிறீர்களோ, அவர்தான் உங்களுக்கு மிகவும் பிடித்தவராவர். 

நாளொன்றுக்கு நான்கைந்து பாடல்களையாவது கேட்பவர்களுக்கு நினைவாற்றல் கூடுமாம், நோய் எதிர்ப்பு சக்தி வளருமாம், மன அழுத்தத்துக்கான வாய்ப்பு 80 சதவீதம் குறையுமாம். 

உங்கள் மனதை யாராவது காயப்படுத்திருந்தால், அவரை மன்னிப்பதற்கு உங்கள் மூளை சராசரியாக 6 முதல் 8 மாதங்கள் அவகாசம் எடுத்துக்கொள்ளுமாம். 

சர்ச்சைக்குரிய விடயங்களில் கருத்து சொல்லாமல் விடுபவர்கள்,  புத்திசாலிகளாம்.

மிக விரைவில் ஏமாற்றத்தை சந்திப்பவர்கள், யாரையுமே நம்பாதவர்கள்தானாம். 

முன்னாள் காதலர்கள் இருவர் நண்பர்களாக மட்டுமே இருந்தால் - ஒன்று, அவர்களுக்குள் காதல் இருக்கிறது. இல்லையேல், அவர்கள் ஒருபோதும் காதலிக்கவே இல்லை.

யார் அதிகம் உபதேசம் செய்கிறார்களோ, அவர்கள்தான் அதிகமான பிரச்சினைகளில் இருக்கிறார்களாம். 

ஒருவர் ஒரு விசயத்தை செய்யவில்லை என்று அதிக முறைக்கூறி விவாதிப்பவரானால், அதை அவர் செய்திருக்கலாம் என்று உளவியல் கூறுகிறது.

ஒருவர் அதிகமாக விரல் நகம் கடிப்பவராக இருந்தால் அவர் பதற்ற நிலையில் உள்ளவராவார் என்று அர்த்தம். 

ஒருவருக்கு கோபம் அதிகமாக வருமானால் அவர் பதற்றமாக இருக்கிறார் என கருதமுடியும். 

ஒருவர் அதிகாலையில் எழும்புபவராக இருந்தால் அவருக்கு பல்வேறுப்பட்ட ஆரோக்கியமான விசயங்களும், வாழ்க்கையில் வெற்றி பெறக்கூடிய விசயங்களும் காத்திருக்கும். 

ஒருவர் பகலில் உறங்கி இரவில் விழித்திருப்பவராக இருந்தால் இவ்வாரானவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்.  

ஒரு மனிதன் ஆகக்குறைந்தது 6 மணித்தியாளங்கள் ஆழ்நிலையில் உறங்க வேண்டும் (எந்த ஒரு ஓசைக்கும் எழும்பாத ஆழ்நிலை தூக்கம்). இவ்வாறு தூங்குபவரானால் இவருடைய பல்வேறுப்பட்ட உடல், உளவியல் சார்ந்த நோய்கள் வராது. 

ஒருவர் அதிகமாக  மறையாக (முடியாது / கிடைக்காது / இயலாது) பேசுபவராக இருந்தால் அவர் வாழ்க்கையில் பல்வேறுபட்ட ஆசைகள் நிறைவேறாமல் வாழ்ந்து இருப்பார். 

கழுதைகளுடன் வாதிடப்போகாதீர்கள் (குட்டிக்கதை)

கழுதையொன்று புலியிடம், "புல்லின் நிறம் நீலம்!" என்று கூறியது.

புலி கோபமடைந்து, "இல்லை, புல் பச்சை!" என்று கூறியது.

விவாதம் சூடுபிடித்தது. இருவரும் வழக்கை நடுவர் மன்றத்திற்கு சமர்ப்பிக்க முடிவு செய்தனர். எனவே அவர்கள் காட்டின் ராஜா சிங்கத்தின் முன் சென்றனர்.

donkey-tiger-lion

சிங்கம் தனது சிங்காசனத்தில் அமர்ந்திருப்பதைக் கண்ட கழுதை, "அரசே, புல் நீலநிறமானது என்பது உண்மையா?" என்று கேட்டது.

சிங்கம், "உண்மை, புல் நீலநிறமானது" என்று பதிலளித்தது.  

கழுதை விரைந்து தொடர்ந்தது, "புலி என்னுடன் உடன்படவில்லை... முரண்படுகிறது அரசே! என்னை எரிச்சலூட்டுகிறது, தயவுசெய்து அவரை தண்டியுங்கள்."  என்று கூறியது.

அப்போது அரசர், "புலியாகிய நீ ஐந்து வருடங்களுக்கு யாருடனும் பேசக்கூடாது, மௌனமாகவே இருக்க வேண்டும். இதுதான் உனக்குரிய தண்டனை" என்று தீர்ப்பளித்தது.

கழுதை மகிழ்ச்சியுடன் குதித்து, "புல் நீலநிறமானது!", "புல் நீலநிறமானது!" என்று கூறிக்கொண்டு அங்கிருந்து அகன்றது. 

புலி அதனது தண்டனையை ஏற்றுக்கொண்டது. ஆனால் அது சிங்கத்திடம் "அரசே, ஏன் என்னைத் தண்டித்தீர்கள்? புல் பச்சை நிறம்தானே" என்றது.

சிங்கம், "நீ சொல்வது சரிதான். புல் பச்சைநிறம்தான்."  

புலி, "அப்படியானால் ஏன் என்னைத் தண்டித்தீர்கள்?".

சிங்கம் பதிலளித்தது, "புல் நீலமா அல்லது பச்சை நிறமா என்ற கேள்விக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உன்னைப் போன்ற ஒரு துணிச்சலான, புத்திசாலியான ஓர் உயிரினம் ஏன் கழுதையுடன் விவாதித்து நேரத்தை வீணாக்கினாய்? அதுவே எனக்கு கவலையை உண்டாக்கியது. அதற்கே இந்தத் தண்டனை!"

முட்டாள் மற்றும் வெறியருடன் வாதிடுவதுதான் மிக மோசமான நேர விரயமாகும். அவர்கள் உண்மை அல்லது யதார்த்தத்தைப் பற்றி கவலைப்படாதவர்கள். ஆனால் அவர்களுக்கு வேண்டியதெல்லாம் அவர்களது மாயையான நம்பிக்கைகளில் வெற்றி மட்டுமே.  

பொருளற்ற விவாதங்களில் நேரத்தை வீணாக்காதீர்கள்.

நாம் அவர்களுக்கு எத்தனை சான்றுகளை வழங்கினாலும் அவர்கள் புரிந்துக்கொள்ளும் திறன் இல்லாதவர்கள். அவர்களின் அகங்காரத்தாலும், வெறுப்பு மற்றும் கோபத்தாலும் கண்மூடித்தனமாகத்தான் இருப்பார்கள்.  

அவர்கள் பிழையாக இருந்தாலும் அவர்களுக்கு தம்மை சரியாக இருப்பதாக காட்டிக்கொள்ள வேண்டும். அறியாமை அலறும் போது, நுண்ணறிவு அமைதியாக இருக்க வேண்டும். உங்கள் அமைதியும், மௌனமும் அதிக மதிப்புடையவை.

மதிநுட்பம்

சீனாவில் நடந்த ஒரு வங்கிக் கொள்ளையின் போது, கொள்ளையர்களில் ஒருவன் துப்பாக்கியுடன் அனைவரையும் மிரட்டினான். "இந்தப் பணம் அரசுக்குச் சொந்தமானது, ஆனால் உங்கள் உயிர்; உங்களுக்கு சொந்தமானது" என அனைவரும் அசையாமல் படுத்துவிட்டார்கள் .

மனதை மாற்றும் முறை என்பது இதுதான். This is called "Mind Changing Concept” Changing the conventional way of thinking.

checkmate

அங்கே ஒரு பெண் கொள்ளையர்களின் கவனத்தை திருப்ப, அநாகரிகமாக நடந்தாள். அப்பொழுது ஒரு கொள்ளையன், இங்கு நடக்க போவது கொள்ளை, கற்பழிப்பு அல்ல என்று மிரட்டி அமர வைத்தான்.

இதை தான் செய்யும் தொழில்களில் கவனம் தேவை என்று சொல்கிறோம். Being Professional & Focus only on what you are trained.

கொள்ளையடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் கொள்ளையா்களுள் ஒருவன் கேட்டான் "வாருங்கள் சீக்கிரம் பணத்தை எண்ணி விடலாம்" என்று. மற்றொருவன்  சொன்னான், பொறு, அவசரம் வேண்டாம். பணம் நிறைய இருக்கிறது. நேரம் செலவாகும். அரசே நாம் எவ்வளவு கொள்ளை அடித்தோம் என்று நாளை செய்திகளில் சொல்லி விடும்.

இதைத்தான் படிப்பைவிட அனுபவம் சிறந்தது என்போம். 

This is called "Experience.” Nowadays, experience is more important than paper qualifications!

வங்கியின் மேலாளர் இச்சம்பவத்தை காவல்துறையிடம் சொல்ல முனைந்த போது, அவனுடைய மேல் அதிகாரி தடுத்து அவனிடம் கூறினார் "வங்கியில் கொள்ளை போனது 20 கோடிதான். நாம் மேலும் 30 கோடி பதுக்கி வைத்து மொத்தமாக ஐம்பது கோடி கொள்ளை போய்விட்டது என்று சொல்லி விடுவோம்" என்றார்.

"காற்றுள்ள போதே தூற்றிக் கொள்" என்பது இது தான். This is called Swim along with the tide. Converting an unfavorable situation to yours.

இதை கேட்ட மற்றொரு அதிகாரி "வருடம் ஒரு கொள்ளை இவ்வாறு நடந்தால் மிக நன்றாக இருக்கும்" என்றார்.

"கலியுகம்" என்பது இது தான். This is called Killing boredom World. Personal happiness is much more important than your job.

மறுநாள் செய்திகளில் வங்கியில் 100 கோடி கொள்ளை போய்விட்டது என்று அறிவிக்கபட்டது. கொள்ளையாட்கள் அதிர்ந்து போய் பணத்தை எண்ணத் தொடங்கினர். எவ்வளவு எண்ணியும் அவர்களால் இருபது கோடிகளுக்கு மேல் போக முடியவில்லை. கொள்ளையாட்களில் ஒருவன் எரிச்சல் அடைந்து "நாம் உயிரை பணயம் வைத்து இருபது கோடி கொள்ளையடித்தோம். ஆனால் இந்ந வங்கி அதிகாரி சிரமம் இல்லாமல் எண்பது கோடி கொள்ளை அடித்து விட்டனர். படிப்பின் அவசியம் புரிகிறது இப்பொழுது. இதற்குத்தான் படித்திருக்க வேண்டும்" என்றான். True. Knowledge is nowadays very important than money in this world.

மகிழ்ச்சியான மண முறிவு

உலகின் பெரும் பணக்கார இணையர்களில் ஒருவரான பில் கேட்ஸ், மற்றும் அவர் மனைவி மெலிண்டா கேட்ஸ் இருவரும் மனம் இசைந்து, தங்கள் 27 ஆண்டுகால திருமண உறவை விட்டு விடுதலை ஆகிவிட்டனர். அதற்கு அவர்கள் சொல்லி இருக்கும் காரணம், "இதற்கு மேலும் நாங்கள் ஒன்றாக இணைந்து வளர்ச்சி அடைய முடியாது" என்பதே. இதற்கு பல எதிர் வினைகள், கிண்டல் பதிவுகள் வந்து கொண்டிருந்தன.

happy divorce

விவாகரத்து செய்பவர்களைக் கண்டு பரிதாபம் கொள்வதை விடுங்கள். அதை விட மோசமான திருமண உறவில் சிக்குண்டு கிடக்கும் உங்கள் தோழிகள், தோழர்களுக்காக பரிதாபம் கொள்ளுங்கள். (அது நீங்களாகக் கூட இருக்கலாம்!)

நீங்கள் உங்கள் இணையுடன் நன்றாகவே வாழ்ந்தாலும், பிரியும் யாரையும் கண்டு பரிதாபம் கொள்வதை விடுங்கள். எந்த உறவும் வாழ்நாளின் இறுதிவரை நீடிக்கும் என்ற கற்பனையை விடுங்கள். முட்டாள்தனமான தேவதைக் கதைகளை நம்பாதீர்கள். 

சமூகம் பற்றிய அச்சம் இல்லை என்றால் இன்று எத்தனை திருமணங்கள் நீடித்து இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? சமூக, குடும்ப, பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்படும் அச்சத்தால் மட்டுமே குடும்பம் என்ற அமைப்பு இன்று நீடித்து நிற்கிறது. அன்பு மற்றும் மகிழ்வால் நிலைத்திருக்கும் ஜோடிகள் எத்தனை பேர் என்று நினைக்கிறீர்கள்? 

அச்சம் ஒன்று மட்டுமே இன்றைய சூழலில் திருமணங்களை இணைத்துப் பிடிக்கிறது. குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய அச்சம், வீடில்லாமல் போகுமோ என்ற அச்சம், பெருமளவில் ஜீவனாம்சம் தரவேண்டுமோ என்ற அச்சம், வாழ்க்கைத் தரம் கீழிறங்கி விடுமோ என்ற அச்சம், தனியே வாழ நேரிடுமோ என்ற அச்சம், நோய்வாய்ப்பட்டால் நம்மை கவனிக்க யாரும் இல்லாமல் போகக் கூடும் என்ற அச்சம், பெற்றோர் என்ன சொல்வார்களோ என்ற அச்சம், சமூகம் என்ன சொல்லுமோ என்ற அச்சம்...

பெற்றோர் பிரிந்து போனால் குழந்தைகள் வாழ்க்கை கேள்விக்குள்ளாகும் என்ற கூற்று சரியல்ல. பெரியோருக்கு தான் மண்டைக்குள் சிக்கலே தவிர, குழந்தைகளுக்கு அல்ல. மண உறவில் இருக்கும் பெற்றோரா, பிரிந்திருக்கும் பெற்றோரா யாரால் குழந்தைகளுக்கு சிக்கல் என்பதே கேள்வியல்ல. என்ன மாதிரியான பெற்றோர் அவர்கள் என்பதே இங்கே கேள்வி. 

இந்தியா போன்ற நாடுகளில் விவாகரத்து பெறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நம் பரிதாபம் தேவையல்ல, நம் பெரும் மதிப்பும் மரியாதையும் தான் தேவை. ஏனென்றால் சிறு வயது முதலே அவர்களுக்குள் திணிக்கப்பட்டு இருக்கும் எல்லைகளை, உங்களையும் கட்டி வைத்திருக்கும் எல்லைகளை அவர்கள் உடைத்து வெளிவருகிறார்கள். 

திருமணத்தில் இருந்து விடுபட நினைக்கும், ஆனால் வெளிவர முடியாத பெண்களைக் கண்டு நான் தீர்ப்பிடுவதும் இல்லை, பரிதாபம் கொள்வதும் இல்லை. அவர்கள் தங்கள் பொன் விழாவைக் கொண்டாடும் போது அவர்களுடன் நானும் கொண்டாடுவேன் என்று எனக்குத் தெரியும். இந்த மன உறுதிக்கு நான் அவர்கள் மேல் மட்டற்ற மரியாதை வைத்திருக்கிறேன்; இப்படி வாழ்வது எளிதல்ல. 

ஆனால் ஒரு விவாகரத்துக்கும் இதே அளவு முயற்சியும், துணிவும் தேவைப்படுகிறது. விவாகரத்துகளைக் கண்டு உச் கொட்டுவதை நிறுத்துவோம். திருமணமாகும் ஒரு இணையரை வாழ்த்துவது போல ஒத்த கருத்துடன் பிரியும் இணையரையும் வாழ்த்துவோம். ஏனென்றால் அவர்கள் ஒன்றாக சேர்ந்து இருந்ததை விட, இப்போது தனியே இன்னும் நிறைவான, தங்களுக்கு மகிழ்வான, அர்த்தம் பொதிந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவிருக்கிறார்கள். அதில் வேறு ஒருவருக்கும் இடம் இருக்கலாம். 

படித்துப் பாருங்கள், கரைந்து போவீர்கள்

வாழைத்

தோட்டத்திற்குள்

வந்து முளைத்த...

காட்டுமரம் நான்..!


எல்லா மரங்களும்

எதாவது...

ஒரு கனி கொடுக்க,

எதுக்கும் உதவாத...

முள்ளு மரம் நான்...!


தாயும் நல்லவள்...

தகப்பனும் நல்லவன்...

தறிகெட்டு போனதென்னவோ

நான்...


படிப்பு வரவில்லை...

படித்தாலும் ஏறவில்லை...


இங்கிலீஷ் டீச்சரின்

இடுப்பைப் பார்க்க...

இரண்டு மைல் நடந்து

பள்ளிக்கு போவேன்.


பிஞ்சிலே பழுத்ததே..

எல்லாம் தலையெழுத்தென்று

எட்டி மிதிப்பான் அப்பன்...


பத்து வயதில் திருட்டு...

பனிரெண்டில் பீடி...

பதிமூன்றில் சாராயம்...

பதினாலில் பலான படம்...

பதினைந்தில் ஒண்டி வீட்டுக்காரி...

பதினெட்டில் அடிதடி...


இருபதுக்குள் எத்தனையோ...

பெண்களிடம் விளையாட்டு...


இரண்டு, மூன்று முறை கருக்கலைப்பு...


எட்டாவது பெயிலுக்கு...

ஹெட்மாஸ்டர் வேலையா கிடைக்கும்?


மண் லாரி ஓட்டினால் லோடுக்கு...

நூறு தருவார்கள.


வாங்கும் பணத்துக்கு...

குடியும் கூத்தியாரும் என...


எவன் சொல்லியும் திருந்தாமல்...

எச்சிப் பிழைப்பு பிழைக்க...

கை மீறிப்

போனதென்று...

கால்கட்டுக்கு ஏற்பாடு செய்தனா்.


வேசிக்கு காசு

வேணும்...

வருபவள் ஓசிதானே...


மூக்குமுட்டத் தின்னவும்...

முந்தானை விரிக்கவும்...

மூன்று பவுனுடன்...

விவரம் தெரியாத ஒருத்தி...

விளக்கேற்ற வீடு வந்தாள்.


வயிற்றில் பசித்தாலும்...

வயிற்றுக்குக் கீழ் பசித்தாலும்...

வக்கணையாய் பறிமாறினாள்...


தின்னு கொழுத்தேனே தவிர...

மருந்துக்கும் திருந்தவில்லை...


மூன்று பவுன் போட

முட்டாப் பயலா நான்...

இன்னும் ஐந்து வேண்டுமென்று,

இடுப்பில் மிதித்து அனுப்பி வைக்க...


கறவை மாட்டை சந்தைக்கு அனுப்பி,

நான் கட்டினவளை வீட்டுக்கு அனுப்பினான்,

சொந்தம் விட்டுப்போகாமல் இருக்க...

மாமனாரான மாமன்...!


பார்த்து வாரமானதால்...

பசிக்கிறதென்று கைப்பிடிக்க...

தள்ளிப் போனதென்று தள்ளி விட்டாள்...

சிறுக்கிமவ.


இருக்கும் சனி...

போதாதென்று

இன்னொரு சனியா..?


மசக்கை என்று சொல்லி...

மணிக்கொரு முறை வாந்தி...

வயிற்றைக் காரணம் காட்டி...

வாய்க்கு ருசியாய் சமைப்பதில்லை...


சாராயத்தின் வீரியத்தால்...

சண்டையிட்டு வெளியே அனுப்ப..

தெருவில் பார்த்தவரெல்லாம்

சாபம் விட்டுப்

போவார்கள்.


கடைசி மூன்று மாதம்...

அப்பன் வீட்டுக்கு

அவள் போக...

கறிவேப்பிலைக்காரி ஒருத்தி...

வாசனையாய் வந்து போனாள்...


தர்ம ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளதாக...

தகவல் சொல்லியனுப்ப...

ரெண்டு நாள் கழித்து...

கடமைக்கு எட்டிப் பார்த்தேன்...


கருகருவென

என் நிறத்தில்...

பொட்டபுள்ள..!


எவன் கேட்டான் இந்த மூதேவியை... ?

'கள்ளிப் பால் கொடுப்பாயோ...

கழுத்தை திருப்புவாயோ...

ஒத்தையாக வருவதானால்...

ஒரு வாரத்தில்

வந்து விடு '

என்று சொல்லி திரும்பினேன்.


ஆறு மாதமாகியும் அவள் வரவில்லை...


அரசாங்க மானியம்

ஐயாயிரம்...

கிடைக்குமென்று

கையெழுத்துக்காகப்

பார்க்கப் போனேன்...


கூலி வேலைக்குப் போனவளைக்

கூட்டி வரவேண்டி...

பக்கத்து வீட்டு பாப்பா ஓடிச் செல்ல...


ஆடி நின்ற ஊஞ்சலில்...

அழுகுரல் கேட்டது...


சகிக்க முடியாமல்

எழுந்து...

தூக்கினேன்...


அதே அந்த 

பெண் குழந்தை..!


அடையாளம் தெரியவில்லை...


ஆனால் அதே கருப்பு...


கள்ளிப் பாலில்

தப்பித்து வந்த அது,

என் கைகளில் சிக்கிக் கொண்டது...


வந்த கோபத்திற்கு...

வீசியெறியவே தோன்றியது...


தூக்கிய நொடிமுதல்...

சிரித்துக் கொண்டே இருந்தது,


என்னைப் போலவே...

கண்களில் மச்சம்,


என்னைப் போலவே

சப்பை மூக்கு,


என்னைப் போலவே

ஆணாகப்...

பிறந்திருந்தால் இந்நேரம் இங்கிருக்க

வேண்டியதில்லை....


பல்லில்லா வாயில்...

பெருவிரலைத் தின்கிறது,


கண்களை மட்டும்...

ஏனோ சிமிட்டாமல் பார்க்கிறது,


ஒரு கணம் விரல் எடுத்தால்...

உதைத்துக் கொண்டு அழுகிறது,


எட்டி... விரல் பிடித்துத்..

தொண்டை வரை வைக்கிறது,


தூரத்தில்

அவள் வருவது கண்டு...

தூரமாய் வைத்து விட்டேன்...


கையெழுத்து வாங்கிக்கொண்டு...

கடைசி பஸ்ஸுக்கு திரும்பி வருகிறேன்,


முன் சீட்டில் இருந்த குழந்தை...

மூக்கை எட்டிப் பிடிக்க

நெருங்கியும்...

விலகியும் நெடுநேரம்...

விளையாடிக் கொண்டு இருந்தேன்!


ஏனோ அன்றிரவு...

தூக்கம் நெருங்கவில்லை,

கனவுகூட

கருப்பாய் இருந்தது,


வெளிச்சம் வரும்வரை காத்திருந்தேன்...

போட்ட கையெழுத்துப் பொருந்தவில்லை...

என்ற பொய்த்தனத்தோடு,

இன்னொரு கையெழுத்துக்கு...

மீண்டும் சென்றேன்,


அதே கருப்பு,

அதே சிரிப்பு,

கண்ணில் மச்சம்,

சப்பை மூக்கு...

பல்லில்லா வாயில்

பெருவிரல் தீனி...


ஒன்று மட்டும் புதிதாய்...

எனக்கும் கூட

சிரிக்க வருகிறது...


கடைசி பஸ், ஆனால் பேருந்தில்...

எந்த குழந்தையும் இல்லை.

வீடு நோக்கி நடந்தேன்,


பாதி வழியில் கறிவேப்பிலைகாரி...

கைப் பிடித்தாள்

உதறிவிட்டு நடந்தேன்...


தூக்கம் இல்லை

நெடுநேரம்...


பெருவிரல்

ஈரம் பட்டதால்...

மென்மையாக

இருந்தது...

முகர்ந்து பார்த்தேன்....


விடிந்தும் விடியாததுமாய்...

காய்ச்சல் என்று சொல்லி...

ஊருக்கு

வரச் சொன்னேன்,


பல்கூட விளக்காமல்...

பஸ் ஸ்டேண்டுக்கு சென்று விட்டேன்,


பஸ் வந்ததும் லக்கேஜை

காரணம் காட்டி...

குழந்தையைக் கொடு என்றேன் !


பல்லில்லா வாயில் பெருவிரல் !

இந்த முறை பெருவிரலைத் தாண்டி... ஈரம் எங்கோ

சென்று கொண்டு இருந்தது...


தினமும் என் மீது படுத்துக்கொண்டு...

பொக்கை வாயில் கடிப்பாள்,


அழுக்கிலிருந்து

அவளைக் காப்பாற்ற...

நாளுக்கு நாலைந்து முறை குளிப்பேன்,


பான்பராக் வாசனைக்கு...

மூக்கைச் சொரிவாள், விட்டு விட்டேன்...


சிகரெட் ஒரு முறை...

சுட்டு விட்டது

விட்டு விட்டேன்...


சாராய வாசனைக்கு...

வாந்தியெடுத்தாள்... விட்டு விட்டேன்,


ஒரு வயதானது...


உறவுகளெல்லாம்...

கூடி நின்று,

'அத்தை சொல்லு '

'மாமா சொல்லு '

'பாட்டி சொல்லு '

'அம்மா சொல்லு 'என்று...

சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்...


எனக்கும் ஆசையாக இருந்தது,

'அப்பா 'சொல்லு

என்று சொல்ல,

முடியவில்லை......

ஏதோ என்னைத் தடுத்தது,

ஆனால் அவளை எதுவும் தடுக்கவில்லை...

அவள் சொன்ன முதல் வார்த்தையே...

'அப்பா'தான்!


அவளுக்காக எல்லாவற்றையும்...

விட்ட எனக்கு,

அப்பா என்ற

அந்த வார்த்தைக்காக...

உயிரைக்கூட விடலாம் என்று தோன்றியது,


அவள் வாயில் இருந்து வந்த...

அந்த வார்த்தைக்காக மீண்டும் பிறந்தேன்,


இந்த சாக்கடையை...

அன்பாலேயே கழுவினாள்...


அம்மா சொல்லித் திருந்தவில்லை,

அப்பா சொல்லித் திருந்தவில்லை,

ஆசான் சொல்லித் திருந்தவில்லை,

நண்பர்கள் சொல்லித் திருந்தவில்லை,

நாடு சொல்லியும் திருந்தவில்லை,

முழுசாய் மூன்று வார்த்தை பேச வராத...

இந்த முகத்தை பார்த்து திருந்தி விட்டேன்..


வளர்ந்தாள்...

நானும் மனிதனாக வளர்ந்தேன்...


படித்தாள்,

என்னையும் படிப்பித்தாள்...


திருமணம்

செய்து வைத்தேன்,

இரண்டு குழந்தைகளுக்குத் தாயானாள்,


இரண்டு குழந்தைகளுமே...

பெரியவர்களாய் வளர்ந்து விட்டார்கள்,


நானும்கூட தாத்தாவாகி விட்டேன்,


என்னை மனிதனாக்க...

எனக்கே மகளாய் பிறந்த...

அந்த தாய்க்காகக் காத்திருக்கிறது...

இந்த கடைசி மூச்சு..!


ஊரே ஒன்று கூடி...

உயிர்த் தண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்,


எனக்குத் தெரியாதா என்ன?

யாருடைய பார்வைக்கப்புறம்...

பறக்கும் இந்த உயிரென்று?


வானத்தை பார்த்துக் காத்திருக்கிறேன்...


வாசலில் ஏதோ சலசலப்பு,

நிச்சயம் என் மகளாகத்தான் இருக்கும்...


என் பெருவிரலை யாரோ

தொடுகிறார்கள்,


அதோ அது அவள்தான்,


மெல்ல சாய்ந்து...

என் முகத்தை பார்க்கிறாள்...


என்னைப் போலவே...

கண்களில் மச்சம்,

சப்பை மூக்கு,

கருப்பு நிறம்,

நரைத்த தலைமுடி,

தளர்ந்த கண்கள்,


என் கைகளை முகத்தில் புதைத்துக் கொண்டு,

'அப்பா அப்பா' என்று குமுறிக் குமுறி அழுகிறாள்,


அவள் எச்சில்

என் பெருவிரலிட,

உடல் முழுவதும் ஈரம் பரவ...

ஒவ்வொரு புலனும் துடித்து...

அடங்குகிறது....................


தாயிடம் தப்பி வந்த

மண்ணும்...

கல்லும்கூட,

மகளின்...

கை பட்டால் காந்தச் சிலையாகும்!


படித்துப் பாருங்கள், கரைந்து போவீர்கள்

இதை படிக்கும்போது கண்கள் ஈரமானல், 

நீங்கள் நல்ல தகப்பனாக, பாசமுள்ள பிள்ளையாக இருப்பீர்கள்.... 


எழுதியவர் யார் என்று தெரியவில்லை

ஆனால்,

படித்துப் பாருங்கள், கரைந்து போவீர்கள்!

வாழ்க்கை வாழ்வதற்கே

ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் 70 ஆண்டுகள். பாலிய வயது முதல் பருவ வயது வரை 20 ஆண்டுகள். முதல் 20 ஆண்டுகள் வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் விளையாட்டாக ஓடிவிடும்.

வாழ்வின் கடைசி 20 ஆண்டுகள். நாம் வாழ்ந்தும் பயனில்லை. வீட்டில் இருக்கும் கதிரை, மேசை போல நாமும் ஒரு பழைய பொருள் ஆகி விடுவோம்.

ஆக 20 + 20 = 40 ஆண்டுகள் போக, மீதி இருப்பது 30 ஆண்டுகள் மாத்திரம்.

அந்த 30 ஆண்டுகளில் 10 வருடங்கள் தூங்கி விடுகிறோம். குறைந்த பட்சம் தினசரி 8 மணி நேரம் தூங்கி விடுகிறோம்.

மீதி இருப்பது 20 ஆண்டுகள். இதில் வேலை, வேலை  என்று பணம் சம்பாதிப்பதற்காக 12 மணிநேரம் உழைக்கிறோம். அதில் 10 வருடங்கள் போய் விடுகிறது.

மீதி இருப்பதோ 10 வருடங்கள். இதில், மனைவியோடு பிரச்சனைகள், குழந்தைகளோடு பிரச்சினைகள், உடல் நல குறைபாடுகள்,  என 2 வருடங்கள் போய் விடும்.

மீதி இருப்பது வெறும் 8 வருடங்கள். அதாவது 2922 நாட்கள்.

நமது மன திருப்திக்காக, இந்த 2922 நாட்களை வேண்டுமானால் இலகுவாக கணக்கிட 3000 நாட்கள் என வைத்துக் கொள்ளலாம்.

நாம் இந்த உலகத்தில் எந்தவித பிரச்னைகளும் இல்லாமல் ஒரளவு நிம்மதியாக வாழக்கூடிய நாட்கள்,வெறும் 3000 நாட்கள் மட்டும் தான்.

இந்த 3000 நாட்கள் வாழ்வதற்கு, மனம் நிறைய வெறுப்பு,கோபம், துரோகம், வன்மம்,வன்முறை, வஞ்சகம்,அகங்காரம், தலைக்கனம், ஏளனம், சந்தேகம், என எத்தனையோ எதிர்மறை குணங்களோடு மட்டும் ஏன் நாம் வாழ வேண்டும்?

வாழ்க்கையில் அன்பு, கருணை, இரக்கம், பாசம், அமைதி, நட்பு, நம்பிக்கை, காதல், இயற்கை, உதவி, புன்னகை, கனிவு, குழந்தை, பாராட்டு, விட்டுக்கொடுத்தல், இறை பக்தி, குடும்பம், தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, சந்தோஷம் என எத்தனையோ வளர்முகமான வான விடயங்கள் இருக்கின்றனவே. இவற்றை பின்பற்றலாமே.

நெருப்பு தன்னைச்சுற்றி இருக்கின்ற எல்லாவற்றையும் எரித்துவிடும். தண்ணீர் தன்னைச்சுற்றி இருக்கின்ற எல்லாவற்றையும் குளிர வைக்கும், அது நெருப்பாகவே இருந்தாலும் கூட.

ஒருபோதும் நம் வாழ்வில் நெருப்பைஉமிழாமல், எப்போதுமே நம் மனதை தண்ணீர்போல் வைத்து இருப்போம்.

படித்ததில் பிடித்தது!

இவ்வளவுதான் வாழ்க்கை

உலகில் ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் 70 ஆண்டுகள்.

பாலிய வயது முதல், பருவ வயது வரை:
முதல் 20 வருடங்கள் வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் விளையாட்டாக ஓடிவிடும்.

வாழ்வின் கடைசி 20 வருடங்கள்:
நாம் வாழ்ந்தும் பயனில்லை, வீட்டில் இருக்கும் கதிரை, மேசை, போல் நாமும் ஒரு பழைய பொருள் ஆகி விடுவோம்.

20+20= 40 போக, மீதி இருப்பது 30 வருடங்கள்.

அந்த 30 இல் 10 வருடங்கள்:

குறைந்த பட்சம் தினசரி 8 மணி நேரம் தூங்கி விடுகிறோம்.

மீதி இருப்பது: 20 வருடங்கள்.

இதில் வேலை, வியாபாரம் என்று பணம் சம்பாதிப்பதற்காக 12 மணிநேரம் உழைக்கிறோம். அதில் 10 வருடங்கள் போய் விடுகிறன.

மீதி இருப்பதோ 10 வருடங்கள்.

இதில், மனைவியோடு பிரச்சனைகள், குழந்தைகளோடு பிரச்சினைகள், உடல் நல குறைபாடுகள் என 2 வருடங்கள் போய் விடும்.

மீதி இருப்பது வெறும் 8 வருடங்கள்.

அதாவது 2922 நாட்கள். இவ்வளவுதான் வாழ்க்கை!

நமது மன திருப்திக்காக, இந்த 2922 நாட்களை வேண்டுமானால்
சுமாராக 3000 நாட்கள் என வைத்துக் கொள்ளலாம்.

நாம் இந்த உலகத்தில் எந்தவித பிரச்னைகளும் இல்லாமல் ஒரளவு நிம்மதியாக வாழக்கூடிய நாட்கள், வெறும் 3000 நாட்கள் மட்டும் தான்.

இந்த 3000 நாட்கள் வாழ்வதற்கு:

மனம் நிறைய வெறுப்பு, கோபம், துரோகம், வன்மம், வன்முறை, வஞ்சகம், அகங்காரம், தலைக்கனம், ஏளனம், சந்தேகம் என எத்தனையோ எதிர்மறை குணங்களோடு மட்டும் ஏன் நாம் வாழ வேண்டும்?

வாழ்க்கையில் இவற்றை பின்பற்றலாமே?

அன்பு, கருணை, இரக்கம், பாசம், அமைதி, நட்பு, நம்பிக்கை, காதல், இயற்கை, உதவி, புன்னகை, கனிவு, குழந்தை, பாராட்டு, விட்டுக்கொடுத்தல், இறை பக்தி, குடும்பம், தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, சந்தோஷம் என எத்தனையோ
நேரான விடயங்கள் இருக்கின்றனவே. இவற்றை பின்பற்றலாமே.

நெருப்பு தன்னைச்சுற்றி இருக்கின்ற எல்லாவற்றையும் எரித்துவிடும்.

தண்ணீர் தன்னைச்சுற்றி இருக்கின்ற எல்லாவற்றையும் குளிர வைக்கும்.

அது நெருப்பாகவே இருந்தாலும் கூட, ஒருபோதும் நம் வாழ்வில் நெருப்பை உமிழாமல், எப்போதுமே நம் மனதை தண்ணீர்போல் வைத்து இருப்போம்.

நன்றி: முகநூல் பதிவு

கரப்பான்பூச்சி கோட்பாடு

ஒரு உணவகத்தில் கரப்பான் பூச்சி ஒன்று எங்கிருந்தோ பறந்து வந்து ஒரு பெண் மீது அமர்ந்து கொண்டது. உடனே அந்தப் பெண் பயத்தில் கூச்சலிட ஆரம்பித்தார். மிகவும் கடினமாக, அந்தக் கரப்பானை அவர் மீதிருந்து விலக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். அதுவரை அமைதியாக இருந்த அவருடன் வந்தவர்களுக்கும் இப்பொழுது அந்த பதற்றம் தொற்றிக் கொண்டது.
கரப்பான்பூச்சி கோட்பாடு
கரப்பான்பூச்சி கோட்பாடு

ஒருவாறாக, அவர் அந்த கரப்பானை தன் மீதிருந்து விலக்கி விட்டார். ஆனால் அந்த கரப்பான் இப்பொழுது வேறொரு பெண் மீது சென்று அமர்ந்து கொண்டது. இப்பொழுது இந்தப் பெண் அதே போல் கூச்சலிட ஆரம்பித்தார். அமைதியாக இருந்த மொத்த உணவகமும் இப்பொழுது அமைதியிழந்து காணப்பட்டது.

இதை பார்த்துக் கொண்டிருந்த பணியாளர் சூழ்நிலையை சரி செய்ய விரைந்தார். இந்த முறை கரப்பான்பூச்சி, பறந்து சென்று அந்த பணியாளர் மீது அமர்ந்து கொண்டது. பணியாளர் தன்னை நிதானித்துக் கொண்டு தன் சட்டையின் மீது அமர்ந்திருக்கும் கரப்பானின் நடத்தையை கவனித்தார். அது தன் நகர்தலை நிறுத்தியதும், தன் விரல்களால் அதை பிடித்து உணவகத்திற்கு வெளியே வீசியெறிந்தார்.

நான் என் காபியைப் பருகிக் கொண்டே இதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் மனது இந்த நிகழ்ச்சியிலிருந்து சில கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தது. அவர்களின் அந்த நடத்தைக்கு கரப்பான்பூச்சி தான் காரணமா? அப்படியெனில் அந்தப் பணியாளர் ஏன் அதன் மூலம் அமைதி இழக்கவில்லை? அவர் மட்டும் எந்த ஆரவாரமுமின்றி அதை நேர்த்தியாகக் கையாண்டார். எனவே அந்த பெண்களின் நடத்தைக்கு கரப்பான் பூச்சி காரணம் அல்ல. அந்த கரப்பான்பூச்சி ஏற்படுத்தும் தொந்தரவைக் கையாள முடியாத அவர்களின் இயலாமை தான் அவர்களின் அந்த நடத்தைக்குக் காரணம்.

இதன் மூலம் நான் உணர்ந்தது என்னவெனில், என் தந்தை அல்லது மனைவி அல்லது முதலாளியின் கடுமையான பேச்சு என்னை அமைதியிழக்கச் செய்யவில்லை, அந்த வாக்குவாதத்தை கையாள முடியாத என் இயலாமை தான் என்னைத் தொந்தரவு செய்கிறது. என் அமைதியை குலைக்கிறது. சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசல்கள் என்னை தொந்தரவு செய்யவில்லை.

ஆனால், அந்த நெரிசல்களைக் கையாள முடியாத என் இயலாமை தான் என்னைத் தொந்தரவு செய்கிறது.

என் வாழ்வில் எந்தவொரு குழப்பத்தையும் எந்தவொரு சிக்கலும் உருவாக்குவதில்லை, அந்த குழப்பங்களுக்கு நான் செய்யும் எதிர்வினைகள் தான் சிக்கல்களை உருவாக்குகிறது. இதன் மூலம் நான் கற்றது வாழ்வில் நான் எதிர்வினை ஆற்றக் கூடாது, பதிலளிக்க வேண்டும். நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு நடக்கும் நிகழ்ச்சிகள் நம்மிடம் உள்ள அனைத்தையும் பறிக்கக் கூடும் ஒன்றைத் தவிர. அது தான் ஒரு சூழ்நிலைக்கு நாம் எவ்வாறு பதிலளிக்கிறோம் என்பதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம். வாழ்வில் நமக்கு நடக்கும் விஷயங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அதற்கு நாம் எப்படி பதிலளிக்கிறோம் என்பதை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.

இந்தக் கதையை ஆழ்ந்து வாசித்து பயன்படுத்தினால், நீங்கள் இருக்கும் இடத்திலேயே வாழ்க்கையை கொண்டாட துவங்குவீர்கள்! நம் வெற்றியும், தோல்வியும் நம் கைகளில் தான் என்பதை உணர்வீர்கள்! வெற்றி, தோல்விகளை விட வாழ்க்கையை அனுபவித்து வாழக் கற்றுக் கொள்வீர்கள்!

நன்றி: முகநூல் பதிவு

வரலாற்றில் ஓர் வாழ்க்கை தத்துவம்

டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது அதனருகில் மூன்று கப்பல்கள் இருந்தனவாம்.

அதில் ஒரு கப்பலின் பெயர் சாம்சன். அது டைட்டானிக் மூழ்கிக் கொண்டிருந்த இடத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் இருந்ததாம். டைட்டானிக் அனுப்பிய "காப்பாற்றுங்கள்"  என்கிற சமிக்ஞை காட்டும் வெள்ளை விளக்கொளியைப் பார்த்தனர்.

ஆனால் அதில் இருந்தவர்கள், சீல் எனும் கடல் விலங்கைத் திருட வந்தவர்கள். அதனால் காப்பாற்றப்போய் மாட்டிக் கொண்டால் என்னாவது, நமக்கேன் வம்பு என்று எண்ணி டைட்டானிக்கின் எதிர்த்திசை யில் விரைந்து விட்டனர்.

நம்மில் பலர், நமது பாவச்செயல்களில் மட்டுமே கவனம் செலுத்தி அடுத்தவரின் துன்பங்களைப் பற்றித் துளியும் கவலை படாமல் இருப்போம். இந்த சாம்சன் கப்பல் போல.

அடுத்து கலிபோர்னியன் என்ற கப்பல், டைட்டானிக் கப்பலிற்கு 14 கி.மீ தொலைவில் இருந்தது. அக்கப்பலின் கேப்டனும் டைட்டானிக் அனுப்பிய ஆபத்து சமிக்ஞைகளைப் பார்த்தார். ஆனால் அவர்களின் கப்பலைச் சுற்றியும் பனிப்பாறைகள் இருந்தன.

இருட்டாகவும், மோசமான சூழலும் இருந்ததால், திரும்பவும் கரைக்கே போய், காலையில் புறப்படலாம் என முடிவெடுத்தனர் மாலுமிகள். உதவி கோரிய கப்பலுக்கு ஒன்றும் ஆயிருக்காது என்று அவர்களே, அவர்களுக்குக் கூறித்தேற்றிக் கொண்டனர்.

இக்கப்பலைப் போன்றவர்கள் நம்மிடையே இருக்கும்,”நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. சூழல், சரியில்லை, நிலைமை சரியானதும் பார்த்துக்கொள்ளலாம்’ என்று எண்ணுபவர்கள்.

மூன்றாவது கப்பல் கர்ப்பாதியா. அது, டைட்டானிக் கிலிருந்து 58 கி.மீ தொலைவில் தெற்கு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது. அப்போது கப்பலின் கேப்டனுக்கு டைட்டானிக் அனுப்பிய ஆபத்து சமிக்ஞை ரேடியோ மூலம் கேட்டது.

அவர் உடனே, மண்டியிட்டு இறைவனிடம் 'எனக்கு வழிகாட்டு' எனப் பிரார்த்தனை செய்து, கப்பலைத்திருப்பி, டைட்டானிக்கை நோக்கி, ஆபத்தான பனிப்பாறை களிடையே செலுத்தினார். இந்தக் கப்பல்தான் டைட்டானிக்கில் சிக்கியிருந்த 705 பேரைக் காப்பாற்றியது.

தடைகளும்,எதிர்ப்புகளும்,ஆபத்துகளும், பொறுப்பைத்தட்டிக் கழித்திட காரணங்களும் நிச்சயம் குறுக்கிடும், ஆனால் அவற்றை மீறிச் செல்பவர்கள் மட்டுமே உலகில் உள்ள மக்களின் இதயங்களில் நாயகர்களாக வாழ்வார்கள்.

பின் குறிப்பு: இக்கட்டுரை எமது ஆக்கம் அல்ல. முகநூல் பதிவு ஒன்றில் இதனைக் காண நேர்ந்தது. ஆனாலும், கட்டுரையின் சிறப்புக் கருதி மீள் பதிவு செய்கிறோம்.

ஆண்

ஆண்களை பற்றி....
ஆண்

ஆண் என்பவன்...
கடவுளின் உன்னதமான படைப்பு.

சகோதரிகளுக்காக, இனிப்புகளை தியாகம் செய்பவன்..
பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளை தியாகம் செய்பவன்.

காதலிக்கு பரிசளிக்க,
தன் பர்ஸை காலி செய்பவன்.

மனைவி குழந்தைகளுக்காக , தன் இளமையை அடகு வைத்து அலட்டிக் கொள்ளாமல் அயராது உழைப்பவன்.

எதிர்காலத்தை லோன் வாங்கி கட்டமைத்துவிட்டு, அதனை அடைக்க வாழ்க்கை முழுதும் லோ லோ என்று அலைபவன்..

இந்த போராட்டங்களுக்கு இடையில்,
மனைவி-தாய்-முதலாளிகளின் திட்டுகளை வாங்கி,
தாங்கிக்கொண்டே ஓடுபவன்.

அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள் முழுக்க அர்ப்பணிப்பவன்.

அவன் வெளியில் சுற்றினால்,
'உதவாக்கரை' என்போம்.

வீட்டிலேயே இருந்தால்,
'சோம்பேறி' என்போம்.

குழந்தைகளை கண்டித்தால்,
'கோபக்காரன்' என்போம்,

கண்டிக்கவில்லை எனில்,
'பொறுப்பற்றவன்' என்போம்.

மனைவியை வேலைக்கு செல்ல, அனுமதிக்காவிடில்
'நம்பிக்கையற்றவன்' என்போம்,

அனுமதித்தால் 'பொண்டாட்டி சம்பாத்தியத்தில் பொழப்பை ஓட்டுபவன்' என்போம்.

தாய் சொல்வதை கேட்டால்,
'அம்மா பையன்' என்போம்.

மனைவி சொல்வதை கேட்டால்,
'பொண்டாட்டி தாசன்' என்போம்.

ஆக மொத்தத்தில் ஆண்களின் உலகம், தியாகங்களாலும் வியர்வையாலும் சூழப்பட்டது.

இதனை பகிர்ந்து, ஆண்களுக்கு புன்னகையையும்
பெண்களுக்கு புரிதலையும், ஏற்படுத்தலாம்...

ஆண்
அழத் தெரியாதவன் அல்ல

கண்ணீரை
மறைத்து வைக்கத் தெரிந்தவன் ..

அன்பில்லாதவன் அல்ல
அன்பை மனதில் வைத்து
சொல்லில் வைக்கத் தெரியாதவன் ..

வேலை தேடுபவன் அல்ல
தன் திறமைக்கான
அங்கீகாரத்தை தேடுபவன் ..

பணம் தேடுபவன் அல்ல
தன் குடும்பத்தின்
தேவைக்காக ஓடுபவன் ..

சிரிக்கத் தெரியாதவன் அல்ல
நேசிப்பவர்களின் முன்
குழந்தையாய் மாறுபவன் ..

காதலைத் தேடுபவன் அல்ல
ஒரு பெண்ணிடம்
தன் வாழ்க்கையை தேடுபவன் ..


கரடுமுரடானவன் அல்ல ..
நடிக்கத் தெரியாமல்
கோபத்தை கொட்டிவிட்டு
வருந்துபவன்.

விட்டுக்கொடுத்தல், உதவி செய்தல்: உண்மை சம்பவம்

“விட்டுக்கொடுக்குறதாலேயோ, அடுத்தவங்களுக்கு உதவி செய்றதாலேயோ எனக்கு என்ன இலாபம்?” என்று யோசிக்கும் யதார்த்த வாதியா நீங்கள்?
அப்படியானால், இந்தப் பதிவு உங்களுக்கு அவசியம்.

“என் வாழ்க்கையில எவ்வளவோ பேருக்கு உதவியிருக்கேன். எவ்வளவோ விட்டுக்கொடுத்திருக்கேன். அதனால் என்ன புண்ணியம்?” என்று விரக்தியில் இருப்பவரா நீங்கள்? இந்த பதிவு உங்களுக்கும் தான்.

“வரும்போது என்ன கொண்டு வந்தோம்? போகும்போது என்ன கொண்டு போகப்போறோம். வாழுமட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்”என்ற கொள்கையுடையவரா நீங்கள்? இந்தப் பதிவின் அவசியம் உங்களுக்கும் தான்.

உதவி செய்தல்

1892 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவன் அவன். அவனுக்கு உற்றார் உறவினர் எவரும் இல்லை. தன்னுடைய படிப்பிற்கான கட்டணத்தை கட்ட கூட அவனுக்கு வசதியில்லை. அவனும் அவன் நெருங்கிய நண்பன் ஒருவனும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.

பிரபல இசைக் கலைஞர் ஒருவரை வைத்து கல்லூரியில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் இவர்கள் படிப்பிற்கு தேவையான நிதியை திரட்டுவது என்று முடிவானது. அதற்காக அந்த சமயத்தில் அமெரிக்காவிலும் ஏன் உலகம் முழுதும் உலகப் புகழ் பெற்று விளங்கிய போலந்து நாட்டை சேர்ந்த பியானோ இசைக்கலைஞர் இக்னேஸி ஜே.பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து தேதி கேட்டார்கள். அவரது முகாமையாளரோ “ஐயா வருவார். ஆனால் நீங்கள் அவருக்கு $2,000 தரவேண்டும்”என்று கூற, இவர்களும் மகிழ்ச்சியாக ஒப்புக்கொள்கிறார்கள்.

பேட்ரெவ்ஸ்கி வருவதாக சொன்னதே மிகப் பெரிய வெற்றி என்பதால் இவர்கள் அந்த நிகழ்ச்சியை பிரபலமாக்க முடிவு செய்து, அல்லும் பகலுமாக நிகழ்ச்சிக்காக திட்டமிட்டு உழைக்கிறார்கள்.

நிகழ்ச்சிக்கான அந்த நாளும் வந்தது. அந்த நாளில் எதிர்பாராதவிதமாக நகரில் வேறு சில முக்கிய நிகழ்வுகள் இருந்தபடியால், எதிர்பார்த்தபடி நுழைவுச்சீட்டுக்கள் விற்பனையாகவில்லை. ஆகையால் அரங்கம் நிரம்பவில்லை. அரும்பாடுபட்டு விழாவை ஏற்பாடு செய்த இவர்களுக்கு எப்படி இருக்கும்? மனதை திடப்படுத்திக்கொண்டு பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து நடந்ததை கூறி, நிகழ்ச்சியை ரத்து செய்து விடலாம் என்கிறார்கள். ஆனால் பேட்ரெவ்ஸ்கி மறுத்துவிடுகிறார். “நான் திட்டமிட்டபடி நடத்தியே தீருவேன்”என்கிறார்.

ஒரு வழியாக நிகழ்ச்சி முடிந்த பின்னர், அவரை சந்திக்கும் மாணவர்கள் அவரிடம் $1,600 கொடுத்து, “இது தான் மொத்தம் வசூலான தொகை. மீதியுள்ள தொகைக்கு முன் தேதியிட்டு காசோலை கொடுத்துவிடுகிறோம். விரைவில் அந்த கணக்கில் பணம் செலுத்திவிடுகிறோம். பெரிய மனதுடன் வாங்கிக்கொள்ளுங்கள்”என்று கூறி கெஞ்சியபடி அவரிடம் பணத்தையும் காசோலையையும் கொடுக்க, அதை வாங்கி காசோலையை கிழித்துப் போட்ட பேட்ரெவ்ஸ்கி அவர்கள் கொடுத்த தொகையை அவர்களிடமே கொடுத்து “நீங்கள் எனக்கு தரவேண்டிய கட்டணத்தை தரவேண்டாம். அதை தள்ளுபடி செய்கிறேன். இந்த பணத்தை வைத்துக்கொண்டு உங்கள் படிப்புக்கான கட்டணத்தை கட்டுங்கள்”என்கிறார்.

அவர்கள் கண்கள் கலங்கியபடி அவருக்கு நன்றி கூறுகின்றனர்.

நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வாடகை கொடுக்க கூட வசதியின்றி அந்த மாணவர்கள் சிரமப்படுவதை அறிந்துகொள்ளும் பேட்ரெவ்ஸ்கி அந்த தொகையையும் இறுதியில் தானே செலுத்திவிடுகிறார்.

பேட்ரெவ்ஸ்கி மிகப் பெரிய செல்வந்தர். அவரை பொறுத்தவரை அது சாதாரண தொகை தான். ஆனால் அவருக்குள் இருந்த மனிதாபிமானத்தை அந்த சம்பவம் உணர்த்தியது.

யாரோ முன் பின் தெரியாத இரு மாணவர்களிடம் ஏன் பேட்ரெவ்ஸ்கி இப்படி நடந்துகொள்ளவேண்டும்? அதனால் அவருக்கு என்ன லாபம்?

“எரியும் வீட்டில் பிடிங்கிய வரை லாபம் என்று கருதுவது தானே புத்திசாலித்தனம். நாம் விட்டுக்கொடுத்தாலோ இல்லை உதவி பண்ணினாலோ அதனால் நமக்கு என்ன லாபம்?” இப்படித் தான் பெரும்பாலானோர் நினைப்பார்கள்.

ஆனால் பேட்ரெவ்ஸ்கி, “நான் உதவாவிட்டால் இவர்களுக்கு வேறு யார் உதவுவார்கள்? இவர்களுக்கு உதவுவதால் நாமொன்றும் குறைந்துபோகப்போவதில்லை” என்று கருதியே அந்த உதவியை செய்தார்.

ஆண்டுகள் உருண்டன.

பேட்ரெவ்ஸ்கி காலப்போக்கில் மேலும் புகழின் உச்சிக்கு சென்று ஒரு கட்டத்தில் போலந்து நாட்டின் பிரதம மந்திரியாகவே ஆகிவிட்டார். மிகப் பெரும் தலைவராக விளங்கி நல்லாட்சி நடத்தி வந்தார். ஆனால் கெட்ட காலம் முதலாம் உலகப் போர் துவங்கிய காலகட்டம் அது. போலந்து நாடு போரின் பிடியில் சிக்கி சின்னாபின்னமானது. போர் முடிவுக்கு வரும் தருவாயில் மக்கள் அனைத்தையும் இழந்து வறுமையில் உழன்றனர். எங்கும் பஞ்சம் தலைவிரித்தாடியது. இது 1918 ஆம் ஆண்டு.

எப்படி நிலைமையை சமாளிப்பது? பசியோடிருக்கும் தன் இலட்சக்கணக்கான மக்களுக்காக யாரிடம் போய் உதவி கேட்பது? கலங்கித் தவிக்கிறார் பேட்ரெவ்ஸ்கி. கடைசியில் அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழு அராவை (ARA - American Relief Administration)அணுகுகிறார். அதன் தலைவராக இருந்தவர் ஹெர்பெர்ட் ஹூவர் என்பவர் (இவர் பின்னாளில் அமெரிக்காவின் 31 வது ஜனாதிபதியானார்).

பேட்ரெவ்ஸ்கி கேட்டுக்கொண்டதையடுத்து அமெரிக்காவின் உதவிக்கரம் போலந்துக்கு நீள அடுத்த சில நாட்களில் அமெரிக்காவிலிருந்து போலந்து நாட்டிற்கு ஆயிரக்கணக்கான டன்கள் உணவு, தானியங்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் அனுப்பப்பட்டன. அதன் மூலம் சுமார் 1.5 மில்லியன் போலந்து மக்கள் பசியாறினர்.

ஒரு பேரழிவு மற்றும் பஞ்சத்திலிருந்து போலந்து மக்கள் தப்பினர். பேட்ரெவ்ஸ்கி நிம்மதி பெருமூச்சுவிட்டார். தான் கேட்டவுடன் தன் மக்களுக்கு உணவு பொருட்களை டன் கணக்கில் அனுப்பி அவர்களை பட்டினி சாவிலிருந்து காப்பாற்றிய அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழுவின் தலைவரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல விரும்பினார் பேட்ரெவ்ஸ்கி.

ஹெர்பெர்ட் ஹூவரை நேரில் சந்தித்து கண்கள் பனிக்க நன்றி தெரிவிக்கிறார்.

“இல்லை… இல்லை… நீங்கள் நன்றி சொல்லக்கூடாது. நீங்கள் செய்த உதவியைத்தான் நான் உங்களுக்கு திருப்பிச் செய்தேன். உங்களுக்கு நினைவிருக்கிறதா? 25 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே கல்லூரி மாணவர்கள் இருவருக்கு அவர்கள் பணம் கட்ட உங்கள் நிகழ்ச்சியை இலவசமாக நடத்திக்கொடுத்து உதவினீர்கள் அல்லவா?அந்த மாணவர்களில் ஒருவன் தான் நான்” என்கிறார் ஹெர்பெர்ட் ஹூவர்.

பேட்ரெவ்ஸ்கி கண்கள் கலங்கியபடி அவரை அணைத்துக்கொள்கிறார்.

காலம் எப்போது யாரை எங்கு வைக்கும் என்று ஒருவராலும் கூற முடியாது.

இத்தோடு முடியவில்லை ஹூவரின் நன்றிக்கடன். இரண்டாம் உலகப் போர் முடிந்த தருவாயில் (1946) போலந்துக்கு உதவுவதற்கு என்றே ஒரு தனி ஆணைக்குழு ஹூவர் தலைமையில் அமைக்கப்பட்டது. அதன் சார்பாக போலந்துக்கு நேரில் சென்ற ஹெர்பர்ட் ஹூவர், அந்நாட்டிற்கு அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு தேவையான உணவுத் திட்டங்களை வகுத்துக்கொடுத்துவிட்டு அவற்றிற்கான அமெரிக்க அரசின் உதவிகளையும் ஏற்பாடு செய்துவிட்டு வந்தார். இதன் காரணமாக போலந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் ஹெர்பெர்ட் ஹூவரை புகழ்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவருக்கு போலந்து நாட்டு பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டங்கள் வழங்கின. போலந்து மக்கள் மனதில் ஒரு ஹீரோவாக வாழ்ந்து வந்தார் ஹெர்பெர்ட் ஹூவர்.

அதுமட்டுமல்லாமல் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் UNICEF, CARE என்று இரண்டு புதிய சர்வதேச தொண்டு அமைப்புக்களை ஹூவர் ஏற்படுத்தினார். அதன் மூலம் உலக முழுதும் பல லட்சம் மக்கள் இன்றும் பசியாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனிப்பட்ட ஒருவருக்கு செய்த உதவி, எப்படி ஒரு நாட்டிற்கே பன் மடங்கு திரும்ப கிடைத்தது பார்த்தீர்களா?

இந்த உலகில் நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதை பன்மடங்கு அறுவடை செய்வீர்கள்.

ஏனெனில், விதைத்தவன் உறங்கினாலும், ஏன் அந்த படைத்தவனே உறங்கினாலும் விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை. பலன் கருதாமல் பேட்ரெவ்ஸ்கி செய்த உதவி இது. ஆனால் காலத்தினால் செய்த உதவியாயிற்றே! காலம் குறித்து வைத்துகொண்டது..

நன்றி: முகநூல் பதிவு

தன்னம்பிக்கை : பென்சில்போல் வாழ்ந்தால் வெற்றி

ஒரு மனிதர் தன் வாழ்வில் தொட்ட துறைகளில் எல்லாம் வெற்றி பெற்று வந்தார்.

“வெற்றிக்கு யார் வழிகாட்டி” என்று நிருபர்கள் கேட்டார்கள். “இவர்தான்” என்று சுட்டிக் காட்டினார்.
தன்னம்பிக்கை

அவர் காட்டிய திசையில், தங்க சட்டமிடப்பட்ட பென்சில் ஒளிப்படம் இருந்தது.

நிருபர்கள் திகைத்தார்கள். அவர் சொன்னார், இந்தப் பென்சில் எனக்கு 5 விடயங்களைக் கற்றுத் தந்தது.

பல விடயங்களை எழுதுவதற்கும், வரைவதற்கும் தன்னை முழுமையாக நம் கைகளில் ஒப்படைக்கிறது

அவ்வப்போது நாம் அதை சீவுகிறோம். சீவும் போதெல்லாம் கூர்மையடைகிறது.

தவறுகள் செய்தாலும், அவற்றை அழிப்பதற்கு இடம் கொடுக்கிறது. வெளியே எப்படியிருந்தாலும் உள்ளே உடையாமல் ஒரு சீராய் இருக்கிறது.

சின்னஞ்சிறிய பென்சிலாகும் அளவு சீவப்பட்டாலும் எழுதிக் கொண்டிருக்கிறது. கடைசி வரை தன் சுவட்டினைக் காகிதத்தில் பதிக்கிறது. இதைப் பார்த்துதான் என் வாழ்க்கையை நான் சீரமைத்துக் கொண்டேன்.

பல அரிய விஷயங்களை நிகழ்த்த நான் ஒரு கருவி தான் என்கிற அடக்க உணர்வோடு என்னைக் கடவுளின் கைகளில் ஒப்படைத்திருக்கிறேன்.

சோதனைகள் வரும்போதெல்லாம், மேலும் மேலும் கூர்மையாகிக் கொள்கிறேன்.

தவறுகள் செய்திருப்பதாகத் தெரிந்தால் உடனே திருத்திக் கொள்கிறேன்.

வெளிச்சூழலில் புகழ் வந்தாலும் பழிச்சொல் வந்தாலும் உள்ளே உடையாமல் உறுதியாய் இருக்கிறேன்.

கடைசி வரையில் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.காலத்தில் நம் சுவட்டைப் பதித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்றார்.

கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு, பெரிய பெரிய விடயங்கள் பென்சிலில் இருப்பது புரிந்தது.

நன்றி: முகநூல் பதிவு

பதட்டமும் மன உளைச்சலும்

மாவீரன் நெப்போலியன் உலகத்தையே வெல்ல நினைத்து போரிட்டு பல வெற்றிகளைப் பெற்றாலும், கடைசியில் பிரித்தானியாவிடம் தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்த நெப்போலியனை பிரித்தானியா சிறைப்பிடித்து செயிண்ட் ஹெலெனா தீவில் தனிச்சிறையில், தனிமையில் வைத்தது.

பதட்டமும் மன உளைச்சலும்

நெப்போலியனின் கடைசிக் காலம் சிறையில் மன உளைச்சலில் கழிந்தது. அவரை பார்க்க வந்த நண்பர் ஒருவர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து “இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார்.

ஆனால் சிறைப்படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த நெப்போலியனுக்கு சிந்தனை செயல்படாமல், சதுரங்க அட்டை மீது கவனம் போகவில்லை. சிறிது காலத்தில் இறந்தும் போனார்.

பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம்விட அதை ஆய்வு செய்தபோது, அந்த அட்டையின் நடுப்பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது. அது அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்கான வழியை குறிப்பிட்டு இருந்தது.

ஆனால் மன உளைச்சலும் பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் வைத்து, அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது.

உறுதியான சிமெண்ட் தரையையும், மரப்பெட்டியையும் தன் கூர்மையான பற்களாலும், நகத்தாலும் குடைந்து ஓட்டை போடும் வல்லமை கொண்டது எலி. ஆனால், மரத்தால் செய்யப்பட்ட எலிப்பொறியில் சிக்கி கொண்டால் அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதட்டத்தாலும் அந்த எலிப்பொறியை உடைக்கும் வழியை விட்டுவிட்டு, அந்த பொறியின் பின்னால் இருக்கும் கம்பிக்கு முன்னும் பின்னும் பதட்டத்துடன் திரிந்து, சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக்கொண்டு விடும்.

மாவீரனுக்கும் சரி, சாதாரண எலிக்கும் சரி, பதட்டமும் மன உளைச்சலும் அவர்களின் சிந்தனையை செயற்படாமல் வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது.

சிக்கலில் இருந்து தப்பிக்க வேண்டுமா? பதட்டம், மன உளைச்சல் ஆகிய சிறைகளில் இருந்து விலகி இருங்கள். நிச்சயம் எல்லாப் பிரச்சனைகளுக்கும் விடைகான தெளிவான, பதட்டம் அற்ற மனத்தினால் முடியும். சாமானியனும் மாவீரன் ஆகலாம்!

எது கலாச்சாரச் சீரழிவு?

கலாச்சாரச் சீரழிவு, பண்பாடு அழிவு, மேலைத்தேய மோகம், மேலைத்தேய வாழ்க்கை முறைச் சீர்கேடு, வெளிநாட்டு நாகழீக மோகம் போன்றவற்றைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? முகநூலில் பகிரப்பட்டிருந்த ஒரு படத்தைப் பார்த்ததும் ஒரு கணம் சிந்திக்க வைத்தது. அந்தப்படத்தை நீங்களும் காணுங்கள்.

கலாச்சாரச் சீரழிவு
கலாச்சாரச் சீரழிவு

வெளிநாட்டவர் இருவர் (நம்மூர் ஆட்களாகவும் இருக்கலாம்) பொது இடத்தில் வைத்து முத்தமிடுகின்றனர். அதே பொது இடத்தில் வைத்து நம்மூர் ஆள் சிறுநீர் கழிக்கையில் அந்த வழியால் பெண் ஒருவர் சங்கடத்துடன் செல்கிறார். சிறுநீர் கழிக்கும் நபர் "வெட்கமே இல்லாமல் இந்த வெள்ளைக்காரன் பொது இடத்தில் வைத்து முத்தமிடுகிறான்" என தன் மனதுக்குள் திட்டிக் கொண்டிருக்கிறார். இது அவருக்கு மேலைத்தேய கலாச்சாரச் சீரழிவாகத் தெரியலாம்.


இதில் எது உங்களுக்கு கலாச்சார சீர்கேடாகத் தெரிகிறது? முத்தமிடுபவரா? சிறுநீர் கழிப்பவரா? முத்தமிடுபவர் என்றால் நீங்கள் கட்டாயம் பகுத்தறிவில் வளர வேண்டியவர். வீதி ஓரங்களில், தெரு முனைகளில் மற்றும் பொது இடங்களில் சிறுநீர் கழிக்கும் ஆண்கள் இருக்கும் வரை நம்முடைய கலாச்சாரம், பண்பாடு போன்றன சீர்கெட்டுத்தான் உள்ளது. அவர்கள் அவ்வழியால் செல்லும் பெண்கள், பெரியவர், சிறுவர் போன்ற பலதரப்பட்டவர்களின் மனநிலை பற்றிய யோசித்திருப்பார்களா? ஏன் சக ஆண்களில் பலருக்கு இது சங்கடமானது என்பதை அறிவீர்களா?

வெளிநாட்டவர் கலாச்சாரம், பண்பாடு போன்றன சரியானது என்றோ, மேலைத்தேய கலாச்சாரம் சிறப்பானது என்றோ கருதவில்லை. ஆனால், பிழைகளை நாம் வைத்துக் கொண்டு மற்றவரை விமர்சிப்பது, ஏளனம் செய்வதும் தவறானது. இதனால், நாம் வளரப் போவதில்லை. “இறால் தன் தலைக்குள் ஊத்தையை வைத்துக் கொண்டு, மற்றவரில் ஊத்தை உள்ளது” என்று சொல்லுமாம் என்ற நாட்டார் பழமொழி உள்ளது. இவ்வாறுதான் நாமும் இருந்தால் கலாச்சாரச் சீரழிவு செய்வது வேறு யாருமல்ல. நீங்கள்தான்!

வாழ்க்கைத் தத்துவம்

மனித வாழ்க்கை விடை காண முடியாத பல கேள்வி முடிச்சுக்களைக் கொண்டது. அதனால்தான் என்னவோ வாழ்க்கைத் தத்துவம் நமக்கு அடிக்கடி தேவைப்படுகிறது. சிலபேரைப் பார்த்தீர்கள் என்றால், அவர்கள் வாழ்க்கை மிகவும் இலகுவாகச் செல்லும். அவர்கள் அதிகம் கல்வி கற்றிருக்க மாட்டார்கள். அதிக பணம் கிடைக்கும் வேலை இல்லை. ஒரு சாதாரண நபராகவே வாழ்வார். சிலவேளைகளில் அவர்களின் வாழ்க்கை நமக்குப் பிடித்திருக்கும். இந்த அலைச்சலான வாழ்க்கையைவிட, அந்த இலகுவான வாழ்கையை நாம் விரும்பலாம்.

வாழ்க்கைத் தத்துவம்
வாழ்க்கைத் தத்துவம்

இந்தப் படத்தைப் பாருங்கள். கோணலாகிப் போன ஆணிகள் விடப்பட்டு நேரான ஆணி மட்டுமே அடிவாங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் பயனுள்ளவரானால் கட்டாயம் உலகம் உங்களை உபயோகப்படுத்தும். ஆகவே, உங்களுக்கு சுமையும் அழுத்தங்களும் அதிகரிக்கும். உபயோகம் இல்லை என்றால் காசிகூட காட்சிப் பொருள்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். காய் உள்ள மரத்திற்குத்தானே கல்லடிபடும்.

இன்னுமொரு கோணத்தில் இதைப் பார்த்தால், நேரான நபர்தான் இன்றைய உலகிற்குத் தேவை. உங்களைத்தான் இந்த உலகம் தேடிக் கொண்டிருக்கிறது. ஆகவே, சுத்தியல் அடிபோல் வலிகள் உங்கள் மேல் இறங்கத்தான் செய்யும். உங்கள் நேர்மைதான் உங்களை வாழ வைக்கிறது. கோணலான மனிதர்கள் தங்களுக்கு சுமை இல்லையே என மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால், ஒரு பெட்டியை உருவாக்கவோ அல்லது வேறு ஏதாவது முக்கிய பொருளை உருவாக்கவோ நேரன ஆணி போன்ற நபர் கட்டாயம் தேவை. இதுதான் வாழ்க்கைத் தத்துவம்.

ஜப்பானியரின் ஒழுக்கமும் கடமையுணர்ச்சியும்

2018 ஆம் ஆண்டு உதைபந்தாட்ட இரசிகர்களுக்கு முக்கியமான ஆண்டு. ஏனெனில் 2018 யூன்-யூலை மாதங்களில் உலகக்கோப்பை கால்பந்து போட்டி இடம் பெற்றது. நீண்ட போட்டிகளின் பின் 32 அணிகள் மாத்திரம் இப்போட்டிகளுக்குத் தெரிவாகின. உலகக்கோப்பையைக் கைப்பற்றுவது யார் என்ற போட்டியும் எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருந்தன. ஜப்பானும் இதில் கலந்து கொண்டிருந்தது.

ஜப்பானியரின் ஒழுக்கமும் கடமையுணர்ச்சியும்

ஆட்டமிழப்பு நிலைப் போட்டியின்போது ஜப்பான் அணி 2-3 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வியுற்று வெளியேறியது. ஜப்பான் அணி கால்பந்து வீரர்களுக்கும், ஜப்பான் அணி இரசிகர்களுக்கும் பாரிய ஏமாற்றம். பலர் கண்ணீருடன் காணப்பட்டனர். நிச்சயமாக வேற எந்த செயலைச் செய்யவும் அவர்களுக்கு மணம் வந்திருக்காது.

ஜப்பான் அணியினர் உடையை மாற்றிவிட்டு, அங்கிருந்து கிளம்பிவிட்டனர். உடை மாற்றும் அறைக்குச் சென்ற உலகக்கோப்பை ஏற்பாட்டாளர்களுக்கு அதிர்ச்சியாகவிருந்தது. உடை மாற்றும் அறை மிகவும் நன்றாகச் சுத்தம் செய்யப்பட்டு, “நன்றி” என்று எழுதப்பட்ட ஓர் அட்டை அங்கு வைக்கப்பட்டு இருந்தது. அவ்வளவு பெரிய தோல்வியின் பின்னரும், அங்கிருந்த விளையாட்டு வீரர்களின் கடமையுணர்ச்சி குறையவில்லை. அவர்களின் ஒழுக்கமான வாழ்க்கை முறையும் தழும்பவில்லை.


அத்தோடு ஜப்பானியர்களின் ஒழுக்கமும் கடமையுணர்ச்சியும் நின்றுவிடவில்லை. விளையாட்டரங்கில் போட்டியைக் காண வந்த ஜப்பானிய இரசிகர்கள் போட்டி முடிந்த பின்னர் அங்கு கைவிடப்பட்டிருந்த குப்பைகளைச் சேகரித்து விளையாட்டரங்கை சுத்தப்படுத்தியதைக் காண முடிந்தது. ஏன் நமக்கு இந்த வீண் வேலை என்று செல்லும் இன்றைய உலகில், தோல்வியின் பின்னரும் ஒழுக்கம், கடமையுணர்ச்சி ஆகியவற்றைக் கைவிடாத ஜப்பானியர்கள் மிகவும் பாராட்டுக்குரியவர்கள்.

மேலும், குழு நிலை ஆட்டத்தில் ஜப்பானுக்கும் செனகல் நாட்டிற்கும் ஒரே அளவான புள்ளிகள்தான் இருந்தன. ஆனால் ஜப்பான் அடுத்த சுற்றிற்குத் தெரிவாகக் காரணம் அவர்கள் அதிகம் முறை தவறிய ஆட்டம் (foul) ஆடியிருக்கவில்லை. செனகல் அதிகமாக முறை தவறிய ஆடியதால் அடுத்த சுற்றிற்குச் செல்ல முடியாமல் தோற்றுவிட்டது.

ஜப்பானியர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள பலவிடயங்கள் உள்ளன. அதில் ஒழுக்கமும் கடமையுணர்ச்சியும்கூட உள்ளடங்குகின்றன.