![]() |
திருமண நகைச்சுவை |
ஆண்: நீண்ட நாள் வாழ ஏதாவது வழி இருக்கிறதா?
வைத்தியர்: திருமணம் செய்.
ஆண்: இது உதவி செய்யுமா?
வைத்தியர்: இல்லை, ஆனால் நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற எண்ணம் வராது.
ஆண்: திருமணத்தின்போது ஏன் மணமக்கள் கை குலுக்கிக் கொள்கிறார்கள்?
பாதிரியார்: குத்துச் சண்டை தொடங்கு முன் போட்டியாளர்கள் கைகளை குலுக்கிக் கொள்வதற்கு ஒப்பானது.
மின்னியல் இணைய வங்கியவிட பணத்தை மிகவும் வேகமாக பரிமாற்றும் முறைக்குப் பெயர் திருமணம்.
மனைவி: அன்பே, இன்று நமது திருமணநாள். என்ன செய்யலாம்?
கணவன்: இரண்டு நிமிடம் மௌனமாக எழுந்து நிற்போம்.
நீங்கள் திருமணமானவர் என்றால் தயவுசெய்து பின்வரும் செய்தியைப் பார்க்க வேண்டாம்.
சுதந்திர தின வாழ்த்துக்கள்!
திருமணமத்திற்கு முன்: நீ சொல்லியதை எண்ணி ஆண் ஒவ்வொரு இரவில் விழித்தெழுவான்.
திருமணமத்திற்கு பின்: நீ சொல்லி முடிப்பதற்கு முன் ஆண் நித்திரையாகிவிடுவான்.
பெண் நண்பிகள் சாக்கலேட் போன்றவர்கள். எப்போதும் இனிப்பாக இருப்பார்கள்.
காதலிகள் பீட்சா போன்றவர்கள். உறைப்பும் நறுமணமும் போல் அடிக்கடி உண்ணப்படுவது.
மனைவிகள் சோறும் பருப்பும் போன்றவர்கள். தெரிவே இல்லை என்றபோது உண்ணப்படுபவர்கள்.
கணவனாகப் போகிறவர்: “ஆண், பெண்ணின் எசமானன்” என்ற புத்தகம் உங்களிடம் உள்ளதா?
கடையிலுள்ள பெண்: ஐயா, கற்பனைக் கதைப் பகுதி அந்தப்பக்கம் உள்ளது.
கடவுளை அறிந்து கொள்வது குழப்பமானது. பெண்ணை மிகவும் ஒரு அழகிய விடயமாக உருவாக்கி, பின்பு மனைவியாக மாற்றிவிட்டார்.
திருமணம் செய்யு முன்: நான் உன்னை மிகவும் காதலிக்கிறேன். அதற்காக நரகத்திற்கு வேண்டுமானாலும் போகலாம்.
திருமணம் செய்த பின்: நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அருமையான பதிவுகள் பாராட்டுகள்
பதிலளிநீக்குநன்றி!
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி!
நீக்குதிருமண நகைச்சுவை. தலைப்பைப் போலவே நகைச்சுவைத் துணுக்குகளும் சூப்பர்.
பதிலளிநீக்குநன்றி
நீக்கு