இவ்வளவுதான் வாழ்க்கை

உலகில் ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் 70 ஆண்டுகள்.

பாலிய வயது முதல், பருவ வயது வரை:
முதல் 20 வருடங்கள் வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் விளையாட்டாக ஓடிவிடும்.

வாழ்வின் கடைசி 20 வருடங்கள்:
நாம் வாழ்ந்தும் பயனில்லை, வீட்டில் இருக்கும் கதிரை, மேசை, போல் நாமும் ஒரு பழைய பொருள் ஆகி விடுவோம்.

20+20= 40 போக, மீதி இருப்பது 30 வருடங்கள்.

அந்த 30 இல் 10 வருடங்கள்:

குறைந்த பட்சம் தினசரி 8 மணி நேரம் தூங்கி விடுகிறோம்.

மீதி இருப்பது: 20 வருடங்கள்.

இதில் வேலை, வியாபாரம் என்று பணம் சம்பாதிப்பதற்காக 12 மணிநேரம் உழைக்கிறோம். அதில் 10 வருடங்கள் போய் விடுகிறன.

மீதி இருப்பதோ 10 வருடங்கள்.

இதில், மனைவியோடு பிரச்சனைகள், குழந்தைகளோடு பிரச்சினைகள், உடல் நல குறைபாடுகள் என 2 வருடங்கள் போய் விடும்.

மீதி இருப்பது வெறும் 8 வருடங்கள்.

அதாவது 2922 நாட்கள். இவ்வளவுதான் வாழ்க்கை!

நமது மன திருப்திக்காக, இந்த 2922 நாட்களை வேண்டுமானால்
சுமாராக 3000 நாட்கள் என வைத்துக் கொள்ளலாம்.

நாம் இந்த உலகத்தில் எந்தவித பிரச்னைகளும் இல்லாமல் ஒரளவு நிம்மதியாக வாழக்கூடிய நாட்கள், வெறும் 3000 நாட்கள் மட்டும் தான்.

இந்த 3000 நாட்கள் வாழ்வதற்கு:

மனம் நிறைய வெறுப்பு, கோபம், துரோகம், வன்மம், வன்முறை, வஞ்சகம், அகங்காரம், தலைக்கனம், ஏளனம், சந்தேகம் என எத்தனையோ எதிர்மறை குணங்களோடு மட்டும் ஏன் நாம் வாழ வேண்டும்?

வாழ்க்கையில் இவற்றை பின்பற்றலாமே?

அன்பு, கருணை, இரக்கம், பாசம், அமைதி, நட்பு, நம்பிக்கை, காதல், இயற்கை, உதவி, புன்னகை, கனிவு, குழந்தை, பாராட்டு, விட்டுக்கொடுத்தல், இறை பக்தி, குடும்பம், தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, சந்தோஷம் என எத்தனையோ
நேரான விடயங்கள் இருக்கின்றனவே. இவற்றை பின்பற்றலாமே.

நெருப்பு தன்னைச்சுற்றி இருக்கின்ற எல்லாவற்றையும் எரித்துவிடும்.

தண்ணீர் தன்னைச்சுற்றி இருக்கின்ற எல்லாவற்றையும் குளிர வைக்கும்.

அது நெருப்பாகவே இருந்தாலும் கூட, ஒருபோதும் நம் வாழ்வில் நெருப்பை உமிழாமல், எப்போதுமே நம் மனதை தண்ணீர்போல் வைத்து இருப்போம்.

நன்றி: முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.