![]() |
Add caption |
1 – ஒருபோதுமில்லை
2 – எப்போதாவது
3 – சிலநேரம்
4 – அடிக்கடி
5 – எப்போதும்
இனி நீங்கள் பின்வரும் கேள்விகளுக்குப் உண்மையுடன் பதில் அளியுங்கள்:
- கட்டுப்பாட்டுக்கு வெளியே வாழ்க்கை செல்லாதிருக்க நீங்கள் எந்தளவு திட்டமிடுகிறீர்கள்?
- நீங்கள் நாளாந்த திட்டத்தை காகிதத்தில் குறித்து வைக்கிறீர்களா?
- திட்டத்தில் நெகிழ்வுத் தன்மையை அனுமதிக்கிறீர்களா?
- எந்தளவிற்கு கொடுக்கப்பட்ட (திட்டமிடப்பட்ட) நாளுக்கான திட்டத்தை நிறைவேற்றுகிறீர்கள்?
- எந்தளவிற்கு உங்கள் நாளாந்த திட்டம் அவரச இடையூறுகளால் சேதமாக்கப்படுகின்றது?
நீங்கள் மேலுள்ள ஐந்து கேள்விகளுக்கும் வழங்கிய மொத்த புள்ளிகளுக்கு ஏற்ப அளவீடுகளை வாசியுங்கள். எடுத்துக்காட்டு: உங்கள் மொத்தப்புள்ளி 6 முதல் 10 வரையாயின் “6-10: மேசமான திட்டமிடலாளர்” என்பதை வாசியுங்கள்
6-10: மேசமான திட்டமிடலாளர்.
உங்கள் திட்டத்தைப் பயனுள்ளதாக்க, நீங்கள் புதிய திட்டமிடல் கருவிகளை பயன்படுத்துவது பற்றி சிந்திக்க வேண்டும். நேர முகாமைத்துவம் பற்றிப் பயில்வது உங்களுக்கான முதலாவது படிமுறையாகவுள்ளது.
11-15: சராசரி திட்டமிடலாளருக்கு கீழ்.
உங்களிடம் திட்டமிடல் பற்றிய முறை உள்ளது, ஆனால் அதனை மேலும் வினைத்திறன் உள்ளதாக பயன்படுத்தினால், வாழ்வில் நீங்கள் உணரும் கட்டுப்பாடற்ற தன்மை, மன அழுத்தம் ஆகியவற்றை குறைக்க உதவும்.
16-20: சராசரி திட்டமிடலாளர்.
உங்கள் திட்டமிடல் முறை செயற்படுகிறது. ஆனால் நீங்கள் இன்னம் சிறப்பாகச் செய்யலாம். முன்னுரிமையானவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பது, அவசர இடையூறுகளைக் கையாள்வது, நாளாந்த உங்கள் திட்டங்களை எழுதுதல் ஆகியனவற்றில் உங்களுக்கு உதவி தேவை.
21-25: சராசரி திட்டமிடலாளருக்கு மேல்.
உங்கள் திட்டமிடல் முறை நன்றாகவுள்ளது. இந்த நல்ல முறையைத் தொடர்ந்து செய்யுங்கள். உங்கள் வாழ்வில் மிகவும் முக்கியமான விடயங்கள் பற்றிய திட்டத்தை நிச்சயப்படுத்த, குறிப்பிட்ட கால மீளாய்வு தேவையானது.
26-30: சிறப்பான திட்டமிடலாளர்.
நீங்கள் திட்டமிடலில் தேர்ச்சி பெற்றவர். ஆனாலும், திட்டமிடல் உங்களை கட்டுப்படுத்துவதைவிட நீங்கள் திட்டத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறீர்கள் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.
நேர முகாமைத்துவம்
திட்டமிடலில் நேர முகாமைத்துவம் முதன்மையானது. இதனைச் சரியாகச் செய்தால், உங்கள் திட்டமிடல் சிறப்பாகும். ஆகவே, வெற்றிகரமான நேர முகாமைத்துவத்திற்கான ஐந்து படிமுறைகள் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.குறிப்பிட்ட கல்வி, வேலை அல்லது தனிப்பட்ட இலக்குகளை அமைத்தல்.
ஒரு கால நாட்காட்டி உருவாக்கலும், முக்கிய நிகழ்வுகளை பதிவு செய்தலும்.
வாராந்த கால அட்டவணையினை உருவாக்குதல்.
ஒவ்வொரு விடயத்திற்கும் குறிப்பிட்ட நேரத்தை தீர்மானித்தல்.
ஒவ்வொரு நாளும் “செய்ய வேண்டியது” என்ற பட்டியலை முந்தைய நாள் இரவில் அல்லது அன்றைய நாள் காலைச் சாப்பாட்டிற்கு முன் தயார் செய்தல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.