வாழ்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சிறு வினோத தகவல்கள்

ஏழாண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் நட்பு வாழ்நாள் முழுதும் நீடிக்குமாம். 

அடிக்கடி ஒருவர் நினைவு வந்து கொண்டிருந்தால், அவரும் உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறாராம். 

எல்லாவற்றுக்கும் எரிச்சல் படுகிறீர்கள் என்றால், எதையோ இழந்த நிலையில் இருக்கிறீர்களாம்.

குழுவாக அமர்ந்திருக்கையில் யாராவது நகைச்சுவை சொன்னால், சிரித்துக்கொண்டே யாரைப் பார்க்கிறீர்களோ, அவர்தான் உங்களுக்கு மிகவும் பிடித்தவராவர். 

நாளொன்றுக்கு நான்கைந்து பாடல்களையாவது கேட்பவர்களுக்கு நினைவாற்றல் கூடுமாம், நோய் எதிர்ப்பு சக்தி வளருமாம், மன அழுத்தத்துக்கான வாய்ப்பு 80 சதவீதம் குறையுமாம். 

உங்கள் மனதை யாராவது காயப்படுத்திருந்தால், அவரை மன்னிப்பதற்கு உங்கள் மூளை சராசரியாக 6 முதல் 8 மாதங்கள் அவகாசம் எடுத்துக்கொள்ளுமாம். 

சர்ச்சைக்குரிய விடயங்களில் கருத்து சொல்லாமல் விடுபவர்கள்,  புத்திசாலிகளாம்.

மிக விரைவில் ஏமாற்றத்தை சந்திப்பவர்கள், யாரையுமே நம்பாதவர்கள்தானாம். 

முன்னாள் காதலர்கள் இருவர் நண்பர்களாக மட்டுமே இருந்தால் - ஒன்று, அவர்களுக்குள் காதல் இருக்கிறது. இல்லையேல், அவர்கள் ஒருபோதும் காதலிக்கவே இல்லை.

யார் அதிகம் உபதேசம் செய்கிறார்களோ, அவர்கள்தான் அதிகமான பிரச்சினைகளில் இருக்கிறார்களாம். 

ஒருவர் ஒரு விசயத்தை செய்யவில்லை என்று அதிக முறைக்கூறி விவாதிப்பவரானால், அதை அவர் செய்திருக்கலாம் என்று உளவியல் கூறுகிறது.

ஒருவர் அதிகமாக விரல் நகம் கடிப்பவராக இருந்தால் அவர் பதற்ற நிலையில் உள்ளவராவார் என்று அர்த்தம். 

ஒருவருக்கு கோபம் அதிகமாக வருமானால் அவர் பதற்றமாக இருக்கிறார் என கருதமுடியும். 

ஒருவர் அதிகாலையில் எழும்புபவராக இருந்தால் அவருக்கு பல்வேறுப்பட்ட ஆரோக்கியமான விசயங்களும், வாழ்க்கையில் வெற்றி பெறக்கூடிய விசயங்களும் காத்திருக்கும். 

ஒருவர் பகலில் உறங்கி இரவில் விழித்திருப்பவராக இருந்தால் இவ்வாரானவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்.  

ஒரு மனிதன் ஆகக்குறைந்தது 6 மணித்தியாளங்கள் ஆழ்நிலையில் உறங்க வேண்டும் (எந்த ஒரு ஓசைக்கும் எழும்பாத ஆழ்நிலை தூக்கம்). இவ்வாறு தூங்குபவரானால் இவருடைய பல்வேறுப்பட்ட உடல், உளவியல் சார்ந்த நோய்கள் வராது. 

ஒருவர் அதிகமாக  மறையாக (முடியாது / கிடைக்காது / இயலாது) பேசுபவராக இருந்தால் அவர் வாழ்க்கையில் பல்வேறுபட்ட ஆசைகள் நிறைவேறாமல் வாழ்ந்து இருப்பார். 

தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்து, நல்லது நடக்கும்

நான் தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்தி மூன்று வருடங்களாகி விட்டது. பத்து பதினைந்து வருடங்களாக படித்து வந்த ஜூனியர் விகடன், ஆனந்த விகடன், தினமலர், தினகரன்  மற்றும் குமுதம் படிப்பதையும் நிறுத்தி விட்டேன்.

இது ஏதோ தற்சயலாக நடந்தது போலத்தான். அனால் இவை எல்லாவற்றையும் நிறுத்திய பின் நம் இந்திய நாடு திடீரென அமைதி பூங்காவாக திகழ்கிறது.

tv

எதிர்மறை எண்ணங்கள் மறைந்தே விட்டன.

"நல்லநேரம்" நிறைய கிடைக்கிறது.

பிடித்த வரலாற்று சுயமுன்னேற்ற மற்றும் ஆன்மீக புத்தகங்களை தேடி படிக்க முடிகிறது.

தேவைப்பட்ட தகவல்கள் மற்றும் நல்ல பல விடயங்களை கூகுள் செய்து படித்து, பார்த்து ரசிக்க முடிகிறது.

தொலைக்காட்சி ஒரு “முட்டள் பெட்டி” என்று சொன்ன மகானைத்தேடிக் கொண்டு இருக்கிறேன், அவருக்கு மாலை போடுவதற்கு.

தொலைக்காட்சி நிறுவனங்கள்தான்,  நீங்கள் என்ன நினைக்கவேண்டும்? என்ன பார்க்க வேண்டும்?  என்பதை முடிவு செய்கிறது. நம் அறிவையும், மெல்லிய உணர்வுகளையும் வசியப்படுத்தி, வக்கிரமான உணர்ச்சிகளை நம் மூளையில் நிரப்பி விட்டன. அவைகள் வியாபார நிறுவனங்களே ஆகும். விளம்பர இடைவேளை என்பது வெளியில் தெரியும் விளம்பரங்கள் மட்டுமே.

செய்தி என்ற போர்வையில் தனக்கு வேண்டப்பட்ட செய்திகளுக்கு மட்டும் மறைமுகமாக ஆதரவு கொடுக்கும் ஊடகங்கள் இந்தியாவில், தமிழகத்தில், இலங்கையில் அதிகரித்து விட்டன.

எல்லாமே இன்று மாபியா வியாபாரந்தான். நமக்கு புரிய சில வருடங்கள் ஆகும். அவ்வளவு தான்.

தொலைக்காட்சிகள் மற்றும் செய்தித்தாள்கள், இதழ்கள் எதுவும் அதை வெளிப்படுத்துவது இல்லை. 

எதற்குமே உதவாத விவாத மேடையை நடத்தி கொண்டு, சூழ்ச்சி அரசியலை துணிந்து நடத்திக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு விளம்பர இடைவேளை கொடுத்து கொண்டு இருக்கிறது.

பரபரப்பு பேட்டி எடுத்துவிட்டு, பணமுடிப்பு கொடுத்து அனுப்பும் தொலைக்காட்சிகள் முட்டாள்களா? பார்க்கும் நாம் முட்டாள்களா?

இதில் சில கட்சிகளுக்கு ஒரே மாநிலத்தில் ஐந்தாறு தொலைக்காட்சி ஒலிபரப்புக்கள் வேறு. கலாசார சீர்கேடான, அரை வேக்காட்டு தொலைக்காட்சி தொடர்களை இந்தியர்கள் அனைவரும் இன்னும் முட்டாள்கள் என்றே நினைத்து வருவது வெட்க கேடு.

தமிழகத்தை எடுத்துக் கொண்டால் தமிழன் தன்பெருமைகளை அடியோடு மறந்து வருகிறான். நம் திருக்குறள் உலகங்கும் செல்லும். ஆனால் நாம் இங்கு கிரிக்கெட், பிக்பாஸ், தொலைக்காட்சி தொடர் என்று மூழ்கிக் கிடக்கிறோம். 

இன்றைய தமிழ்நாடு உண்மையான தமிழ்நாடா? 

அறுபது ஆண்டுகளுக்கு முன்னிருந்த தமிழ்மொழி உணர்வு எப்படி மங்கியது? 

நூல்களைப் படித்தால், தொலைக்காட்சிகள் தொடர்களைப் பார்க்க மனம் ஒப்பாது.

ஊடகங்களிடம் போட்டி மனப்பான்மை வேறு. வியாபார போட்டி. இன்று ஆழ்குழாய் குழியில் விழும் குழந்தைகளை மீட்கும் பணிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய போட்டி போடும் ஊடகங்கள், அந்த குழந்தை இறந்த பின், அது போல் தமிழ்நாடு எங்கும் இருக்கும் ஆழ்குழாய் குழிகளை தேடி மூட எந்த வித முயற்சியும் தொலைக்காட்சி நிலையங்கள் மூலம் செய்ய முயல்வதில்லை. பரபரப்பு ஒன்றே போதுமானது. ஊடக மேதாவிகளுக்கு என்றுமே இறந்தால் தான் நற்செய்தி. சாவும்கூட சாதிக்குச் சாதி வித்தியாசப்படுத்தப்படுகிறது.

உணர்வுபூர்வமாக செய்திகள் அதிகம் பார்த்துப்பார்த்து மனித மனம் இன்று பரபர என்று தான் அலைந்து கொண்டிருக்கிறது. இதுவும் ஒரு மனநோய் தான். ஒரு வித பயத்தையும் உருவாக்குகிறது.

நீங்கள் உண்ணும் உணவு என்னவோ அதை போல் தான் உங்கள் நடத்தை, குணம் எல்லாம்  அமையும் என்பதை போல் நீங்கள் பார்க்கும் வக்கிர தொலைக்காட்சி செய்திகள் உங்கள் குணத்தை ஒரு நாள் கெடுக்கவும் செய்யும்.

பொறுப்பு கேட்ட ஊடகம் தான் இன்று நம்மை ஆள்கிறது. தயவுசெய்து அதை தவிருங்கள். வாழ்க்கை இனிப்பாகும். அமைதி ஆகும். சொந்தமாக சிந்திப்பீர்கள்.

எல்லாவற்றையும் மிகைப்படுத்தி செய்து காட்டும் மன நிலை ஊடக நபர்களுக்கு கை வந்த கலை. அவர்கள் பெண்களை என்றுமே ஒரு போக பொருளாகத்தான் காட்டி வருகிறார்கள். சில செய்தி பத்திரிக்கைகளில் வன்கலவிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் நாட்டில் நடக்கும் நல்ல விடயங்களுக்கு கொடுக்கப்படுவதில்லை.

அடுத்த பிரச்சினையை பிரபலமாக ஆக்க, சில பைத்தியங்கள் வேறு. மேடையில் ஏதோதோ உளறி கொட்ட வேண்டியது. அது உடனே உணர்புபூர்வமான செய்தியாக ஆக்கிவிடுகிறார்கள். முப்பது ஆண்டுகளாக அவர் அரசியலுக்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பை குறைந்து போகாமல் பார்த்து கொள்கிறது தொலைக்காட்சிகள்.

முடிந்தால் உங்கள் வீட்டு தொலைக்காட்சி பெட்டிகளை மார்வாடி கடையில் அடமானம் வைத்தோ அல்லது விற்றோ வீட்டுக்கு வீடு நூலகம் அமையுங்கள். தினமும் ஒரு மணி நேரமாவது நல்ல புத்தகங்களை தேடிப்  படியுங்கள்.

முக்கிய செய்திகளை தரமான வானொலியிலோ அல்லது இணைத்திலோ தேவையான அளவு அறிந்து கொள்ளுங்கள். அது நமக்குப் போதுமானது.

இன்னும் நிறைய நேரம் இருந்தால், அநாதை குழந்தைகளுக்கு உதவுங்கள். கற்றுக்கொடுங்கள். உணவு கொடுங்கள். 

வாழ்க்கை வாழ்வதற்கே

ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் 70 ஆண்டுகள். பாலிய வயது முதல் பருவ வயது வரை 20 ஆண்டுகள். முதல் 20 ஆண்டுகள் வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் விளையாட்டாக ஓடிவிடும்.

வாழ்வின் கடைசி 20 ஆண்டுகள். நாம் வாழ்ந்தும் பயனில்லை. வீட்டில் இருக்கும் கதிரை, மேசை போல நாமும் ஒரு பழைய பொருள் ஆகி விடுவோம்.

ஆக 20 + 20 = 40 ஆண்டுகள் போக, மீதி இருப்பது 30 ஆண்டுகள் மாத்திரம்.

அந்த 30 ஆண்டுகளில் 10 வருடங்கள் தூங்கி விடுகிறோம். குறைந்த பட்சம் தினசரி 8 மணி நேரம் தூங்கி விடுகிறோம்.

மீதி இருப்பது 20 ஆண்டுகள். இதில் வேலை, வேலை  என்று பணம் சம்பாதிப்பதற்காக 12 மணிநேரம் உழைக்கிறோம். அதில் 10 வருடங்கள் போய் விடுகிறது.

மீதி இருப்பதோ 10 வருடங்கள். இதில், மனைவியோடு பிரச்சனைகள், குழந்தைகளோடு பிரச்சினைகள், உடல் நல குறைபாடுகள்,  என 2 வருடங்கள் போய் விடும்.

மீதி இருப்பது வெறும் 8 வருடங்கள். அதாவது 2922 நாட்கள்.

நமது மன திருப்திக்காக, இந்த 2922 நாட்களை வேண்டுமானால் இலகுவாக கணக்கிட 3000 நாட்கள் என வைத்துக் கொள்ளலாம்.

நாம் இந்த உலகத்தில் எந்தவித பிரச்னைகளும் இல்லாமல் ஒரளவு நிம்மதியாக வாழக்கூடிய நாட்கள்,வெறும் 3000 நாட்கள் மட்டும் தான்.

இந்த 3000 நாட்கள் வாழ்வதற்கு, மனம் நிறைய வெறுப்பு,கோபம், துரோகம், வன்மம்,வன்முறை, வஞ்சகம்,அகங்காரம், தலைக்கனம், ஏளனம், சந்தேகம், என எத்தனையோ எதிர்மறை குணங்களோடு மட்டும் ஏன் நாம் வாழ வேண்டும்?

வாழ்க்கையில் அன்பு, கருணை, இரக்கம், பாசம், அமைதி, நட்பு, நம்பிக்கை, காதல், இயற்கை, உதவி, புன்னகை, கனிவு, குழந்தை, பாராட்டு, விட்டுக்கொடுத்தல், இறை பக்தி, குடும்பம், தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, சந்தோஷம் என எத்தனையோ வளர்முகமான வான விடயங்கள் இருக்கின்றனவே. இவற்றை பின்பற்றலாமே.

நெருப்பு தன்னைச்சுற்றி இருக்கின்ற எல்லாவற்றையும் எரித்துவிடும். தண்ணீர் தன்னைச்சுற்றி இருக்கின்ற எல்லாவற்றையும் குளிர வைக்கும், அது நெருப்பாகவே இருந்தாலும் கூட.

ஒருபோதும் நம் வாழ்வில் நெருப்பைஉமிழாமல், எப்போதுமே நம் மனதை தண்ணீர்போல் வைத்து இருப்போம்.

படித்ததில் பிடித்தது!

இவ்வளவுதான் வாழ்க்கை

உலகில் ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் 70 ஆண்டுகள்.

பாலிய வயது முதல், பருவ வயது வரை:
முதல் 20 வருடங்கள் வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் விளையாட்டாக ஓடிவிடும்.

வாழ்வின் கடைசி 20 வருடங்கள்:
நாம் வாழ்ந்தும் பயனில்லை, வீட்டில் இருக்கும் கதிரை, மேசை, போல் நாமும் ஒரு பழைய பொருள் ஆகி விடுவோம்.

20+20= 40 போக, மீதி இருப்பது 30 வருடங்கள்.

அந்த 30 இல் 10 வருடங்கள்:

குறைந்த பட்சம் தினசரி 8 மணி நேரம் தூங்கி விடுகிறோம்.

மீதி இருப்பது: 20 வருடங்கள்.

இதில் வேலை, வியாபாரம் என்று பணம் சம்பாதிப்பதற்காக 12 மணிநேரம் உழைக்கிறோம். அதில் 10 வருடங்கள் போய் விடுகிறன.

மீதி இருப்பதோ 10 வருடங்கள்.

இதில், மனைவியோடு பிரச்சனைகள், குழந்தைகளோடு பிரச்சினைகள், உடல் நல குறைபாடுகள் என 2 வருடங்கள் போய் விடும்.

மீதி இருப்பது வெறும் 8 வருடங்கள்.

அதாவது 2922 நாட்கள். இவ்வளவுதான் வாழ்க்கை!

நமது மன திருப்திக்காக, இந்த 2922 நாட்களை வேண்டுமானால்
சுமாராக 3000 நாட்கள் என வைத்துக் கொள்ளலாம்.

நாம் இந்த உலகத்தில் எந்தவித பிரச்னைகளும் இல்லாமல் ஒரளவு நிம்மதியாக வாழக்கூடிய நாட்கள், வெறும் 3000 நாட்கள் மட்டும் தான்.

இந்த 3000 நாட்கள் வாழ்வதற்கு:

மனம் நிறைய வெறுப்பு, கோபம், துரோகம், வன்மம், வன்முறை, வஞ்சகம், அகங்காரம், தலைக்கனம், ஏளனம், சந்தேகம் என எத்தனையோ எதிர்மறை குணங்களோடு மட்டும் ஏன் நாம் வாழ வேண்டும்?

வாழ்க்கையில் இவற்றை பின்பற்றலாமே?

அன்பு, கருணை, இரக்கம், பாசம், அமைதி, நட்பு, நம்பிக்கை, காதல், இயற்கை, உதவி, புன்னகை, கனிவு, குழந்தை, பாராட்டு, விட்டுக்கொடுத்தல், இறை பக்தி, குடும்பம், தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, சந்தோஷம் என எத்தனையோ
நேரான விடயங்கள் இருக்கின்றனவே. இவற்றை பின்பற்றலாமே.

நெருப்பு தன்னைச்சுற்றி இருக்கின்ற எல்லாவற்றையும் எரித்துவிடும்.

தண்ணீர் தன்னைச்சுற்றி இருக்கின்ற எல்லாவற்றையும் குளிர வைக்கும்.

அது நெருப்பாகவே இருந்தாலும் கூட, ஒருபோதும் நம் வாழ்வில் நெருப்பை உமிழாமல், எப்போதுமே நம் மனதை தண்ணீர்போல் வைத்து இருப்போம்.

நன்றி: முகநூல் பதிவு

கரப்பான்பூச்சி கோட்பாடு

ஒரு உணவகத்தில் கரப்பான் பூச்சி ஒன்று எங்கிருந்தோ பறந்து வந்து ஒரு பெண் மீது அமர்ந்து கொண்டது. உடனே அந்தப் பெண் பயத்தில் கூச்சலிட ஆரம்பித்தார். மிகவும் கடினமாக, அந்தக் கரப்பானை அவர் மீதிருந்து விலக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். அதுவரை அமைதியாக இருந்த அவருடன் வந்தவர்களுக்கும் இப்பொழுது அந்த பதற்றம் தொற்றிக் கொண்டது.
கரப்பான்பூச்சி கோட்பாடு
கரப்பான்பூச்சி கோட்பாடு

ஒருவாறாக, அவர் அந்த கரப்பானை தன் மீதிருந்து விலக்கி விட்டார். ஆனால் அந்த கரப்பான் இப்பொழுது வேறொரு பெண் மீது சென்று அமர்ந்து கொண்டது. இப்பொழுது இந்தப் பெண் அதே போல் கூச்சலிட ஆரம்பித்தார். அமைதியாக இருந்த மொத்த உணவகமும் இப்பொழுது அமைதியிழந்து காணப்பட்டது.

இதை பார்த்துக் கொண்டிருந்த பணியாளர் சூழ்நிலையை சரி செய்ய விரைந்தார். இந்த முறை கரப்பான்பூச்சி, பறந்து சென்று அந்த பணியாளர் மீது அமர்ந்து கொண்டது. பணியாளர் தன்னை நிதானித்துக் கொண்டு தன் சட்டையின் மீது அமர்ந்திருக்கும் கரப்பானின் நடத்தையை கவனித்தார். அது தன் நகர்தலை நிறுத்தியதும், தன் விரல்களால் அதை பிடித்து உணவகத்திற்கு வெளியே வீசியெறிந்தார்.

நான் என் காபியைப் பருகிக் கொண்டே இதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் மனது இந்த நிகழ்ச்சியிலிருந்து சில கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தது. அவர்களின் அந்த நடத்தைக்கு கரப்பான்பூச்சி தான் காரணமா? அப்படியெனில் அந்தப் பணியாளர் ஏன் அதன் மூலம் அமைதி இழக்கவில்லை? அவர் மட்டும் எந்த ஆரவாரமுமின்றி அதை நேர்த்தியாகக் கையாண்டார். எனவே அந்த பெண்களின் நடத்தைக்கு கரப்பான் பூச்சி காரணம் அல்ல. அந்த கரப்பான்பூச்சி ஏற்படுத்தும் தொந்தரவைக் கையாள முடியாத அவர்களின் இயலாமை தான் அவர்களின் அந்த நடத்தைக்குக் காரணம்.

இதன் மூலம் நான் உணர்ந்தது என்னவெனில், என் தந்தை அல்லது மனைவி அல்லது முதலாளியின் கடுமையான பேச்சு என்னை அமைதியிழக்கச் செய்யவில்லை, அந்த வாக்குவாதத்தை கையாள முடியாத என் இயலாமை தான் என்னைத் தொந்தரவு செய்கிறது. என் அமைதியை குலைக்கிறது. சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசல்கள் என்னை தொந்தரவு செய்யவில்லை.

ஆனால், அந்த நெரிசல்களைக் கையாள முடியாத என் இயலாமை தான் என்னைத் தொந்தரவு செய்கிறது.

என் வாழ்வில் எந்தவொரு குழப்பத்தையும் எந்தவொரு சிக்கலும் உருவாக்குவதில்லை, அந்த குழப்பங்களுக்கு நான் செய்யும் எதிர்வினைகள் தான் சிக்கல்களை உருவாக்குகிறது. இதன் மூலம் நான் கற்றது வாழ்வில் நான் எதிர்வினை ஆற்றக் கூடாது, பதிலளிக்க வேண்டும். நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு நடக்கும் நிகழ்ச்சிகள் நம்மிடம் உள்ள அனைத்தையும் பறிக்கக் கூடும் ஒன்றைத் தவிர. அது தான் ஒரு சூழ்நிலைக்கு நாம் எவ்வாறு பதிலளிக்கிறோம் என்பதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம். வாழ்வில் நமக்கு நடக்கும் விஷயங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அதற்கு நாம் எப்படி பதிலளிக்கிறோம் என்பதை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.

இந்தக் கதையை ஆழ்ந்து வாசித்து பயன்படுத்தினால், நீங்கள் இருக்கும் இடத்திலேயே வாழ்க்கையை கொண்டாட துவங்குவீர்கள்! நம் வெற்றியும், தோல்வியும் நம் கைகளில் தான் என்பதை உணர்வீர்கள்! வெற்றி, தோல்விகளை விட வாழ்க்கையை அனுபவித்து வாழக் கற்றுக் கொள்வீர்கள்!

நன்றி: முகநூல் பதிவு

ஏழு உலக அதிசயங்கள்

பாடசாலை வகுப்பு ஒன்றில் தற்போதைய ஏழு உலக அதிசயங்களையும் பட்டியலிடுமாறு ஆசிரியர் கேட்டிருந்தார். மாணவர்கள் பின்வருவம் 7 உலக அதிசயங்களையும் பட்டியலிட்டு இருந்தனர். ஆனாலும், எவை என்பதில் கருத்து முரண்பாடுகள் இருந்தன. பின்வரும் ஏழு அதிசங்கள் பட்டியலிடப்பட்டு வாக்களிப்புக்கு விடப்பட இருந்தன.

ஏழு உலக அதிசயங்கள்

  1. எகிப்தின் பிரமிடுகள்
  2. தாஜ்மகால்
  3. பெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கு, ஐக்கிய அமெரிக்கா
  4. பனாமா கால்வாய்
  5. எம்பயர் ஸ்டேட் கட்டடம், ஐக்கிய அமெரிக்கா
  6. புனித பேருது பசிலிக்கா தேவாலயம், வத்திக்கான்
  7. சீனப் பெருஞ்சுவர்


வாக்களிப்பு நடத்த முன், ஒரு மாணவர் மட்டும் பட்டியலை முடிவு செய்யாமல் இருப்பதை அவதானித்த ஆசிரியர், குறித்த மாணவரிடம் பட்டியலிடுவதில் சிக்கல் உள்ளதான என வினவினார், அம்மாணவர் "ஆம், பல இருப்பதால் எதை சேர்ப்பது விடுவது என்ற குழப்பம் இருக்கின்றது" என்றார். ஆசிரியர் "பரவாயில்லை, உன் பட்டியலை எங்களுக்குச் சொல், நாங்கள் உதவி செய்வோம்" என்றார். தயக்கத்துடன் அம்மாணவர் பின்வருவனவற்றை சொல்லத் தொடங்கினார்.
  1. பார்த்தல்
  2. கேட்டல்
  3. தொடுதல்
  4. உணர்தல்
  5. சுவைத்தல்
  6. மணத்தல்
  7. அன்பு செய்தல்

அந்த வகுப்பறையில் குண்டூசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் அளவிற்கு அமைதி நிலவியது.

நாம் சாதாரணமாகவும் வழமையானதாகவும் காணும் விடயங்கள் உண்மையில் அதிசயங்கள். மிகவும் விலைமதிக்க முடியாதவற்றை மனிதனால் உருவாகக் முடியாது.

மானம்

மானம் மிக முக்கியமான பண்புகளில் ஒன்று. மானமே வாழ்வின் உயிர் நிலையெனக் கொண்டு வாழ்ந்தவர் தமிழர். மானமானது தன் நிலையில் தாழாமையும் தாழ்வு வந்தபோது உயிர் வாழாமையும் ஆகும். ஒவ்வொருவர்க்கும் சிற்சில தகுதிகள், கடமைகள் உள்ளன. அவை அவர் பிறந்த குடிப்பிறப்பால், மேற்கொண்ட பொறுப்புகளால் கற்ற கல்வியால் ஏற்பட்ட தகுதிகளாகும். எத்தகைய துன்பம் ஏற்பட்ட போதும் அத்தகுதியிலிருந்து தாழ்தல் கூடாது. உயிரினும் மானம் சிறந்தது. மானம் இழந்தால் உயிர் வாழலாம்; அன்றி உயிர் இழந்தால் மானத்தைக் காக்கலாம் என்ற நிலைமை ஏற்பட்டபோது உயிரைக் கொடுத்தேனும் மானத்தைக் காக்க வேண்டும். ‘மானம் அழிந்தபின் வாழாமை முன் இனிதே’ என்பது தமிழ்நெறி.

மானம்

திருக்குறள்: வள்ளுவர் கூறிய மானம்

மானத்தின் பெருமையை வள்ளுவர் சிறந்த முறையில் எடுத்து விளக்கியுள்ளார். பெற்ற தாயும் உற்ற மனைவியும் அன்புக் குழந்தைகளும் பசியால் துடிக்கும்போது எத்தகைய இழி செயல் புரிந்தேனும் அவர்களைக் காக்கலாம் என்று அறநூல்கள் கூறும். ஆனால் தமிழ்ப் பண்பாட்டு முறையில் அறத்தை வலியுறுத்திய வள்ளுவப் பெருந்தகையாரோ,

“ஈன்றாள் பசிகாண் பானாயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.”

“இன்றி யமையாச் சிறப்பின வாயினும்
குன்ற வருப விடல்”


என எந்த நிலையிலும் பழிச் செயல் புரிய முற்படலாகாது என்று வற்புறுத்துவதன் வாயிலாக மானத்தின் உயர்வை அறிவுறுத்தியுள்ளார். ‘பெற்ற தாய் பசியால் துடிக்கக் கண்டாலும் சான்றோர் பழிக்கும் மானம் இழந்த செயலைச் செய்து அவளை வாழ வைக்க முற்படலாகாது’ என்றும், ‘ஒரு செயல் எவ்வளவு இன்றியமையாதது ஆயினும் அதனைச் செய்தால் தன்னுடைய மானத்தை இழக்கும் நிலை ஏற்படுமானால் அதனைச் செய்யா தொழிக’ என்றும் வள்ளுவர் பணித்துள்ளார்.

மான வீரம்

இங்ஙனம் பழிச் செயல் புரியாமல் மானம் காக்கும் நெறியில் மற்றையவரினும மேம்பட்டு நிற்கும் நிலையே மான வீரமாகும். கவரிமான் என்பது ஒரு வகை மான். அது தன் உடலிலிருந்து ஒரு மயிர் உதிரப் பெற்றாலும் அதனைப் பொறாது உயிர் விடுமாம். ஆகவே வள்ளுவர் மான வீரத்துக்கு அதனை உவமையாக எடுத்துக் கொண்டார்.

“மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம்வரின்”

என்பது அவர் வாக்கு. மானத்தை இழக்கக்கூடிய நிலை ஏற்படும் போது மானமே பெரிதென மதிப்பவர் தம் உயிரைப் பொருட்படுத்த மாட்டார். ‘ஆறிலும் சாவு நூறிலும் சாவு’ என்பது பழமொழி. ஆனால் மானமோ என்றும் அழியாதது. அழியக்கூடிய வாழ்வை விரும்பி என்றும் அழியாத மானத்தைத் துறக்க முற்படாதவரே சான்றோராவர். இத்தகைய மான வீரம் வாய்ந்தவர்களில் சிறப்பாக மதிக்கத்தக்கவன் சேரமான் கணைக்கால் இரும்பொறை என்ற மன்னனாவான். அவனுடைய மான வீரத்தை இங்கு காண்போம்.

குறிப்பு: மின்னஞ்சல் குழுவின் மூலம் பெறப்பட்ட இவ்வாக்கம், இதன் சிறப்புக் கருதி மீள் பதிப்பிடப்படுகின்றது.

வாழ்க்கைத் தத்துவம்

மனித வாழ்க்கை விடை காண முடியாத பல கேள்வி முடிச்சுக்களைக் கொண்டது. அதனால்தான் என்னவோ வாழ்க்கைத் தத்துவம் நமக்கு அடிக்கடி தேவைப்படுகிறது. சிலபேரைப் பார்த்தீர்கள் என்றால், அவர்கள் வாழ்க்கை மிகவும் இலகுவாகச் செல்லும். அவர்கள் அதிகம் கல்வி கற்றிருக்க மாட்டார்கள். அதிக பணம் கிடைக்கும் வேலை இல்லை. ஒரு சாதாரண நபராகவே வாழ்வார். சிலவேளைகளில் அவர்களின் வாழ்க்கை நமக்குப் பிடித்திருக்கும். இந்த அலைச்சலான வாழ்க்கையைவிட, அந்த இலகுவான வாழ்கையை நாம் விரும்பலாம்.

வாழ்க்கைத் தத்துவம்
வாழ்க்கைத் தத்துவம்

இந்தப் படத்தைப் பாருங்கள். கோணலாகிப் போன ஆணிகள் விடப்பட்டு நேரான ஆணி மட்டுமே அடிவாங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் பயனுள்ளவரானால் கட்டாயம் உலகம் உங்களை உபயோகப்படுத்தும். ஆகவே, உங்களுக்கு சுமையும் அழுத்தங்களும் அதிகரிக்கும். உபயோகம் இல்லை என்றால் காசிகூட காட்சிப் பொருள்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். காய் உள்ள மரத்திற்குத்தானே கல்லடிபடும்.

இன்னுமொரு கோணத்தில் இதைப் பார்த்தால், நேரான நபர்தான் இன்றைய உலகிற்குத் தேவை. உங்களைத்தான் இந்த உலகம் தேடிக் கொண்டிருக்கிறது. ஆகவே, சுத்தியல் அடிபோல் வலிகள் உங்கள் மேல் இறங்கத்தான் செய்யும். உங்கள் நேர்மைதான் உங்களை வாழ வைக்கிறது. கோணலான மனிதர்கள் தங்களுக்கு சுமை இல்லையே என மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால், ஒரு பெட்டியை உருவாக்கவோ அல்லது வேறு ஏதாவது முக்கிய பொருளை உருவாக்கவோ நேரன ஆணி போன்ற நபர் கட்டாயம் தேவை. இதுதான் வாழ்க்கைத் தத்துவம்.

சேரமான் கணைக்கால் இரும்பொறை

சேரமான் கணைக்கால் இரும்பொறை சேர மன்னர்களில் ஒருவர். இவர் சேர மன்னர்களில் இரும்பொறை என்ற மரபினரைச் சேர்ந்தவர். இரும்பொறையினர் தொண்டி என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு சேர நாட்டின் ஒருபகுதியை ஆண்டு வந்தனர். இவர்களில் கணைக்கால் இரும்பொறை என்னும் மன்னன் ஒருவன் சிறப்புற்று விளங்கினான். அவன் அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் ஆகிய அரசருக்குரிய அருங்குணங்கள் பலவற்றையும் கொண்டிருந்தார். வீரமும், ஈரமும் வாய்ந்தவனாகவும் விளங்கினார். கணைக்கால் இரும்பொறை வேந்தனாக விளங்கியதுடன் செந்தமிழ்க் கவிஞராகவும் திகழ்ந்தார். சங்கப் புலவர்களில் ஒருவராகிய பொய்கையார் என்னும் புலவரிடம் கற்று இனிய தமிழ்ப் பாடல்களை இயற்றும் ஆற்றல் வாய்ந்தவனாகவும் அவன் விளங்கினார்.

சேரமான் கணைக்கால் இரும்பொறை

சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் அக்காலத்தில் சோழ நாட்டை ஆண்ட பெருவேந்தன் கோச்செங்கணானுக்கும் உள்ளூரப் பகைமை இருந்தது. கோச்செங்கணான் ஒப்புயர்வற்ற பெருவீரம் கொண்ட சிறந்த சிவ பக்தர். ‘எண்டோள் ஈசர்க்கு எழில்மாடம் எழுபது செய்து உலகம் ஆண்டவன்’ என்று புகழ் பெற்றவன். தமிழ் மொழியினிடத்தும், தமிழ்ப் புலவர்களிடத்தும் தணியாத வேட்கை கொண்டவர். இவ்விருவர்க்கும் ஏற்பட்ட பகையுணர்ச்சி நாளடைவில் வளர்ந்து பெருகிச் சிறு பொறியே பெருந்தீயானது போலப் பெரும் போராய் மூண்டது. இரு வேந்தரும் தம் பெரும் படைகளுடன் திருப்போர்ப்புறம் என்னும் இடத்தில் சந்தித்தனர். போர் தொடங்கியது. முடிவில் சேரர் படை தோல்வியடைந்தது. செங்கணான் இரும்பொறையைச் சிறைப்படுத்தினார்.


செங்கணான் சிறைப்பட்ட சேர வேந்தனைக் குடவாயிற் கோட்டம் என்னும் இடத்தில் சிறை வைத்தார். மானமே பெரிதென மதிக்கும் மன்னனாகிய இரும்பொறை தனக்கு ஏற்பட்ட அவமானத்தை எண்ணி எண்ணி அகம் வருந்தினார். செங்கோல் ஏந்தும் கையில் சங்கிலியைப் பிணைத்து இழுத்து வரப்பெற்ற தன் இழிவை நினைத்து உள்ளம் குமுறினார். போர்க்களத்திலேயே மாண்டு மடிந்திருந்தால் இந்த அவலநிலை ஏற்பட்டிராதன்றோ என்று ஏங்கினார். தனக்கு நேர்ந்த இந்த அவமானம் தன்னோடொழியாது சேரர் பரம்பரைக்கே பேரவமானமாக நிலைத்து விட்டதே என்று கலங்கினார். இத்தகைய மான உணர்ச்சியால் உணவும் உண்ணாமல் உறங்கவும் செய்யாமல் உள்ளமும் உடலும் சோர்ந்து கிடந்தார்.

கவலையாலும் பசியாலும் வாடிக் கிடந்த கணைக்கால் இரும்பொறைக்குக் களைப்பு மேலிட்டது. கண்கள் இருண்டன. நா உலர்ந்தது. தாங்க முடியாத நீர் வேட்கை உண்டாயிற்று. அதனால் அவன் நிலைகுலைந்து அச்சிறைக் காவலனை நோக்கிச் சிறிது நீர் கொணருமாறு பணித்தார். அச்சிறைக் காவலன் செருக்கு மிக்கவன். உணவுண்ணாமல் வாடிக் கிடக்கும் மன்னன் நிலைகண்டு மனம் பதறாமல் வாளா இருந்தான். நெடுநேரமாகியும் அவன் நீர் கொண்டு வந்து தரவில்லை. சிறைக்காவலன் கூட அவரை அலட்சியமாகக் கருதினான். இதனை நினைத்து நெஞ்சு புழுங்கினார் இரும்பொறை. சேர வேந்தன் இவ்வாறு சிந்தை நொந்து துடிக்கும் போது, வெந்த புண்ணில் வேல் நுழைத்தலைப் போல அச்சிறைக் காவலன் நீண்டநேரம் கழித்து ஒரு பாத்திரத்தில் சிறிது நீரைக் கொண்டு வந்து இடக்கையால் அலட்சியமாக வைத்துச் சென்றான்.

இதைக் கண்ட இரும்பொறையின் கண்கள் சிவந்தன. சினத்தால் அவர் உடல் நடுங்கியது. சிறைப்பட்ட அவன் சினம் யாரை என்ன செய்யும்? என்றாலும் தனக்கு ஏற்பட்ட பேரவமானத்தை அவரால் தாங்கமுடியவில்லை. “ஆ! என்னே என் இழிநிலை! போர்க்களத்தில் வீரப்போர் புரிந்து இறத்தலே எம் போன்ற வேந்தர்க்கு அழகு! அங்ஙனம் இன்றி நோய் முதலியவற்றால் இறந்தாலும் அவர்களும் போர்க்களத்தில் இறந்ததற்கு அறிகுறியாக அவர்கள் உடலை வாளால் பிளந்து அடக்கம் செய்வது மன்னர் குல மரபன்றோ? குழந்தை பிறந்து இறந்தாலும், உருவமற்ற மாமிசப் பிண்டமாகப் பிறந்தாலும் அவற்றையும் வாளால் பிளந்து அடக்கம் செய்வதில் தவற மாட்டார்களே! அத்தகைய மன்னர் பரம்பரையில் என்னைப் போல இழிந்தவன் ஒருவன் பிறக்கலாமோ? போர்க்களத்தில் பகைவன் வாளால் பிளக்கப்படாமல் சிறைப்பட்டேனே! நாயைச் சங்கிலியால் கட்டி இழுத்து வருவது போல இழுத்து வந்து இச்சிறையில் தள்ளித் துன்புறுத்தியும் நான் சாகாமல் வாழ்கிறேனே! உண்ணாமல் உயிர் விடத் துணிந்த நான் இவ்வற்பனிடம் இந்நீரை யாசிக்கக்கூடாது என்ற மனவுறுதியில்லாமல் நீரைக் கேட்டு மானம் இழந்தேனே! இங்ஙனம் மானம் இழந்தும் நான் உயிர் வாழலாமோ?” என்று அனலிடைப்பட்ட புழுவெனத் துடித்தார் இரும்பொறை.

அதனால் சேர மன்னன் சிறைக்காவலன் கொண்டு வந்து வைத்த நீரைப் பருகாமல் உயிர்விடத் துணிந்தார். தன் உள்ளக் குமுறலை அழகிய செந்தமிழ்ப் பாடலாக ஓர் ஓலையில் வடித்து வைத்தார். புறநானூறு குறிப்பிடும் அப்பாடல் பின்வருமாறு:

“குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆளன்று என்று வாளில் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்திரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத் தீத்தணியத்
தாமிரந் துண்ணும் அளவை
ஈன்மரோ இவ்வலகத் தானே”

நெஞ்சம் உருக்கும் இப்பைந்தமிழ்ப் பாடலைப் பாடிய இரும்பொறை, மானம் இழந்து வாழ்ந்தார் என்பதைவிடத் தன் மானத்தைக் காக்க உயிரையே துறந்தார்.

சிறையில் சேர வேந்தன் இறந்தது அறியாத செந்தமிழ்ப் புலவர் பொய்கையார் அவனைச் சிறை விடுவிக்க முயன்றார். சேரனின் அருமை பெருமைகளைச் சோழனுக்கு உணர்த்தி அவர்களிடையே ஒற்றுமையை வளர்க்க அரும்பாடுபட்டார். “களவழி நாற்பது” என்னும் சிறந்த நூல் ஒன்றினை இயற்றிச் செங்கணான் அவையில் அரங்கேற்றினார். அந்நூல் இரும்பொறையுடன் அவர் நடத்திய பெரும்போரில் அப்போர்க்களம் வழங்கிய கோரக் காட்சியைச் சித்திரிப்பதாகும். அதன் உட்பொருளை உணர்ந்த செங்கணான் தன்னால் விளைந்த பேரழிவினை எண்ணித் துன்புற்றார். தனக்கு அறிவுரை அளித்த புலவர் பொய்கையாரைப் பணிந்து, “புலவர் ஏறே! உங்கள் பொருள் மொழியால் நான் உண்மையை உணர்ந்தேன். மனம் தெளிந்தேன். இனிப் போர் புரியேன். எனக்கு தக்க சமயத்தில் இவ்வறிவுரை கூறிய தங்களுக்கு என்ன கைமாறு செய்வேன்?” என்று கூறினார்.

பொய்கையார், “வேந்தர் வேந்தே! உன் தெளிந்த உள்ளத்தைக் கண்டு உவக்கிறேன். நான் வேண்டுவன பொருளும் பொன்னும் போகமும் அல்ல. உன் அருளை வேண்டுகிறேன். இரும்பொறை என் செந்தமிழ் மாணவன். அவனைச் சிறையிலிருந்து விடுவித்து நீங்கள் இருவரும் ஒன்றிவாழ வேண்டும் என்பதே நான் விரும்பும் பரிசில்” என்றார்.

அவ்வுரை கேட்ட செங்கணான், “ஆ! சேரமன்னன் தங்கள் மாணவரா? தமிழறிந்த அவ்வேந்தரைச் சிறைப்படுத்தியது தமிழையே சிறைப்படுத்தியதாகும். வாருங்கள் இப்போதே அவரைச் சிறைவிடுத்து மன்னிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.” என்று கூறிப் புலவருடன் குடவாயிற் கோட்டம் சென்றார். ஆனால் அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களைப் பெரும் துன்பத்தில் ஆழ்த்தியது. இறந்து கிடந்தார் இரும்பொறை. அவர் எழுதி வைத்த பாடல் அவனுடைய மான வீரத்தை விளக்கி நின்றது. போரிலே வென்ற தன்னை இரும்பொறை மானத்திலே வென்று விட்டதறிந்து செங்கணான் கண்ணீர் சொரிந்தார். ஒப்பற்ற தமிழ்ப் புலவனான அவனைக் கொன்ற குற்றம் தன்னோடொழியாது சோழ பரம்பரைக்கே அழியாத களங்கமாய் நிலைத்து விட்டதை எண்ணி நாணினார். தன் பிழையை மன்னிக்குமாறு பொய்கையாரை வேண்டினார்.

பொய்கையார் செங்கணானை நோக்கி, “மானம் இழந்து உயிர்வாழ விரும்பாத இரும்பொறையின் செயல் மன்னர் பரம்பரைக்கே பெருமையளிப்பதாகும். இவன் மரணத்தால் தமிழ் வேந்தர்களாகிய நீங்கள் ஓர் உண்மையை உணர்தல் வேண்டும். இனியேனும் நீங்கள் உங்களுக்குள் பகைமை கொண்டு போர் புரியாமல் ஒற்றுமையோடு வாழ்ந்து தமிழ் நாட்டைப் பெருமைப் படுத்துவீர்களாக,” என்று அறிவுரை கூறித் தேற்றினார்.

வாழ்க்கையின் கையிருப்பு

வாழ்க்கையின் கையிருப்பு

வாழ்க்கையின் கையிருப்பு

நமது பிறப்பு ஆரம்பக் கையிருப்பு.
நமது இறப்பு முடிவுக் கையிருப்பு.
சார்புப் பார்வை நம் சட்டக்கட்டுப்பாடு.
திறனுள்ள சிந்தனைகள் எம் சொத்துக்கள்.
இதயம் நமது நடப்புச் சொத்து.
ஆன்மா அசையாச் சொத்து.
மூளை எமது நிலையாக வைப்பு.
சிந்தனை நடப்புக் கணக்கு.
சாதனைகள் நமது முதலீடு.
குணவியல்பும் நெறிமுறையும் நம்முடைய கையிருப்புப் பொருள்.
நண்பர்கள் நமது பொது சேமிப்பு.
பண்பும் நடத்தையும் நமது நல்லெண்ணம்.
பொறுமை எமது சம்பாதித்த வட்டி.
அன்பு நமது பங்கீடு.
பிள்ளைகள் மிகையூதிய பலன்.
கல்வி எம் வணிக குறியீடு.
அறிவு நம்முடைய மூலதனம்.
அனுபவம் எம்முடைய உயர் மதிப்புத் தொகை.
இலக்கு என்பது கையிருப்பு குறிப்பை சரியாக கணக்கிடுதல்.
குறிக்கோள் என்பது சிறப்பாக அறிமுகப்படுத்தப்பட்ட கணக்கு விருதைப் பெறுவது.

ஜப்பானியரின் ஒழுக்கமும் கடமையுணர்ச்சியும்

2018 ஆம் ஆண்டு உதைபந்தாட்ட இரசிகர்களுக்கு முக்கியமான ஆண்டு. ஏனெனில் 2018 யூன்-யூலை மாதங்களில் உலகக்கோப்பை கால்பந்து போட்டி இடம் பெற்றது. நீண்ட போட்டிகளின் பின் 32 அணிகள் மாத்திரம் இப்போட்டிகளுக்குத் தெரிவாகின. உலகக்கோப்பையைக் கைப்பற்றுவது யார் என்ற போட்டியும் எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருந்தன. ஜப்பானும் இதில் கலந்து கொண்டிருந்தது.

ஜப்பானியரின் ஒழுக்கமும் கடமையுணர்ச்சியும்

ஆட்டமிழப்பு நிலைப் போட்டியின்போது ஜப்பான் அணி 2-3 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வியுற்று வெளியேறியது. ஜப்பான் அணி கால்பந்து வீரர்களுக்கும், ஜப்பான் அணி இரசிகர்களுக்கும் பாரிய ஏமாற்றம். பலர் கண்ணீருடன் காணப்பட்டனர். நிச்சயமாக வேற எந்த செயலைச் செய்யவும் அவர்களுக்கு மணம் வந்திருக்காது.

ஜப்பான் அணியினர் உடையை மாற்றிவிட்டு, அங்கிருந்து கிளம்பிவிட்டனர். உடை மாற்றும் அறைக்குச் சென்ற உலகக்கோப்பை ஏற்பாட்டாளர்களுக்கு அதிர்ச்சியாகவிருந்தது. உடை மாற்றும் அறை மிகவும் நன்றாகச் சுத்தம் செய்யப்பட்டு, “நன்றி” என்று எழுதப்பட்ட ஓர் அட்டை அங்கு வைக்கப்பட்டு இருந்தது. அவ்வளவு பெரிய தோல்வியின் பின்னரும், அங்கிருந்த விளையாட்டு வீரர்களின் கடமையுணர்ச்சி குறையவில்லை. அவர்களின் ஒழுக்கமான வாழ்க்கை முறையும் தழும்பவில்லை.


அத்தோடு ஜப்பானியர்களின் ஒழுக்கமும் கடமையுணர்ச்சியும் நின்றுவிடவில்லை. விளையாட்டரங்கில் போட்டியைக் காண வந்த ஜப்பானிய இரசிகர்கள் போட்டி முடிந்த பின்னர் அங்கு கைவிடப்பட்டிருந்த குப்பைகளைச் சேகரித்து விளையாட்டரங்கை சுத்தப்படுத்தியதைக் காண முடிந்தது. ஏன் நமக்கு இந்த வீண் வேலை என்று செல்லும் இன்றைய உலகில், தோல்வியின் பின்னரும் ஒழுக்கம், கடமையுணர்ச்சி ஆகியவற்றைக் கைவிடாத ஜப்பானியர்கள் மிகவும் பாராட்டுக்குரியவர்கள்.

மேலும், குழு நிலை ஆட்டத்தில் ஜப்பானுக்கும் செனகல் நாட்டிற்கும் ஒரே அளவான புள்ளிகள்தான் இருந்தன. ஆனால் ஜப்பான் அடுத்த சுற்றிற்குத் தெரிவாகக் காரணம் அவர்கள் அதிகம் முறை தவறிய ஆட்டம் (foul) ஆடியிருக்கவில்லை. செனகல் அதிகமாக முறை தவறிய ஆடியதால் அடுத்த சுற்றிற்குச் செல்ல முடியாமல் தோற்றுவிட்டது.

ஜப்பானியர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள பலவிடயங்கள் உள்ளன. அதில் ஒழுக்கமும் கடமையுணர்ச்சியும்கூட உள்ளடங்குகின்றன.