இலங்கைச் சிக்கல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கைச் சிக்கல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கொழும்பு தாமரைக் கோபுரமும் தமிழும்

இலங்கையில் தமிழ் மொழியை மிக மோசமாக எழுதும் பழக்கம் அரசு மட்டத்தில் நெடுநாளகத் தொடர்கிறது. தமிழுக்கு தேசிய மொழிச் சிறப்பு, அரச கரும மொழி, மொழிக்கான அமைச்சரவை என வெளிப்படையாகக் காட்டிக் கொண்டாலும், அம்மொழியை மிக மோசமான எழுதும்  பழக்கம் இன்னும் மறையவில்லை. 

இதன் உச்சகட்டம் கொழும்பு தாமரைக் கோபுர வளாகத்திலும் தொடர்கிறது. கொழும்பு தாமரைக் கோபுரம் வெளிநாட்டவர்களினதும் உள்நாட்டவர்களினும் கவனத்தை ஈர்க்கும் இடம். கொழுப்பில் உள்ள மிக முக்கிய கட்டங்களில் ஒன்று. தென் ஆசியாவிலும் உலகிலும் உயரமான கட்டடம் என்ற வகையில் இதற்கு முக்கியத்துவம் உண்டு. அவ்வாறாதனதொரு முக்கியத்துவம் உள்ள இடத்தில் தமிழை சிறுபிள்ளைத்தனமாக எழுதியுள்ளனர். 

kolumbu thamaraik kopuram
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.

இங்குள்ள தமிழ், தமிழ்பேசும் அரசியல்வாதிகளும் தமிழ் அறிஞர்களும் தமிழ் ஊடகங்களும் கண்டுகொண்டனவா என்று தெரியவில்லை. ஆனால் இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் உள்ள இடத்தில் தமிழ் பிழைகளுடன் உள்ளது. பாடசாலை மாணவர்களை இதுபோன்ற இடங்களுக்கு கொண்டு சென்றால், தயவுசெய்வு அவர்கள் இதுபோன்ற பிழைகளை கற்காது காத்துத்கொள்ளுங்கள். 

ஒற்றுப்பிழை, சந்திப்பிழை என்பதற்கப்பால் இங்குள்ள பிழைகளும் அவை எவ்வாறு எழுதப்பட வேண்டும் என்ற முறையும் இங்கு தரப்பட்டுள்ளது. 

பிழை

சரி

கருத்துருலின் பிரகாரம்

கருத்துருவின் பிரகாரம்

மணிக்குவரும்

மணி

சுபவேனையில்

சுபவேளையில்

20 ஆந்

20 ஆம்

இங்குள்ள படம் பொது உரிமத்தின் கீழ் பதிவேற்றப்பட்டுள்ளது. விரும்பியவர்கள் தாராளமாக பயன்படுத்தலாம். விக்கிப்பீடியா உள்ளிட்ட இடங்களில் பதிவேற்றி இலங்கை அரசின் தமிழ் மொழி மீதான காழ்ப்புணர்வை உலகறியச் செய்யுங்கள்.

வாழ்க தமிழ்!

குழப்பம் மிகுந்த இலங்கை ஆட்சி

எப்போதுமே குழப்பம் மிகுந்த ஆட்சியையே இலங்கை கொண்டிருந்துவருகின்றது. முக்கிய உதாரணம் இங்கேயுள்ளது.

பண்டைய இலங்கையை ஆண்ட மன்னர்கள் சுமார் 194 பேர். இதில் 19 பேர் தமிழ் மன்னர்கள். சிங்கள மன்னர்கள் 175 பேர்.

அந்த சிங்கள மன்னர்கள் 175 பே ரும் ஆட்சிக்கு வந்தவிதம் இப்படியானது.

  • 60 யுவராஜாக்கள் மன்னரை கொன்று மன்னரானவர்கள்
  • 53 சகோதரர்கள் மன்னரை கொன்று மன்னரானவர்கள்
  • 30 படைத்தளபதிகள் மன்னரை கொன்று மன்னரானவர்கள்
  • 5 தனயன்கள்  மன்னரை கொன்று மன்னரானவர்கள்
  • 1 இராணி மன்னரை கொன்று மகாராணியானாள்
  • 1 வாயில் காப்போன் மன்னரை கொன்று மன்னரானான்

25 பேர் மட்டுமே தெரிவு செய்யப்பட்ட மன்னர்கள்.


இலங்கை பொருளாதாரச் சிக்கல்கள்

இலங்கை பொளுளாதாரச் சிக்கல்கள் தொடர்பில் வெளிவந்த பதிவு. ஆனால் இது அணைத்துலக பொளுளாதாரச் சிக்கல்களுக்கும் பொருந்தும்.

நாங்கள் விடும் தவறுகளை நாங்களே இனம் கண்டு திருந்திக் கொண்டால் நாடும் தானாக திருந்தும் என நான் நம்புகின்றேன்.

'கோடா கோ ஹோம்' என கோசம் எழுப்பும் அதிகமானோர் நினைத்துக் கொண்டிருப்பது, நாட்டின் இந்த நிலைக்குக் காரணம் கோட்டா தான் என்று.

இலங்கை பொருளாதாரச் சிக்கல்கள்

இலங்கை பொருளாதாரச் சிக்கல்கள்

என்றாலும் அவர்களோடு சேர்த்து இதற்கு வகை கூறவேண்டிய இன்னும் சில தரத்தவரும் இருக்கின்றனர்.

அவர்கள் யார்?

இவ்வளவு காலமும் தனது வயிற்றுப் பசியை மாத்திரம் கருத்திற்கொண்டு தேர்தல் காலங்களில் வழங்கும் சாராய போத்தலுக்கும் உணவுப் பொதிக்கும் ஏமார்ந்து அரசியல்வாதிக்கு வக்காலத்து வாங்கிய வாக்காளர்கள்.

பொதுமக்களது வரிப்பணத்தால் சும்மா சம்பளம் எடுத்துக்கொண்டு அரட்டை அடித்துக் கொண்டும் பொறுப்பு உணர்வின்றி மக்களை அலைக்கழிக்கும் அரச ஊழியர்கள்.

விலை உயர்ந்த பிராடோ, லம்போகினி, டிபண்டர்களுக்கு ஒரு சட்டமும்  ஆட்டோ டிரைவர்களுக்கு ஒரு சட்டத்தையும் அமல்படுத்தும் போலீசார்.

அரச வாகனத்தை, அதன் சாரதியை தனது மனைவிக்கு கடை செல்ல பயன்படுத்தும் ஆயுதப் படை அதிகாரிகளும், பிற அரச அதிகாரிகளும்.

பரீட்சை மண்டபத்தில் மாணவர்களுக்கு வழங்க தரும் கடதாசி களை அவர்களுக்கு கொடுக்காமல் கட்டுக்கட்டாக தனது வீட்டுக்கு  கடத்தும் பரீட்சை மண்டப பொறுப்பாளர்கள்.

தொழில் பதவிகளைப் பெற தனது திறமையை, பட்டத்தை ஒரு புறம் தள்ளிவிட்டு கேவலம் கெட்ட அரசியல்வாதிகள் முன் முழந்தாளிடும இளைஞர்கள்.

சாதாரண பொதுமக்களின் வரிப்பணத்தை சுரண்டி விமானத்தில் முதல் வகுப்பில் செல்லும் அரசியல்வாதியின் முன் நெளிந்து குழைந்தும், மத்திய கிழக்கில் வேர்வை சிந்தி நாட்டுக்கு பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும், அதே விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணிக்கும் உழைப்பாளிளோடு எரிந்து விழும் விமானப் பணியாளர்கள்.

தமக்கு போதிய வருமானம் இருந்தும், களவாக சமூர்த்தி எடுக்கவும், கிராமசேவகர்களைப் பயன்படுத்தி கள்ள சான்றிதழ் பெற்று தன் பிள்ளைக்கு புலமைப்பரிசு, மஹாபொல எடுக்கும் முனையும் பெற்றோர்கள்.

ஒவ்வொரு வீட்டிலும் சூரிய சக்தியை பயன்படுத்தினால் மின்சார பிரச்சனை பெருமளவு தீரும் என அறிந்திருந்தும், தமது வயிற்றை வளர்ப்பதற்காக மட்டும் அத்திட்டத்தை மண்ணாக்கும் மின்சார சபை பொறியியளாளர்கள்.

மிளகாய் தூளில் செங்கல்லையும், மஞ்சள் தூளில் மாவையும், மிளகு விதையோடு பாப்பாசி விதையையும் கலந்தும், பழங்களுக்கு இரசாயணம் அடித்து, பலாக்காயை இரசாயண ஹாப்பிக் கொண்டு குளிப்பாட்டி, அப்பாவி விவசாயிகளிடம் இரண்டு துட்டுக்கு எடுக்கும் அரிசி, மரக்கறி, பழங்களை நெருப்பு விலைக்கு விற்று பகற் கொள்ளை அடிக்கும், கள்ள நிறுவை செய்யும் வியாபாரிகள்.

சீருடையில் நெஞ்சுக்கு மேல் இடது புறத்தில் அரச இலட்சினை பொருத்திய நிலையிலும், தேசிய வனாந்தரங்களில் மரங்களை வெட்டி களவில் அனுப்புகின்ற வன ஜீவி பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள்.

குறைந்த விலையில் உள்ள மருந்தை நோயாளிக்கு சிபாரிசு செய்யாமல், மருந்து நிறுவனங்களின் தரகுப் பணத்திற்காக அதிக விலையுள்ள மருந்தை சிபாரிசு செய்யும், தனியார் மருத்துவமனைகளில் தேவையற்ற பரிசோதனைகளுக்காக அனாவசிய செலவை ஏற்படுத்தும் வைத்தியர்கள்.

குப்பை கூளங்களை ஏற்றிச் செல்ல வரும் போது கையில் கொஞ்சம் பணத்தை திணிக்காவிட்டால் அடுத்த முறை ஏற்றாமல் போட்டு விட்டுச் செல்லும் நகரசபை ஊழியர்கள்.

வீடுகளில் முடங்கிக் கிடந்து அரசியல்வாதிகளை தூற்றிக்கொண்டு இருக்காமல், குறைந்தது ஒரு கொச்சிக்காய்  கன்றையாவது நடத் திராணியற்ற முதியவர்கள், பெண்கள், பிள்ளைகள்.

இவர்கள் மட்டுமா?

அறையில் இருந்து வெளியேறும் போது மின் சுவிட்சை அணைக்காத,

ஒழுங்காக தண்ணீர் குழாயை மூடாத,

கையிலிருக்கும் உணவுக் கழிவை நிலத்தில் கண்டபடி போடுகின்ற,

உட்காரும்  கதிரைக்குக் கீழே சுவிங்கத்தை ஒட்டுகின்ற,

கண்ட கண்ட இடங்களில் எச்சில் துப்புகின்ற,

தனது குழந்தையின் கழிவுகளை நீர் நிலைகளிலும் பாதைகளிலும் எறிகின்ற,

மனிதருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் வீதி சட்டங்களை மீறுகின்ற,

பேரூந்து, தொடரூந்து சன நெரிசலில் பெண்களை தொல்லைப்படுத்துகின்ற,

அடுத்த பிள்ளையின் இடத்தை பறித்து தனது  பிள்ளையை வரிசையில் முன் நிறுத்துகின்ற,

மின்சாரமானியில் கள்ளத்தனம் செய்து  பாவித்ததைவிட குறைந்த கட்டணத்தை களவில் செலுத்துகின்ற,

வீட்டின் அழுக்கு தண்ணீரை பாதைக்குத் திருப்பி விடுகின்ற,

பொலித்தீன் பிளாஸ்டிக் என்பவற்றை தீ வைத்து எரித்து சூழலை மாசு ஆக்குகின்ற,

இன்னும் இவ்வாறான அசிங்கமான செயல்களை ஒவ்வொரு நாளும் செய்கின்ற நீங்களும் கோட்டாவோடு சேர்ந்து கோ ஹோம்!

நீங்கள் சின்ன திருடர்கள் அவர்கள் பெரும் கொள்ளைக்காரர்கள் என நினைக்க வேண்டாம். உங்களுக்கு வாய்ப்பிருந்தால் அவர்களை மிஞ்சிவிடமாட்டீர்களா?

மொத்தத்தில் நீங்கள் எல்லோரும் திருடர்களே!

சிங்களவர்களும் நிர்வாணமும்

சுதந்திரத்திற்குப் பின்னான இடம்பெற்ற வன்முறைகளில் இந்நாட்டின் பெரும்பான்மையினராகிய சிங்கள காடையர்கள் தமிழர்களைத் தாக்குவார்கள் அல்லது முஸ்லிம்களைத் தாக்குவார்கள். அவர்களின் சொத்துக்களை சூறையாடுவார்கள். தீ வைப்பார்கள். தாம் தாக்கும் இனத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள், கர்ப்பிணித் தாய்கள் என எந்த வித்தியாசமும் பார்க்காது அடித்துத் துன்புறுத்திக் கொல்வார்கள். இறுதியில் அகப்படுபவரை நிர்வாணமாக்கி தெருத்தெருவாக இழுத்துச் சென்று இன்புறுவார்கள். இவையனைத்தையும் செய்துமுடிக்க அவர்களுக்கு ஒரு சாராயப் போத்தல் போதுமானதாகும்.

இப்போது 21 ஆம் நூற்றாண்டு. உலகம் நவீன தொழில்நுட்பத்துறையில் அசுர வளர்ச்சி கண்டிருக்கிறது. மனித விழுமிய மாண்புகளும், சக உயிரினங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய உரிமைகள் குறித்தெல்லாம் பரவலான விழிப்புணர்வு ஏற்பட்டுவருகின்றது. இந்நிலையில் சிங்கள காடையர்களோ மீண்டும் வன்முறையில் இறங்கியிருக்கின்றனர். சிங்கள காடையர்கள் வன்முறையில் ஈடுபடும்போது மேற்கொள்ளும் வயதுவரம்பு பாராத தாக்குதல்கள், சொத்தெரிப்புகள், நிர்வாணமாக்கி இரசிப்பது என அத்தனை படிமுறைகளையும் இப்போதும் பின்பற்றுகிறார்கள். இத்தகைய காடையர்கள் மேற்கொள்ளும் வழமையான வன்முறைகளுக்கும், தற்போது அவர்கள் மேற்கொள்ளும் வன்முறைகளுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. அது என்னவென்றால், சிங்களவர்கள் தமக்குள்ளேயே மோதிக்கொள்ளும் உள்ளின வன்முறையில் ஈடுபடுவதுதான்.

2022 மே 9 அன்று சிங்களவர்களால் நிர்வாணப்படுத்தப்பட்ட சிங்களவர்
2022 மே 9 அன்று சிங்களவர்களால் நிர்வாணப்படுத்தப்பட்ட சிங்களவர்

இராஜபக்ச குடும்பத்தினரது எதேச்சாதிகார ஆட்சியை அகற்றுவதற்காக காலி முகத்திடலில் “அகிம்சை போராட்டம்” நடத்திக்கொண்டிருப்பவர்களுக்கும், இராஜபக்சக்களின் ஆதரவாளர்களுக்குமிடையிலான வன்முறை. ஆரம்பத்தில் இராஜபக்சக்களின் ஆதரவாளர்களின் கையோங்கியிருந்தாலும், விரைவாக தன்னின இயல்பை புதுப்பித்துக்கொண்ட “அகிம்சை போராட்டக்காரர்கள்” விரைவாகத் தாக்கத்தொடங்கினர். வெறித்தனமான வன்முறையில் ஈடுபட்டு, தம் உள்ளின எதிரணியினரை நிர்வாணப்படுத்தி குதூகலித்தனர்.

இவ்வாறு சிங்களவர்கள் வன்முறையில் ஈடுபடும்போது தம் எதிரிகளை நிர்வாணப்படுத்தி இரசிப்பது ஏன்?

வன்முறைகளின்போது நிர்வாணப்படுத்தி இரசிக்கும் வன்கலைக்கும் நீண்டதொரு வரலாற்றுப் பாரம்பரியம் உண்டு. அகிம்சையையும், உயிர்நேசி்த்தலையும் வாழ்வின் தத்துவமாகப் போதித்த புத்தரின் பாதத்தின் கீழ் அமர்ந்து எழுதப்பட்ட இலங்கையின் வரலாற்றை மகாவம்சம் என்ற நூல் தருகிறது. தமிழர்கள் மீதான வன்முறையை வரலாற்றில் கட்டவிழ்த்துவிடும் நோக்கோடு படைக்கப்பட்ட இந்நூலில் அதிகளவு போர்கள் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தாலும், நிர்வாணம் பற்றி எங்கும் குறிப்பிடப்பவில்லை. 

ஆனால், நிர்வாணப்படுத்தி, சித்திரவதைக்குட்படுத்தி கொலைசெய்யப்பட்ட, வெளித்தெரிந்த சில சம்பவங்களை இவ்விடத்தில் பதிவிடலாம்.

இலங்கை வரலாற்றிலேயே 1971 தொடக்கம் 1977 வரையான காலப் பகுதியில் மிகமோசமான அரச பயங்கரவாத ஆயுத வன்முறைகள் நடத்தப்பட்டன. கம்யூனிச சிந்தாந்தத்தின் அடிப்படையில் இலங்கை நாட்டைத் தம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர றோகண விஜயவீர தலைமையில் போராடிய ஜே.வி.பியினரை ஒடுக்க அரசு மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின்போதே முதலாவது நிர்வாண சம்பவம் பதிவாகியுள்ளது.

“கதிர்காமத்து அழகி” எனப் பட்டமளிக்கப்பட்டிருந்த பௌத்த பாட ஆசிரியையான பிரேமாவதி மனம்பெரி ஜே.வி.பி ஆயுதக் குழுவினருக்கு ஆடைகள் தைத்துக்கொடுத்திருந்தார். அதனை அறிந்துகொண்ட இலங்கை இராணுவம் அவரைப் பிடித்து சித்திரவைக்குட்படுத்திக் கொன்றது. கொன்றது மட்டுமல்லாது நிர்வாணப்படுத்தி கேவலப்படுத்தியது. இவ்வாறு தன் சொந்த, சிங்கள இனப் பெண்ணையே நிர்வாணப்படுத்தியதோடுதான், இலங்கையின் நிர்வாண இரசிப்பு வரலாறு ஆரம்பமாகிறது.

ஆரம்பத்திலேயே தமிழர்கள் மீது சிங்களவர்கள் வன்முறைகளை மேற்கொண்டபோதும், நிர்வாணப்படுத்தல் சம்பவங்கள் இடம்பெற்றமைக்கான தரவுகளைப் பெறமுடியவில்லை. தமிழர்களை நிர்வாணப்படுத்தி இரசித்த முதல் சம்பவம் 1983 ஆம் ஆண்டில் இடம்பெற்றதாகவே பதிவுசெய்யப்பட்டுள்ளது. அந்த நிழற்படம் நம் அனைவருக்கும் நினைவிருக்கும்.

கறுப்பு யூலை
கறுப்பு யூலை

பேருந்து நிலையமொன்றில் உயிர் தப்பித்தலுக்காக சிக்கிக்கொண்ட தமிழர் ஒருவரை சுற்றிவளைத்திருக்கும் சிங்கள வன்முறையாளர்கள் அவரை நிர்வாணப்படுத்தி, சூழநின்று சிரித்து மகிழ்ந்துகொண்டிருப்பார்கள். தமிழர் மீது நடத்தப்பட்ட வன்முறைகளது கோரத்தின் அத்தனை வலிகளையும் வெளிப்படுத்தி நின்ற அந்த மனிதர் பின்னர் உயிர் பிழைத்தாரா? கொலைசெய்யப்பட்டு கொதிக்கும் தாரில் வீசப்பட்டாரா? உயிரோடு தீயில் தூக்கயெறியப்பட்டாரா? அல்லது எல்லாவற்றிலிருந்தும் தப்பி உயிரோடிருக்கிறாரா என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை. ஆனால் அவர் அந்தக் கனத்தில் வெளிப்படுத்திய அவமானம், பயம், ஏக்கம், கவலை என அத்தனை உணர்வுகளும் சந்ததி கடத்தப்பட்டிருக்கிறது.

1984 ஆம் ஆண்டில் மணலாற்றுப் பகுதியில் குடியேற்றப்பட்ட சிங்களவர்கள், அப்பகுதியில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களை வன்முறைகளை ஏவி துரத்தினார்கள். அதன்போது, மணலாற்றுப் பகுதியில் இருந்த கிராமம் ஒன்று காடையர்களால் சுற்றிவளைக்கட்டது. அதில் சிக்கிக்கொண்ட பெண் ஒருவரை கூட்டுப் பாலியல் வன்முறைக்குட்படுத்தி, அவரை நிர்வாணப்படுத்தி சித்திவதைக்குட்படுத்தினர். அதிலிருந்து தப்பித்து தென்னமரபடி வரைக்கும் நிர்வாணமாகத் ஓடி வந்த அப்பெண், சிங்கள காடையர்கள் வருகிறார்கள் என்ற செய்தியை அக்கிராம மக்களுக்கு அறிவித்துவிட்டு, அவமானம் தாங்காது தீயில் விழுந்து இறந்துபோனாள்.

இதனைவிட போர்க்காலத்தில் போராளிகள் கைதுசெய்யப்பட்டால், அவர்களை நிர்வாணப்படுத்தி தண்டனைக்குட்டுபடுத்தும் காட்சிகளையும், விடுதலைப் புலிகளின் போராளிகளது இறந்த உடல்கள் கிடைப்பின் அதனையும் நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்று இன்பம் காணும் சம்பவங்களைத் தமிழர்கள் அறிந்திருக்கின்றனர். 

நிர்வாணப்படுத்தி இரசிக்கும் காட்சிகளின் உச்சத்தை இறுதிப் போர்க்காலத்திலேயே தமிழர்கள் அதிகம் அனுபவித்தனர். இராணுவத்திடம் சரணடைந்த பெண் போராளிகள், ஆண் போராளிகள் எனப் பலர் நிர்வாண நிலையிலேயே இருத்தி வைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் சர்வதேச ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தன. போராளிகள் தவிர மக்கள்கூட தம் நிர்வாணத்தை இராணுவத்திடம் காட்டிய பின்னரே சரணடைய அனுமதிக்கப்பட்டனர்.

War Crimes in Sri Lanka
இறுதிப்போரின் சாட்சி அற்ற ஒரு காட்சி

பெண் – ஆண், வயது என எந்த வித்தியாசங்களுமின்றி ஒரு கூடாரத்துக்குள் தம்மை நிர்வாணப்படுத்திக் காட்டும்படி கட்டளையிடப்பட்டார்கள். இதன் விளைவாகவே, “இனி இழக்க எங்களிடம் எதுவுமில்லை. எங்களிடம் ஒன்றுமில்லை என்பதை ஆமிக்காரனுக்கு கழற்றிக்காட்டிப்போட்டுத்தான் வந்தனாங்கள். இந்த உயிருக்கு ஒரு மயிர் பெறுமதிகூட இல்லை” என்ற வார்த்தைப் பிரயோகம் வன்னி மக்களின் நாளாந்த வாழ்வில் இப்போதும் பரிச்சயமானதாக இருக்கிறது. இதற்காகத் தான் நிர்வாணப்படுத்துகின்றனர்.

தம் எதிரிகள் இனி உயிர்வாழவேக் கூடாது என்னும் அளவிற்கு அவமானப்படல் வேண்டும். எத்தனை தலைமுறைக்கும் பெரு வலியாக அது கடத்தப்பட வேண்டும். அந்த உளவியல் சிங்கள இனம் மீதான பயப்பீதியை ஏற்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும் என்கிற உளவியலின் அடிப்படையில்தான் நிர்வாணப்படுத்தலை இரசிக்கிறார்கள்.

எனவே இங்கு நிர்வாணப்படுத்தல் என்பது ஒருவித இனவழிப்பு ஆயுதம். ஒரு துப்பாக்கி இரவைக்கு இருக்காத வீரியத்தை, ஒரு எறிகணைக்கு இல்லாத சக்தியை நிர்வாணப்படுத்தல் ஆறாவடுவாக ஏற்படுத்திவிடுகிறது. இந்த ஆறா வடுவிற்காகவே நிர்வாணப்படுத்தப்படுகின்றனர்.

சிங்கள இனவுருக்கத்துடன் சொல்லப்படும் நம்பிக்கையானது மிருகத்தோடும் மனிதரோடும் இணைத்தே புனையப்பட்டிருக்கிறது. சிங்கமொன்று இளவரசியைக் கடத்தி சென்று குகையில் சிறை வைத்திருந்த காலத்தில் பிறந்த பிள்ளைகளில் இருந்தே சிங்கள இனம் பல்கிப் பெருகியது என்ற புராண நம்பிக்கை இனவுருவாக்க கதையாகப் பின்தொடரப்படுகிறது.

முரண்மிகு, மிகைப்படுத்தப்பட்ட இந்த நம்பிக்கை சிங்கள இனத்தின் உளவியலைத் தீர்மானிக்கும் காரணியாக மாறியிருக்கிறது. அதேபோல இலங்கையில் சிங்களவர் அரச உருவாக்கமும், தந்தையினாலேயே கட்டுப்படுத்தமுடியாத ஒழுக்கம் தவறியவனான விஜயனின் வருகையுடன்தான் ஆரம்பிக்கிறது. விஜயன் தன் 700 தோழர்களுடன் இலங்கைத் தீவை அடைந்தவுடன் செய்த முதற் காரியமும் தமிழர்கள் என்று கருதப்படும் குவேனி குலத்தின் ஆண்கள் அனைவரையும் இனப்படுகொலை செய்தமைதான்.

எனவே தன்னினத்தின் வரலாற்றை, அவ்வினமே, முரண்களோடும், வன்முறையோடும், இனப்படுகொலையோடும் உருவாக்கிவைத்திருக்கிறது. அதனைப் புனிதப்படுத்திப் பேணுகின்றது. இந்நிலையில் அதன் இனவுருவாக்க உளவியல் எப்படியானதாக இருக்க முடியும்! இத்தகைய பின்னணியில்தான் நிர்வாணப்படுத்தல் பிறரை அச்சுறுத்தும் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது

நிர்வாணப்படுத்தல் ஒடுக்குமுறையின் வலிமை மிக்க ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. தன் எதிராளியின் வாழ்க்கையை நிமிரமுடியாதளவுக்கு சிதைக்கும் கதாயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. 

ஆனால் சிங்களவர்கள் நேசிக்கும் அவர்ளின் கடவுளான புத்தரோ நிர்வாணம் பற்றி வேறொரு அர்த்தத்தைத் தருகிறார். ஆசைகளைத் துறந்து பற்றற்று வாழ்தலே நிர்வாணம் என்கிறார். நிர்வாணம் ஆன்ம ஞானத்தைத் தருகிறது என்கிறார். நிர்வாணத்திற்கு இப்படியொரு அர்தத்தைக் கொடுத்த புத்தபகவானின் பக்தர்களோ, நிர்வாணத்தை ஆடை களைதல் என தவறாக விளங்கிவிட்டார்களோ என எண்ணத்தோன்றுகிறது.