ஐக்கிய அமெரிக்க அதிபர் தேர்தலும் தமிழர்களும்

தமிழர்களில் பெரும்பாண்மையானோர் டிரம்புக்கு எதிராகவும், பைடனுக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்கின்றனர். தமிழர்களுக்கு என்ன இலாபம்? 

USA

கமலா ஹரிஸ் ஐயர் மீதும் பாசம் காட்டுகின்றனர். அவரின் வெற்றிக்கான தமிழ் நாட்டில் சிறப்பு பூஜையும் இடம்பெற்றது. கமலாவின் தாயார் ஒரு தமிழர் (அவர் பிராமணரா, தெலுங்கரா, மலையாளியா என்பது ஒரு புறம் இருக்கட்டும்) கமலாவின் தந்தை ஒரு ஜமைக்கர். அவரின் கணவர் ஒரு யூதர். 

கமலா ஹரிசுக்கு தமிழ் தெரியுமா? அவர் தமிழருக்கு ஏதாவது செய்தாரா? அவர் தாய்வழியில் தமிழருடன் தொடர்புபட்டிருக்கிறார் என்பதால் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கிறோமா? கமலா ஹரிஸ் அல்லது அவரைச் சார்ந்தோர் வெல்லதால் நமக்கு என்ன பயன்? ஒரு பொம்மை தன்னை தமிழ் என்றவுடன் ஆதரிக்கும் வெகுளித்தனத்தால், தமிழரை தமிழ் அல்லாதோர், தங்களை தமிழாகக் காட்டிக் கொண்டு ஆளுகின்றார்கள்!

ஓபாமா அதிபராக இருந்தபோது துணை அதிபராக இருந்தவர்தான் பைடன். அக்காலத்தில் முள்ளிவாய்க்காலில் பல தமிழர்களின் மூச்சுக்காற்று நின்றுபோனபோது என்ன செய்தார்? இப்போதும் அவரால் இந்தியாவையும், சீனாவையும் தாண்டி இலங்கையில் ஒன்றும் செய்ய முடியாது. தாய் வழியில் தமிழருடன் தொடர்புபட்ட கமலாவாலும் முடியாது. அவ்வாறே இந்திய அரசைத் தாண்டி தமிழ்நாட்டில் எதையும் அசைக்க முடியாத நிலையில்தான் பைடனும் கமலாவும். அமெரிக்கர்களுக்கு பல பிரச்சனையுள்ளது. தமிழருக்குத்தான் தன் வீட்டு பிரச்சனையை விட்டுவிட்டு, பக்கத்தில் மூக்கை நுளைக்கும் பழக்கம் உள்ளது.

தமிழருக்கு என்ன பிரச்சனை?

  • இலங்கையில் போரின் வடுக்கல் மறையவில்லை. டிரம்ப் வந்தால் என்ன? பைடன் வந்தால் என்ன? கூட வந்த குரங்கு வந்தால்தான் என்ன?
  • இந்திய மத்திய அரசாங்கத்தின் அட்டசாகம் தாங்க முடியவில்லை. பைடன் அதிபரானால் மட்டும் மோடி மயில் வளர்க்காமல் போய்விடுவாரா? தமிழ்நாட்டிற்குள்ள தலையிடிகளைச் சொல்லவும் வேண்டுமா?
  • புலம்பெயர் ஈழத் தமிழர் – நீங்கள்தான் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கனவுகளுடன் காவியமாகிவிட்டார். ஆனால், நீங்கள் டிரம்புக்காகவும் பைடனுக்காகவும் பட்டிமன்றம் நடத்துகிறீர்கள். 

குறிப்பு: ஒபாமாவை ஆதரித்து "ஒபாமாவுக்கான தமிழர்கள்" (Tamils for Obama) என்று ஒரு குழு இயங்கியது. ஒபாமாதான் 2 தடவைகள் அதிபராக இருந்தும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதற்காக இலங்கையை ஒன்றும் செய்யவில்லை.என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.