படித்ததில் மிகவும் பிடித்தது

படித்ததில் மிகவும் பிடித்தது. யாருடைய ஆக்கம் என்று தெரியாது. ஆனால், சொற்கள் கவிதையாகப் பேசுகின்றன.

read

~~ 1 ~~

நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும்உள்ள வித்தியாசம் என்ன?


குழந்தை நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்பது நம்பிக்கை.

படித்து முன்னறிய குழந்தை தன்னைக் காப்பாற்றுவான் என்பது மூட நம்பிக்கை!


~~ 2 ~~

ஓவ்வொரு இளைஞனின் மன உளைச்சலுக்கும் காரணம்?


மதிப்பெண்ணும் மதிக்காத பெண்ணும்!


~~ 3 ~~

வசதி இல்லாதவன் ஆடு மேய்க்கிறான்!


வசதி உள்ளவன் நாய் மேய்க்கிறான்!


~~ 4 ~~

ஆண்களை அதிக தூரம் நடக்க வைக்கும் விடயங்கள் இரண்டு?


ஒன்று பிகர், மற்றொன்று சுகர்!


~~ 5 ~~

என்னதான் சென்டிமென்ட் பார்த்தாலும், கப்பல் கிளம்பும்போது பூசணிக்காய் எலுமிச்சம் பழம் வச்சு நசுக்கினாலும் சங்கு ஊதிட்டுதான் கிளம்பும்.


~~ 6 ~~

கணிப்பொறிக்கும் எலிப்பொறிக்கும் என்ன வித்தியாசம்?


கணிப்பொறியில் எலி வெளியே இருக்கும். எலிப்பொறியில் எலி உள்ளே இருக்கும்.


~~ 7 ~~

டாக்டருக்கும் ஆக்டருக்கும் உள்ள ஒற்றுமை என்ன?


இரண்டு பேரும் தியேட்டருக்கு வரவழைச்சு தான் கொல்லுவாங்க!


~~ 8 ~~

சிவகாசிக்கும் நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்?


சிவகாசில காச கரியாக்குவாங்க.

நெய்வேலிலே கரிய காசாக்குவாங்க!


~~ 9 ~~

FILE இக்கும் PILE இக்கும் என்ன வித்தியாசம்?


FILE இல் உட்கார்ந்து பார்க்கணும். PILE இக்கு பார்த்து உட்காரணும்.


~~ 10 ~~

செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?


மனிதனுக்கு கால் இல்லேன்னா balance பண்ண முடியாது.

செல்போன்ல balance இல்லேன்னா call பண்ண முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.