உன்னவனும் என்னவனும்

உனக்கும்
ராமசாமிதான்
எனக்கும்
ராமசாமிதான்
உன்னவன்
காவிய நாயகன்
என்னவன்
காலத்தின் நாயகன்
முனிவரோடு சென்று
வேள்வி காத்தவன்
உன்னவன்
வேள்விகள் எதிர்த்து
கேள்வி கேட்டவன்
என்னவன்
மாய மான் துரத்தி
மாமியை தொலைத்தவன்
உன்னவன்
அறிவை புகுத்தி
பூமியை புரட்டியவன்
என்னவன்
மறைந்திருந்து
தாக்கியவன்
உன்னவன்
நேருக்கு நேர்
சமர் செய்தவன்
என்னவன்
குகனோடு
ஐவரானவன்
உன்னவன்
மானுடத்தையே
அரவணைத்தவன்
என்னவன்
சாஸ்திரத்திற்காக
சம்பூகனை கொன்றவன்
உன்னவன்
சம்பூகனுக்காக
சாஸ்திரத்தை கொன்றவன்
என்னவன்
சலவைக்காரனால்
அழுக்கானவன்
உன்னவன்
சலவைக்காரனையும்
துவைத்து நிமிர்த்தியவன்
என்னவன்
உன்னவன்
கால்பட்டு
அகலிகை விழித்தாளாம்
என்னவன்
சொல் கேட்டு
பெண்ணெனும் பேரினமே எழுந்தது
உன்னவனின்
செருப்புகள் அரசாளலாம்
என்னவனின்
நெருப்பு மக்களை ஆளும் .
நன்றி: பெரியசாமி கனகவேல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.