சாரத்தில் ஆரியர்கள் வளர்ச்சி அடையாத சமூகத்தை சேர்ந்தவர்கள். எனவே வருண முறையை அவர்கள் உருவாக்க வில்லை, ஆரியர் வருகைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் அடிமைமுறை இருந்தது, எனவே அடிமை முறை உற்பத்தி உறவான வருண முறையும் உருவாகி இருக்க வேண்டும்.
வருண முறை ஆரியர்கள் வருகைக்கு முன்பே இந்தியாவில் இருந்தது என்பதை நிருபிக்க எந்த இலக்கிய சான்றும் இல்லை.
ஏனெனில் இந்திய அகழாய்வு உறுதிபடுத்தும் காலத்தையும் கதைகளையும் சொல்லும் இந்திய பூர்வீக மொழியில் அமைந்த எந்த நூலும் இல்லை. அதேவேளை கிமு 600 காலத்துக்கு பின்னால் ஆரியர்களின் வேத இலக்கியங்களில் உள்ள முரண்பாடுகளே நமக்கு போதுமான தகவல்களை தருகின்றன.
அப்படி ஒரு தகவல் சத பத பிராமணத்தில் வரும் ஒரு விவாதம், இது மகத அரசன் அஜாத சத்துருவுக்கும் பாஞ்சால பகுதியில் இருந்து வந்த ஒரு ஆரிய பிராமணனுக்குமான விவாதம்.
அந்த பிராமணன் அஜாத சத்துருவிடம், பிராமணனே உயர்ந்தவன் எனவே நீ பிராமணனாக மாறி விடு என கோறுகிறான், ஆனால் அரசனே ஆண்டவனுக்கு நிகரானவன் அவனே அதிகாரம் அனைத்தையும் கொண்டவன் எனக்கூறி பிராமணனின் கோரிக்கையை நிராகரித்து விடுகிறான். மேலும் அப்பிராமணனின் பல கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறான். இதன் காரணமாக அந்த கல்வியில் உயர்ந்த பிராமணன் அஜாத சத்துருவிடமே சீடனாக சேருகிறான்.
இவை நமக்கு கூறுவது கிமு 400 காலத்தில் மகத பகுதியில் பிராமண கருத்துக்களுக்கு செல்வாக்கு எதுவும் இல்லை என்பதையே அஜாத சத்துரு மட்டும் அல்ல கிமு 1885 மௌரிய அரசை கைபற்றிய புஸ்ய மித்திர சுங்கன் ஆட்சிக்கு வரும் வரை கூட ஆரிய கருத்துக்கள் எதுவும் இந்தியாவில் பரவ வில்லை. புஸ்ய மித்திர சுங்கனுக்கு பிறகே ஆரிய கருத்துக்கள் வட இந்தியாவில் பரவ ஆரம்பித்தன.
.ஆரியர்களின் சடங்குமுறைகளை உள்வாங்கிய வட இந்திய மன்னர்கள் தங்களை ஆரிய வம்சாவழியாக அறிவித்துக் கொண்டார்களோ அதுபோலவே தமிழகத்திலும் நடந்தது. பசேனாதி என்ற கோசல மன்னன் தன்னை இஸ்வாகு குலத்தை சேர்ந்த பிரசேனஜித் என அறிவித்துக் கொண்டான்.
புஸ்ய மித்திர சுங்கன் தன்னை பிராமணனாக அறிவித்துக்கொண்டான். சாதவாகன அரசர்கள் தங்களை கன்வ கோத்திரத்தை சேர்ந்த பிராமணர்கள் என அறிவித்துக்கொண்டார்கள்.
இந்த கன்வர்தான் ரிக் வேதம் 8 ஐ தொகுத்தவர் சதபத பிராமணத்தையும் தொகுத்துள்ளார்.
இது ஒரு தொற்று நோய்போல் பரவ ஆரம்பித்தது யாகங்கள் செய்பவன் பெரிதும் மதிப்புக்கு உரியவனாக மதிக்கப்பட்டான்.
குழந்தை பிறக்கவும் யாகம். அவனுக்கு இளவரசு பட்டம் சூட்டவும் யாகம். அரசனோ பணம் படைத்தவர்களோ தங்கள் வருணத்தை மாற்றிக்கொள்ளும் யாகம். முடிசூட்ட யாகம். நாடுகளை கொள்ளை அடிக்க அசுவமேத யாகம்.
யாகமோ யாகம். இந்த யாக வேள்விகள் அடிமை உடமை அரசர்களை சாதாரண மனிதனுக்கு மேலாக கடவுளுக்கு நிகராக உயர்த்திக்காட்டியது. எனவே தங்களை சாதாரண மனிதனுக்கு மேலாக கடவுளுக்கு நிகராகவோ கடவுளின் அவதாரமாகவோ சித்தரிக்க இந்த யாகங்கள் அரசனுக்கு உதவின.
இந்த யாகமுறை புரோகிதர்களுக்கு பெரும் வருவாயை பெற்றுத்தந்தது. எனவே வாய்ப்பு கிடைத்த பூசாரிகள் எல்லாம் தங்களை வேள்வி சடங்கு செய்யும் கூட்டமாக மாற்றிக்கொண்டு
அவரவர் தகுதிக்கு ஏற்ப அரசர்களைப்போல் தங்கள் கோத்திரங்களையும் அறிவித்துக்கொண்டார்கள்.
தமிழக அரசர்கள்:
அன்பின் சாரலா செப்பேடுகளும் கன்னியாகுமரி கல்வெட்டும் மூவருலா என்ற இலக்கிய நூலும் திருமாலை முதல் சோழ அரசனாக காட்டுகிறது.
அடுத்து பிரம்மன், மரீசி, சூரியன், கசியப்பர், மனு, இஸ்வாகு, இஸ்வாகுவின் மகன் விருச்சி, சிபி, துஸ்யந்தன், மருத்தன், பரதன், பகீரதன், தசரதன், இராம லட்சுமணர்கள் இப்படியே பட்டியல் நீண்டு செல்கிறது. இப்படி சோழர் குல முன்னோர்களின் பட்டியல் 78 ஐ தாண்டுகிறது (சோழர்கால செப்பேடுகள் பக்கம் 31 லிருந்து 46 வரை).
பாண்டியர்களும் இப்படியே பிரம்மன், அத்திரி, சந்திரன் சில இடங்களில் சிவன் அகத்தியன் என்று பாண்டியர்களின் முன்னோர்களின் பட்டியல் நீள்கிறது (சிவகாசி செப்பேடு காலம் கிபி 1021, அரசன் வீரபாண்டியன்).
பல்லவர்களும் தங்களை பரத்வாஜ கோத்திரத்தை சேர்ந்த பிராமணர்கள் என்றே கூறிக்கொண்டார்கள்.
மகாராஸ்டிராவில் வீர சிவாஜி கூட இரண்ய கர்ப்ப யாகத்தின் மூலம் தனது கோத்திரத்தை மாற்றிக்கொண்டவர்தான்.
இப்படித்தான் பார்பண புரோகிதர்கள் மூலமும் மன்னர்களின் மூலமும் ஆரிய வேதக்கருத்துக்கள் நாடு முழுவதும் பரப்பப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.