பன்றி இறைச்சி தீமையானதா?

யூதர், இஸ்லாமியர் மற்றும் சில கிறிஸ்தவர்கள் பன்றி இறைச்சி / பன்றிக் கறி உண்ண மாட்டார்கள். பன்றிக் கறியை பொதுவாக இந்துக்களும் பௌத்தர்களும் தவிர்க்கிறார்கள். இஸ்லாமியர் இதனை ஹராம் (ஹலால் அற்ற உணவு) என்று அழைப்பதை கேள்விப்பட்டுள்ளோம். யூத, இஸ்லாமிய, கிறிஸ்தவ புனித நூல்கள் பன்றியை அசுத்தமான விலங்கு என்றும், அதனை உண்ண வேண்டாம் என்றும் தெரிவிக்கின்றது. இந்துக்களும் பௌத்தர்களும் இதனை உண்பதைத் தவிர்ப்பதற்கு சில காரணங்களைத் தருகின்றனர்.

பன்றி இறைச்சி தீமையானதா?
பன்றி இறைச்சி தீமையானதா?

ஆனால் இன்றைய தலைமுறையினர் எதற்கும் காரணம் கேட்பார்கள். குரான், விவிலியம் சொல்கிறது என்பதற்கான ஏன் உண்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான் கேள்வி. நியாயமான கேள்விதானே! அறிவியல் விளக்கம் கேட்பதற்கு சமயவாதிகள் அறிவியல் ரீதியாகத் தரும் விளக்கம் பன்றி இறைச்சியில் புழுக்கள் உள்ளன / தீமை விளைவிக்கும் நுண்ணுயிரிகள் என்பதாகும்.

தீமை விளைவிக்கும் நுண்ணுயிரிகள் காற்றில்கூட உள்ளன. நாம் உண்ணும் உணவுகளில் உள்ளன. நான்றாக சமைத்த பன்றிக் கறி தீங்கற்றது. நான்றாக சமைக்காத மாட்டுக்கறி, ஆட்டுக்கறி, கோழிக்கறி தீங்கானது. சமயவாதிகள் தாங்கள் நம்பும் விடயத்திற்கு அறிவியல் விளக்கம் காட்ட முற்படுவது வேடிக்கையானது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் பரிசோதனை சேவை (Food Safety and Inspection) லிஸ்டீரியா மெனோசைக்டோயென்ஸ் நுண்கிருமிகளை நன்றாக சமைத்த பன்றிக் கறியில் இருப்பதை கண்டு பிடித்தார்கள். அதனால் அதனை உண்ட எவருக்கும் நோயின் பாதிப்பு இல்லை எனக் கண்டுபிடித்தார்கள்.

எஸ்சேரிசியா கோலி (Escherichia coli), சல்மோனெலா (Salmonella), ஸ்டாபிலோகோகஸ் ஓரேயஸ் (Staphylococcus aureus) ஆகிய நுண்ணுயிகள் சமைத்த பன்றியிறைச்சி உட்பட கோழியிறைச்சியினும் காணப்படுகின்றன. 71 °C கொதிநிலையில் சமைப்பதை ஆய்வுகள் சிபார்சு செய்கின்றன.

பன்றி மூலம் பன்றிக் காய்ச்சல் ஏற்படுகிறது என்ற வாதம் சமயவாதிகளால் முன்னெடுக்கப்படுவதுண்டு. பறவைக் காயச்சல் உள்ளது என்பதற்காக அவர்கள் கோழிக்கறி சாப்பிடுவதில்லையா? எதையும் நன்றாக வேக வைத்துச் சமைத்தால் தீங்கில்லை.

இன்னுமொரு அறிவியல் பார்வையையும் குறிப்பிட்டாக வேண்டும். பன்றி இறைச்சியை அதிகளவில் நுகர்வு செய்யும் (அதிகளவில் உண்கிறார்கள்) பத்து நாடுகள் பின்வருமாறு: (மெற்றிக் டன் அளவில் தரப்பட்டுள்ளது)

நாடு
நுகர்வு
சீனா 54,070
ஐரோப்பிய ஒன்றியம் 20,062
ஐக்கிய அமெரிக்கா 9,452
ரஷ்யா 3,160
பிரேசில் 2,811
ஜப்பான் 2,590
வியட்நாம் 2,506
மெக்சிக்கோ 2,270
தென் கொரியா 1,868
பிலிப்பைன்ஸ் 1,659

ஆயுள் எதிர்பார்ப்பு அடிப்படையில் முன்னிலையில் உள்ள 10 நாடுகள் பின்வருமாறு:

நாடு சராசரி
மகாவு 84.7
ஜப்பான் 84.5
சிங்கப்பூர் 83.8
சுவிஸ்லாந்து 83.6
இத்தாலி 83.4
ஸ்பெயின் 83.4
அவுஸ்ரேலியா 83.3
ஐஸ்லாந்து 82.9
தென் கொரியா 82.8
இஸ்ரேல் 82.8

இவற்றில் இஸ்ரேலைத் தவிர அணைத்து நாடுகளும் பன்றி இறைச்சியை உண்பவர்களை அதிகம் கொண்டுள்ளன. வருடத்திற்கு 2,590 மெற்றிக் டன் பன்றி இறைச்சி உண்ணும் ஜப்பானியரின் சராசரி ஆயுள் எதிர்பார்ப்பு 84.5 ஆகும். அவர்கள் பன்றிக் கறி உண்டாலும் ஆரோக்கியமாகவுள்ளனர். ஆனால் பன்றிக்கறியே உண்ணாத சவுதி அராபியர்களின் சராசரி ஆயுள் எதிர்பார்ப்பு 75 ஆகும். இந்தியர்களின் சராசரி ஆயுள் எதிர்பார்ப்பு 69.4 என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆக, அறிவியல் ரீதியாக பன்றி இறைச்சி உண்பது தீங்கானது என்ற சமயவாதிகளின் வாதம் செல்லாக்காசு. அறிவியல் ரீதியாக தீங்கு என அறிவிக்கப்பட்ட மாது, புகை போன்ற போதை வஸ்துக்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதைவிட, பன்றி இறைச்சியை தங்கள் சமயம் தீட்டு எனக் கூறியதால், அதனை அறிவியல் ரீதியாக நியாயப்படுத்த முனைவது முரண்நகை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.