உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள்

21-04-2019 அன்று இலங்கையில் இடம்பெற்ற உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள் என்று அழைக்கப்படும், பொதுமக்களை இலக்கு வைத்து கிறிஸ்தவ கோயில்கள் மற்றம் விடுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் 250 இற்கு மேற்பட்டோரைக் கொன்றும் 500 இற்கு மேற்பட்டோரைக் காயப்படுத்தின. கொல்லப்பட்டவர்களில் 213 இலங்கையர்களும், மிகுதியானவர்கள் இந்தியா (11), ஐக்கிய இராச்சியம் (8), சீனா (6), டென்மார்க் (3), நெதர்லாந்து (3), ஐக்கிய அமெரிக்கா (3), அவுஸ்ரேலியா (2), சவுதி அரேபியா (2), ஸ்பெயின் (2), துருக்கி (2), வங்காளதேசம் (1), ஜப்பான் (1), போர்த்துக்கல் (1), சுவிர்சலாந்து (1) ஆகிய நாடுகளையும் சேர்ந்தவர்கள்.

இது இலங்கையில் பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. பலரும் பலரை குற்றஞ்சாட்டுவதில் குறியாயிருந்தனர். பிரதான குற்றச்சாட்டு இலங்கைச் சேனகர் மேல் விழுந்தது. அவற்றில் சில முக்கிய குற்றச்சாட்டுக்கள் பின்வருமாறு:

  • கிறிஸ்தவர்கள் திருப்பி அடிக்க மாட்டார்கள் என்பதற்காக முஸ்லிம்கள் சிங்களைவர்களைத் தாக்காது, கோழைத்தனமாக கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள்
  • சிங்கள கிறிஸ்தவர்களுக்கு அதிகம் சேதம் விளைவிப்பதைத் தவிர்த்து தமிழ் கிறிஸ்தவர்களை நோக்கி கோழைத்தனமான தாக்குதல் நடத்தியுள்ளனர்.
  • இவர்கள் இலங்கை அரசின் கைக்கூலிகள்


பல முஸ்லிம்களின் பதில் பின்வருமாறு இருந்தது:

  1. அவர்கள் (தாக்குதல் நடத்தியவர்கள்) முஸ்லிம்கள் இல்லை
  2. அமெரிக்க, இஸ்ரேலின் சதியால் உருவாக்கப்பட்ட இஸ்லாமிய இராச்சியத்தில் உள்ளவர்கள்தான் காரணம். முஸ்லிம்கள் இல்லை.


முதலாவது பதில் தப்பித்துக் கொள்ளும் தந்திரோபாயம். இரண்டாவது பதில் பழியை இன்னொருவர் மீது சுமத்தும் தந்திரோபாயம்.

உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகளை பாராட்டிய, மகிழ்ந்த முஸ்லிம்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்!

உண்மையில் முஸ்லிம்கள் இதற்கான சில விடயங்களை பரிசீலனை செய்வது ஏற்புடையது. இல்லாவிட்டால் இலங்கை போன்ற நாடுகளில் முஸ்லிம்களுக்கு நண்பர்கள் அற்றுவிடும்.

இமாம் தவ்கிடி இவ்வாறு குறிப்பிடுகிறார். “சொர்க்கத்தைத் சென்றடைவதற்கான குறுக்குவழி தற்கொலைத் குண்டுவெடிப்பாக இருந்தால், உன்னை அவ்வாறு நம்ப வைப்பவர் உனக்கு முன்பே தன்னைத்தானே வெடிக்கச் செய்ய வேண்டும்”.

இமாம் தவ்கிடி


இந்த தெளிவான கருத்தை மசூதிக்கள் முஸ்லிம்களுக்கு போதிக்காதவரை, புனிதப்போர், இஸ்லாமிய இராச்சியம், ஜிகாத் என் கருத்துகள் தப்பாகத்தான் விளங்கிக் கொள்ளப்படும். குறிப்பாக மசூதிக்கள் வன்முறைக்களுக்கு வகுப்பு நடத்தும் இடமாக இருக்கக்கூடாது. தவறு நடந்த பிறகு “அவன் முஸ்லிம் இல்லை”, “இவன் மூளைச்சலவை செய்யப்பட்டான்” என்ற தப்பித்துக் கொள்ளும் தந்திரோபாயம் எடுபடாது.

வெள்ளிக்கிழழை தொழுகையின் பின் ஏன் முஸ்லிம்களால் வன்முறைகள் முன்னெடுக்கப்பட்டன / முன்னெடுக்கப்படுகின்றன? தொழுகையின் பின் ஆன்மா அமைதி கொள்கிறதா அல்லது வெறி கொள்கிறதா? இஸ்லாமுக்காகப் போரிடும்போது, பெண்கள், வயோதிபர், சிறுவர்களையும் (ஆயுதம் தரிக்காதோர்) கொல்ல முடியாதல்லவா? இதற்கு “அவர்கள்” நியாயப்படுத்தும் காரணத்தை ஏன் இஸ்லாம் வன்மையான பிரச்சாரம் செய்யக்கூடாது?

மதச்சீர்திருத்தம் செய்யாவிட்டால், நீங்கள் யாருக்கோ விலைபோய் உங்கள் வாழ்க்கையைத் தொலைப்பீர்கள்! பின்வரும் படங்கள் இதற்குச் சாட்சிகள்!

mosque
இன முரண்பாட்டினால் முஸ்லிம்கள் இரத்தம் சிந்திய மசூதி, காத்தான்குடி

church
இஸ்லாமிய மதவாதிகளினால் குண்டுத்தாக்குதலுக்குள்ளான தேவாலயம், கொழும்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.