கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து, பெளத்தம் ஆகியன பெரு மதங்களான எண்ணிக்கை அடிப்படையில் காணப்படுகின்றன. அவை முறையே 29.6%, 24.4%, 14.1%, 6.5% ஆகிய வீதங்களில் மக்கள் தொகையினைக் கொண்டுள்ளன.
கிறிஸ்தவம்
இன்று கிறிஸ்தவம் ஐக்கிய அமெரிக்காவில் 229,157,250 மக்கள் தொகையுடன் அதிகம் கிறிஸ்தவர்களைக் கொண்ட நாடாகவுள்ளது. பிரேசில் 169,213,130 மக்களுடனும், ரஸ்யா 114,198,444 மக்களுடனும், மெக்சிக்கோ 106,204,560 மக்களுடனும், நைஜீரியா 80,510,000 மக்களுடனும் முறையே 2 ஆம், 3 ஆம், 4 ஆம் மற்றும் 5 ஆம் இடமாக அதிக கிறிஸ்தவர்களைக் கொண்ட நாடாகவுள்ளன.
இஸ்லாம்
இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளாக முதல் ஐந்து நாடுகளாக இந்தோனேசியா (245,000,000 மக்கள் தொகை), பாக்கிஸ்தான் (203,000,000), இந்தியா (182,000,000), வங்காளதேசம் (142,937,800) மற்றும் நைஜீரியா (90,000,000) ஆகிய நாடுகள் காணப்படுகின்றன.
இந்து
இந்துக்கள் அதிகம் வாழும் நாடுகளாக முதல் ஐந்து நாடுகளாக இந்தியா (957,636,314 மக்கள் தொகை), நேபாளம் (21,354,570), வங்காளதேசம் (14,274,430), இந்தோனேசியா (4,012,470) மற்றும் பாக்கிஸ்தான் (2,603,895) ஆகிய நாடுகள் காணப்படுகின்றன.
பௌத்தம்
பௌத்தர்கள் அதிகம் வாழும் நாடுகளாக முதல் ஐந்து நாடுகளாக சீனா (244,130,000 மக்கள் தொகை), தாய்லாந்து (64,420,000), ஐப்பான் (45,820,000), பார்மா (38,410,000) மற்றும் இலங்கை (14,450,000) ஆகிய நாடுகள் காணப்படுகின்றன.
இவற்றைத் தவிர குறிப்பிடத்தக்க சமயங்களைச் சேர்ந்தோரும் உள்ளனர். 22,892,600 சீக்கியர்கள் இந்தியாவில் உள்ளனர். 6,451,000 யூதர்கள் இஸ்ரேலிலும் 5,700,000 யூதர்கள் ஐக்கிய அமெரிக்காவிலும் உள்ளனர்.
சீன பாரம்பரிய சமயத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 394 மில்லியனாகவும், இனச் சமயங்களை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 300 மில்லியனாகவும், ஆபிரிக்க பாரம்பரிய சமயத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனாகவும், ஆவியியல் சமயத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 15 மில்லியனாகவும், பகாய் மற்றம் ஜைனம் ஆகிய சமயத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை முறையே 7 மில்லியனாகவும் 4.2 மில்லியனாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவை பூகோள அரசியலில் அதிக தாக்கம் செலுத்துவன அல்ல.
அனால் இவற்றுக்கப்பால் சமயம் சாராதவர், இறைமறுப்பாளர்கள். நாஸ்தீகர்கள் என அதிகரித்துச் செல்லும் மக்கள் தொகை 1.1 பில்லியனாகும்! இது உலக சனத்தொகையில் 14 வீதம். இது பெரு மதங்களில் 3 வது இடம் பெறும் இந்து சமயத்தினரின் அளவுக்கு ஒப்பானதாகும். பின்வரும் எண்ணிக்கை ஒப்பீடு சமயம் சாராதவர் வளர்ச்சியைக் காட்டுகிறது.
- கிறிஸ்தவம் - 2.3 பில்லியன்
- இஸ்லாம் - 1.9 பில்லியன்
- சமயம் சாராதவர் – 1.1 பில்லியன்
- இந்து – 1.1 பில்லியன்
- பெளத்தம் – 0.5 பில்லியன்
- பிற சமயத்தவர் – 0.89 பில்லியன்
வீத அடிப்படையில் சமயம் சாராதவர் அதிகம் வாழும் முதல் பத்து நாடுகள் பின்வருமாறு:
- எஸ்தோனியா - 77%
- செக் குடியரசு - 76%
- ஐப்பான் - 76%
- டென்மார்க் - 72%
- சுவீடன் - 64%
- வியட்நாம் - 63%
- மகாவு - 62%
- ஹொங் கொங் - 57%
- பிரான்ஸ் - 54%
- நோர்வே - 52%
இந்த நாடுகள் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்துள்ளதோடு, கல்வி, சுகாதாரம், மனித உரிமை உட்பட்ட பிற விடயங்களிலும் முன்னேற்றம் கண்டுள்ளன. இவற்றில் வியட்நாம் விதிவிலக்காக இருந்தாலும், இன்று வியட்நாமின் வளர்ச்சி குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நாடுகள் கிறிஸ்தவ, பௌத்த சமயங்களில் தாக்கத்திற்குட்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாம், இந்து மதங்களில் உள்ளவர்கள் சமயம் சாராதவர்களாக மாறுவது குறைவாக இருந்தாலும், இருபதாம் நூற்றாண்டு பிற்பகுதியிலும் இருபத்தியோராம் நூற்றாண்டிலும் நிலைமை மெதுவாக மாறத் தொடங்கிவிட்டது.
சமயங்களில் காணப்படும் குறைபாடுகள், அறிவு வளர்ச்சி (பகுத்தறி, தொழிநுட்பம், அறிவியல்) அதிகரிப்பு என்பன சமயங்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்கள். சுயமாகச் சிந்திக்கும் மனித இனம் பெருகப் பெருக சமயங்கள் அழிவை நோக்கிச் கொண்டிருக்கின்றன. இன்று 1.1 பில்லியனாகவுள்ள சமயம் சாராதவர் எண்ணிக்கை 2 பில்லியனைத் தொடும்போது, சமயங்கள் வரலாற்றுப் பாடமாகவும், சமயத்திலுள்ளவர்களை தீண்டத்தகாதவர்களாகப் பார்க்கும் நிலையும் உருவாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.