சட்டக்கல்லூரி மாணவன் |
பேராசிரியர்: நீ எனக்கொரு தோடம்பழம் தருவதாய் இருந்தால், என்ன சொல்லித் தருவாய்?
மாணவன்: இதை எடுத்துக் கொள்ளுங்கள்
பேராசிரியர்: இல்லை. ஒரு வழக்கறிஞராக எப்படித் சொல்வாய் என்று சொல்.
மாணவன்: சென்னை, தமிழ்நாட்டில் வசிக்கும் சத்தியமூர்த்தியின் மகன் புண்ணியமூர்த்தி ஆகிய நான் மனமாரவும் மனப்பூர்வ உடன்பாட்டுடனும் சுயவுணர்டனும் என் விருப்பத்துடனும் எவ்வித பயமற்றும் சலுகையற்றும் அல்லது அழுத்தம் அல்லது பொருத்தமற்ற செல்வாக்கற்றும் இங்கு அறியத்தருவது யாதெனில், தோடை அல்லது ஆரஞ்சு எனப்படும் இப்பழத்தை அதன் மீது எனக்குள்ள உரிமை, உடைமையுரிமை, விரும்பம் ஆகியவற்றின்படி, அதன் தோல், சாறு, விதை, சதைப்பகுதியுடன் கொடுக்கிறேன். நான் நிறைவான, வரம்பற்ற மற்றும் சட்ட உரிமையை இதனை வெட்ட, உரிக்க, பிழிய, குளிரில் சேமிக்க அல்லது உண்ண உங்களுக்கு அளிக்கிறேன். நீங்களும் யாருக்காவது இதனை அதன் தோல், சாறு, விதை, சதைப்பகுதியுடன் கொடுக்க உரிமை பெறுகிறீர்கள். நான் மேலும் அறியத்தருவது யாதெனில், நான் இந்த தோடம்பழத்துடன் கொண்டுள்ள தனிப்பட்ட பொருப்புக்கூறல் மற்றும் மறுத்துரைக்கான சட்டக்கட்டுப்பாடு இன்று வரைக்கும் தொடர்புபட்டிருக்கும். இன்றைய நாளின் பின், இத் தோடம்பழத்துடன் எனக்குள்ள உறவு அற்றுப்போய்விடும்.
பேராசிரியர்: பெருந்தகையே, உன் காலைக் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.