இலங்கையின் மூத்த குடி தமிழர்

வடமாகாண முதலமைச்சரும் முன்னாள் நீதியரசருமான திரு. விக்ணேஸ்வரன் அவர்களின் கருத்துக்கள் இங்கு முக்கியத்துவம் கருதி மீளவும் பதிவிடப்படுகின்றது. 

இலங்கையின் மூத்த குடி தமிழர்
இலங்கையின் மூத்த குடி தமிழர்

10 ஆம் நூற்றாண்டில் சோழர் படையெடுப்பின் போது வந்தவர்களே இலங்கைத் தமிழர்கள் என சிங்களவர் கூறி வருகின்றார்கள். இது சமானிய சிங்களவர் முதல் பேராசிரியர்கள் உட்பட்ட சிங்கள அறிஞர்களின் கருத்தாகவுள்ளது. இலங்கைத் தமிழர்கள் சோழப் படையெடுப்பின்போதுதான் வந்தவர்கள் என்றால், பின்வரும் கேள்விகளுக்கு நேர்மையான பதில்கள் தேவை.

இலங்கையின் மூத்த குடிகளான இயக்கர், நாகர் யார்? இவர்கள் தமிழர்களா, திராவிடரா, ஆரியரா அல்லது சிங்களவர்களா?

விஜயனும் அவனுடைய தோழர்களும் வரும் முன் இங்கிருந்த இனத்தவர் யார்? அவர்கள் பேசிய மொழி என்ன? அவர்களின் சமயம் என்ன?

இலங்கையில் திராவிடர்கள் புத்தரின் பிறப்புக்கு முன்னரே வாழ்ந்துள்ளனர். அவர்கள் பௌத்தரோ அல்லது சிங்களவரோ என்பதை ஏற்றுக் கொள்ள முடியுமா?

சிங்கள மொழி முழுமையான மொழியாகப் பரிணாமம் பெற்றது கி.பி 6 ஆம், 7 ஆம் நூற்றாண்டில்தான். அதற்கு முன் சிங்கள மொழி என்று ஒன்று இருக்கவில்லை இலங்கையிலோ உலகத்திலோ இருக்கவில்லை என்பது தெரியுமா? சிங்கள மொழியானது தமிழ், பிராக்கிருதம், பாளி மற்றும் அக்கால பேச்சு மொழிகளில் இருந்தே உருப்பெற்றது என்ற உண்மை தெரியுமா?

தற்கால மரபியல் சோதனைகள் தற்போதைய சிங்களவர் பண்டைய தமிழர் இனக்குழுவில் இருந்து பிரிந்த வங்காளிகளின் இருந்து பிரிந்தவர்கள் எனக் காட்டுகிறது. ஆகவே, சிங்களவரின் மரபியல் கூறுகள் வாங்காளிகளையும் தமிழரையும் ஒத்துக் காணப்படுவதை அறிவீர்களா?

விஜயனின் தந்தை வாழ்ந்த காலத்திலும் இடத்திலும் சிங்கங்கள் இருக்கவில்லை என்பது தெரியுமா? அதைவிட சிங்கத்தின் விந்தணு ஒரு மானிடப் பெண்ணுடன் சேர்ந்து கருத்தரிக்க முடியாது என்ற அறிவியல் உண்மை தெரியுமா?

இன்றுள்ள சிங்களவர் பலர் தமிழர்களின் வாரிசுகள் என்பது இனம் என்ற முறையில் வட மாகாணம் பூராகவும் எந்தக் காலகட்டதிலும் சிங்கள மக்கள் இங்கு வாழவில்லை. தமிழ் மக்கள் வாழ்ந்த பண்டைய இலங்கையில் பின்னர் ஒரு கட்டத்திலேயே சிங்கள மக்கள் உருவெடுத்தார்கள். அவர்கள் தற்போதைய வட மாகாணத்தின் தெற்குப் பக்கமாக வாழ்ந்து வந்தார்கள்.


பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்த தமது நூலான 'இலங்கைத் தமிழர்வரலாறு - கிழக்கிலங்கையில் நாகரும் தமிழும் - கி.மு 250 – கி.பி 300' என்ற நூலின் தமது பதிப்புரையில் பின்வருமாறு கூறுகிறார் -

'இலங்கையின் மூன்றிலொரு பாகத்திலே தமிழர் சமுதாயம் கி.மு முதலிரு நூற்றாண்டுகளிலும் உருவாகிவிட்டது என்பதையூம் தொடர்ச்சியான ஒரு நிலப்பகுதியிலே தமிழ் மொழி பேசுவோர் வேளிர் ஆட்சியின் கீழமைந்த சிற்றரசுகள் பலவற்றை உருவாக்கிவிட்டனர் என்றும் சொல்லக் கூடிய காலம் வந்துள்ளது. நாகர் தமிழ் மொழி பேசியவர்கள் என்பதாலும், ஆதி இரும்புக் காலப் பண்பாட்டைப் பிரதானமாக அவர்களே இலங்கையிற் பரப்பினார்கள் என்பதாலும் கி.மு ஏழாம் நூற்றாண்டு முதலாகத் தமிழ் ஒரு பேச்சு வழக்கு மொழியாக நிலைபெற்றுள்ளமை உய்த்துணரப்படுகின்றது. தமிழ் மொழியின் தொன்மை பற்றி தமிழ்நாட்டுத் தொல்பொருட் சின்னங்களை ஆதாரமாகக் கொண்டு நிர்ணயிக்க முடியாதவற்றை இலங்கையிற் கிடைக்கின்ற தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுக்களின் அடிப்படையிலேயே சொல்ல முடிகின்றமை ஒரு குறிப்பிடத்தக்க விடயமாகும்'.

ஆகவே இலங்கையின் மூத்த குடிகள் தமிழரே என்று சொல்வதில் தவறு ஏதும் இருப்பதாகக் கூறமுடியாது.

ஸ்ரீலங்கா கார்டியன் என்ற பத்திரிகையின் 25.01.2013 ஆம் திகதிப் பிரதியில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

'சிகல' என்ற சொல் (பாளி மொழியில் சிங்கம்) முதன் முதலில் தென்படுவது தீபவன்ச என்ற நூலில் (கி.பி. 4-5ம் நூற்றாண்டுகளில்). இந்த நூலில் 'சிகல' என்ற சொல்லானது ஒரு முறையே தென்படுகிறது. சிங்கம் என்ற சொல்லின் காரணமாகவே இந்தத் தீவு 'சிகல' என்று அழைக்கப்பட்டது. 5ம் 6ம் நூற்றாண்டு காலத்தைய நூலாகிய மகாவம்சத்தில் 'சிகல' என்ற சொல் இருமுறையே குறிப்பிடப்படுகிறது. ஆனால் கிறீஸ்துவுக்கு முன்னைய இராமாயணத்தில் இத்தீவு இலங்கை (லங்கா) என்றே அழைக்கப்பட்டுள்ளது. தீபவன்ச இவ்வாறான சொற்களைப் பாவிப்பதற்கு முன்னர் இலங்கையில் சிங்கள இனம் என்று ஒன்று இருக்கவில்லை. கி.பி. 4 ஆம், 5 ஆம் நூற்றாண்டுகளில் கூட பின்னர் சிங்கள மொழி என்று அழைக்கப்பட்ட மொழி வழக்கிற்கு வரவில்லை. தீபவன்ச, மகாவன்ச என்ற நூல்களை அம்மொழியில் எழுதும் அளவுக்கு அம்மொழி வெளி வந்திருக்கவில்லை'.

ஆகவே அந்தக் காலத்தில் சிங்களம் பேசாதவர்களை சிங்களவர் என்று அடையாளப்படுத்துவது தவறானது. எனவே இலங்கையின் மூத்த குடிகள் தமிழரே என்பதற்கு தற்போது போதிய சான்றுகள் கிடைத்துள்ளன. இதுவரை சிங்கள அறிஞர்களால் குறிப்பிட்டு வரப்பட்ட வரலாறு பிழையானது. உண்மையை உள்ளவாறு உரைப்பது தவறாகாது. சினமூட்டுதல் தவறு என்றால் எமது உண்மை வரலாறு எஞ்ஞான்றும் வெளிவராது போய்விடும். சினமூட்டியேனும் உண்மைகளை வெளிக் கொண்டுவர வேண்டும்.

Summary of the questions for non-Tamil readers

Sinhalese propaganda says that Tamil people settled in the island in 10th century during Chola invasion. If so, they should give honest answer to the following questions:

Who were the Yaksha and Naga people? Were they Tamils, Dravidians or Sinhalese?

Who/which ethnic people were living in the island before the arrival of Vijya? What was their language and religion?

Will you accept the fact that Dravidians were living in the island before the birth of Buddha?

Sinhalese language got its real formation in AD 6th, 7th century. Do you know that there was no Sinhalese language before the 6th, 7th century in Sri Lanka or anywhere in the world? Do you know Sinhalese language was formed from Tamil, Prakrit, Bali and other regional language?

Do you know that Genetic studies on Sinhalese indicate that Sinhalese ethnic group is based on Tamils and Bengalis?

Do you know that lion’s sperm cannot produce life in (human) woman’s womb?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.