ஊகம்

தொடர்பாடலும் ஊகமும் பிழைத்துவிடலாம். ஆகவே, ஊகிக்க முதல் கவனிக்க வேண்டியது முக்கியம். ஒரு குடும்பத்தில் நடந்த பின்வரும் உரையாடலைக் கவனியுங்கள்.

ஊகம்

மகன்: அம்மா, எனக்கு தண்ணிப் பிரச்சனை உள்ளது.

அம்மா: ஓ! கடவுளே, மகனே உனக்கு இப்போது 6 வயதுதான் ஆகிறது.

தன் கணவன் பக்கம் கோபத்துடன் திரும்பியவர்...

அம்மா: இது உங்கள் பிழை.

அப்பா: என்னுடைய பிழையா? அவனுடன் இன்னும் கொஞ்சம் அதிகமாக நேரம் செலவிட்டிருக்கலாம்.

அம்மா: நம்முடைய ஆறு வயதுப் பையனுக்கு தண்ணிப் பிரச்சனை உள்ளது! அவன் உங்களைப் பார்த்து வளரக்கூடாது!!


அப்பா: நான் ஒன்றுமே செய்யவில்லை. ஆனால், குடும்பத்திற்காக உழைத்த எனக்கு இது கிடைத்த பரிசு இதுதான். நான் போகிறேன்.

அம்மா: நல்லது!

இதனைக் கேட்ட கணவன் வேகமாக வெளியே செல்கிறார்.

அம்மா:  எனக்கு நீங்கள் தேவையில்லை. எனது மகனுக்கும் தேவையில்லை!

தன் மகனை அணைத்தவாறு...

அம்மா: அழாதே மகனே, உங்கள் அப்பா இல்லாமலேயே எல்லாம் சரியாகிவிடும். உன் தண்ணிப் பிரச்சனைப் பற்றி என்னிடம் சொல்லு மகனே.

சிறுவன் அழுகிறான்.

அம்மா:என்னிடம் பேசு. தண்ணிப் பிரச்சனைப் பற்றி என்னிடம் பேசு.

சிறுவன் தன் பாடசாலை புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தைக் காட்டுகிறான்.

மகன்: கோகுலன் ஒரு லீட்டர் தண்ணீரும், காந்தன் இரண்டு லீட்டர் தண்ணீரும் குடித்தால், இருவரும் சேர்ந்து குடித்த குடித்த மொத்த தண்ணீர் எவ்வளவு?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.