நேர முகாமைத்துவம்

நேர முகாமைத்துவத்திற்கான 30 இலகு அறிவுரைகள். நேர முகாமைத்துவம் என்பது ஒரு பரந்த விடயப்பரப்பாகும். ஆயினும், இலகுவில் செயற்படுத்துவதற்கேற்ப முப்பது அறிவுரைகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:
நேர முகாமைத்துவம்
நேர முகாமைத்துவம்


  1. உங்கள் எல்லா நேரத்தையும் கணக்கிட்டு, ஒவ்வொரு முயற்சியிலும் சரியாக செய்து திருப்தி பெறுங்கள்.
  2. நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதில் மகிழ்ச்சியாயிருங்கள்.
  3. நல்லதே நடக்கும் என நம்புபவராக முயன்று, உங்கள் வாழ்வில் நல்லதைத் தேடுங்கள்.
  4. வெற்றிக்கான வழிகளைக் கண்டு கொள்ளுங்கள்.
  5. தோல்விகளைப் பற்றி எண்ணி வருந்தாமல், தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்.
  6. முக்கியமான விடயங்களுக்கு போதுமான நேரம் உள்ளதென்பதை நினைத்துக் கொள்ளுங்கள். முக்கியமாயின், அதைச் செய்ய நேரம் ஒதுக்குங்கள்.
  7. உங்கள் நேரத்தில் இலவசமான நேரம் கிடைக்குமாவென்று பாருங்கள்.
  8. உங்கள் பழைய பழக்க வழக்கங்களை ஆய்வு செய்து, அதை மாற்ற அல்லது இல்லாதொழிக்கப் பாருங்கள்.
  9. காத்திருக்கும் நேர மீளாய்வை பயன்படுத்துங்கள் அல்லது பிரச்சனைகளை அப்பியாசம் செய்ய முயலுங்கள்.
  10. ஒரு காகிகதத்தில் அல்லது பொருத்தமான ஒன்றில் நீங்கள் செய்ய வேண்டிய விடயங்களைக் குறித்துக் கொள்ளுங்கள்.
  11. மாதாந்தம் வாழ்நாள் இலக்குகளை பரிசோதித்து மீளாய்வு செய்து, நாளாந்தம் அந்த இலக்குகள் நோக்கிய முன்னேற்றத்தை உள்ளடக்குங்கள்.
  12. உங்கள் இலக்குகள் மீதான நினைவூட்டல்களை வீட்டிலும் அலுவலகத்திலும் அமையுங்கள்.
  13. நீண்ட கால இலக்குகளை எப்போதும் நினைத்துக் கொள்ளுங்கள்.
  14. ஒவ்வொரு நாள் காலையிலும் அல்லது அடுத்த நாளுக்கு முந்திய இரவு திட்டமிட்டு, முதன்மைப்படுத்துங்கள்.
  15. ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய பட்டியலை தயாரித்து, முக்கியமானவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து, எவ்வளவு முடியுமோ அந்தளவிற்கு முடித்துவிடுங்கள். நாள் முடிவில் அதை மீளாய்வு செய்யுங்கள். 
  16. திட்டமிடப்பட்ட விடயங்கள், குறிப்பாக முக்கியமான விடயங்கள் முடிந்ததும், உங்களுக்கு நீங்களே பரிசளியுங்கள். 
  17. முதன்மையானதை முதலில் செய்யுங்கள்.
  18. உங்கள் மீதும், நீங்கள் முதன்மைப்படுத்திய நியாயப்படுத்தலின் மீதும் உறுதியாய் இருந்து என்னவாயிருந்தாலும் அவற்றில் உறுதியாயிருங்கள்.
  19. நீங்கள் காலம் தாழ்த்தினால், உங்களை நீங்களே “ஏன் நான் தவிர்த்தேன்?” என கேள்வி கேளுங்கள்.
  20. திட்டத்தின் மிகவும் கடினமான பகுதியிலிருந்து ஆரம்பியுங்கள். அதனால், மேசமான விளைவு ஏற்படும் அல்லது ஏனைய சிறிய விடயங்கள் முடிக்கத்தேவையில்லை என கண்டுகொள்வீர்கள்.
  21. அனுகூலமற்ற திட்டங்களில் ஈடுபடும்போது உங்களை நீங்களே பிடித்துவிடுங்கள். அத்துடன் எவ்வளவுக்கு விரைவாக முடியுமோ அந்தளவிற்கு நிறுத்திவிடுங்கள்.
  22. அதி முன்னுரிமை விடயங்கள் அல்லது செயற்பாடுகளில் கவனம் செலுத்த நேரம் ஒதுக்குங்கள். 
  23. ஒரு நேரத்தில் ஒரு விடயத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
  24. நீண்ட இலாபம் கொடுக்கும் இடங்களில் கடுமுயற்சி செய்யுங்கள்.
  25. நீங்கள் சரியாகச் செய்கிறீர்கள் என தெரிந்தபோது, உங்களை நீங்களே முன்னே தள்ளி, உறுதியாக இருங்கள்.
  26. சாத்தியமானபோது சிந்தனையை எழுத்தில் வைத்து; மீளாய்வு, மீள்மதிப்பீடு செய்யவும் இலகுவாக்குங்கள்.
  27. தேவைப்படும்போது நீங்களே குறிப்பிட்ட கால எல்லையை உருவாக்கவும், அதற்கு உண்மையாகவும் இருங்கள்.
  28. தேவைப்படும்போது பொருப்புக்களை மற்றவரிடம் ஒப்படையுங்கள்.
  29. தேவையான ஓய்வினை எடுத்து, பின் செயற்படுங்கள்.
  30. தேவைப்படும்போது அறிவுரை கேளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.