யாரிந்த தமிழீழ விடுதலைப் புலிகள்?

தமிழீழ விடுதலைப் புலிகள் என்பதைக் கேட்டால் பலருக்கும் பலவித மனநிலைகள் உருவாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் என்பது பலருக்கு வெறுப்பு, கோபம், பயங்கரவாதி, தீவிரவாதி போன்ற எண்ணங்களையும், பலருக்கு போராட்டம், விடுதலை, தியாகம், வீரம் போன்ற எண்ணங்களையும், வேறு சிலருக்கு திகில், கிலி போன்ற எண்ணங்களையும் உருவாக்கும்.

யாரிந்த தமிழீழ விடுதலைப் புலிகள்?
யாரிந்த தமிழீழ விடுதலைப் புலிகள்?

தமிழீழ விடுதலைப் புலிகள் நல்லவர்களா கெட்டவர்களா என்ற வாதிப்பிரதிவாதங்கள் ஒருபுறமிருக்க, அந்த இயக்கம் தமிழர் வாழ்வியலில், உலக வரலாற்றில், இராணுவ ரீதியில் ஏற்படுத்திய தாக்கங்கள் சிலவற்றைப் பார்ப்பது எவ்விதத்திலும் பிழையாகாது. விடுதலைப் புலிகள் பற்றி மாற்றுக் கருத்து இருந்தால் நீங்கள் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளலாம். விடுதலைப் புலிகள் பற்றி நல் அபிப்பிராயம் இருந்தாலும் நீங்கள் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளலாம். கற்றுக் கொள்ளலுக்கு எதிரி, நண்பன் என்ற பாகுபாடு தேவையில்லை.

உலகில் உள்ள விடுதலை அமைப்புக்கள் தனக்கென, தனித்துவமான தனியாக இராணுவச் சீருடைகளை அணிந்ததில்லை. விடுதலைப் புலிகள் புலியின் வரியைப் போன்ற சீருடைகளைக் கொண்டிருந்தனர். இராணுவப் பிரிவு பச்சை நிறம் அதிகம் சார்ந்த கிடையான கோடுகளையும், சிறுத்தைப் பிரிவு செங்குத்தான கோடுகளையும் அணிந்தனர். கடற்புலிகள், வான்புலிகள், கரும்புலிகள் என்பன முறையே நீலம், மென் நீலம், கருப்பு ஆகிய நிறங்களில் கிடையான கோடுகளையுடைய சீருடைகளை அணிந்தனர். காவல் துறை மென் நீல நிறத்தில் அணிந்தனர்.

உலகில் உள்ள எந்தவொரு விடுதலை அமைப்பும் போரில் இறந்த தங்கள் வீரர்களுக்கு தனியாக இடம் ஒதுக்கி கல்லறைகள் கட்டியதில்லை. வீடுதலைப் புலிகள் மாவீரர் துயிலும் இல்லங்களை அமைத்தனர். அவை நேர்த்தியாகவும் அழகாகவும் அமைக்கப்பட்டிருந்தன.

உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பும் முப்பாதாயிரத்துக்கு மேற்பட்ட வீரர்களை இழந்ததில்லை. இதில் உயிர்க்கொடை செய்த கரும்புலிகள் எண்ணிக்கையை எந்தவொரு விடுதலை இயக்கத்தின் தற்கொலைப் போராளிகள் கொண்டிருக்கவில்லை.

உலகில் புலிகள் போல் எந்தவொரு விடுதலை அமைப்பினருக்கும் ஏராளமான கட்டமைக்கப்பட்ட சமூக, போராட்ட, செய்தி இணையதளங்கள் இருந்ததில்லை. முகநூல்களிலும் உட்பட்ட சமூக, செய்தி இணையத்தளங்களிலும் தலைவர் பிரபாகரன் பற்றியும், விடுதலைப் புலிகள் போராட்டம் பற்றியும் வந்தது போல், வேறு எந்த விடுதலை அமைப்பினர் பற்றியும் பரவலாக வந்ததில்லை.

விடுதலைப் புலிகளுக்கு உலகினில் வாழும் அனைத்து தமிழர்களிடமும் இருந்து கிடைக்கப் பெற்ற பெரும் செல்வாக்கு போல், உலகினில் வாழும் வேறு எந்த விடுதலை அமைப்புக்கும் கிடைத்ததில்லை. அதேபோல் எந்த நாடும் அவர்களுக்கு நேரடியாக அல்லது மறைமகமாக பாரிய உதவி செய்யவில்லை.

விடுதலைப் புலிகள் போல் எந்த விடுதலை இயக்கமும் முப்படைகளையும் கொண்ட மரபுவழி படையாக வளரவில்லை.  தரைப்படை, வான்படை, கடற்படை, புலனாய்வுத்துறை என்ற படைத்துறைக்கட்டமைப்புக்களுடன், நிதி, நீதி, நிர்வாகம், பொருளாதாரம், அரசியல் போன்ற ஒரு அரசாங்கத்திற்குத் தேவையான கட்டமைப்பை வேறு எந்த விடுதலை அமைப்பும் கொண்டிருக்கவில்லை.

உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பும் விடுதலைப் புலிகளைப் போல் தங்கள் தாயகத்திற்காக தேசியக் கொடி, தேசிய கீதம், தேசியச் சின்னம், தேசிய நிறம், தேசிய மலர், தேசிய விலங்கு, தேசிய மரம், தேசியப் பறவை என்ற தேசியச் சின்னங்களை வைத்துக் கொண்டதில்லை.

இருநாட்டின் அதிபர்களைக் கொல்லவும், தாக்குதல் நடத்தவும், முக்கிய அரசியல் தலைவர்கள், இராணுவ அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தி, கொல்லும் இராணுவ மேலாண்மை வேறு விடுதலை இயக்கத்திற்குக் கிடையாது.

தொடர்ச்சியாக முக்கிய, பலமிக்க இராணுவ முகாம்களை தாக்கியழித்தல், தொடர்ச்சியாக கேந்திர முக்கியத்துவமுள்ள இடங்களை தாக்குதல் போன்ற இராணுவ பலம் கொண்ட அமைப்பாக வேறு இயக்கங்கள் இருந்ததில்லை.

தன் உறுப்பினர் பிடிபடாது தன்னையே மாய்த்துக் கொள்ள, கழுத்தில் நச்சு வில்லைகள் அணிந்து நடமாடிய சிறப்பு வேறு இயக்கத்திற்கு இல்லை.

எதிராளி இனம் உட்பட்ட, எந்தப்பெண்ணையும் பாலியல் வல்லுறவு செய்யவில்லை.

புலிகள்போல் எந்த விடுதலை இயக்கமும் கொல்லப்பட்ட எதிரிப்படையினரை இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யவில்லை.

மது, மாது, புகைபிடித்தல் போன்ற தீய பழக்கங்களை தன் உறுப்பினருக்கு தடைசெய்ததுடன், மீறுவோருக்கு தண்டனை வழங்கும் பழக்கத்தினை எந்த விடுதலை அமைப்பும் செய்ததில்லை.

கிட்டத்தட்ட இரு தசாப்தங்களாக வெளியார் உதவியின்றி தன் இராணுவ, பொருளாதார பலத்தில் குறிப்பிட்ட நிலப்பகுதிகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்து, ஒரு அரசாங்கம் போல் ஆட்சி செய்ததைப்போல் வேறு இயக்கங்கள் செய்யவில்லை.

விடுதலைப் புலிகள் ஆட்சிப் பிரதேசத்தில் காணப்பட்ட சட்ட ஒழுங்கு, குறைவான சமூக குற்றம், இலஞ்ச ஒழிப்பு, குறைவான போதைப் பொருள் பாவனை, குழு வன்முறை இன்மை போன்ற நல்ல அம்சங்கள், இலங்கை அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இல்லை.

சங்ககால இலக்கியம் குறிப்பிட்ட வீரம், மூவேந்தர் கால வீரம் என்பன நீண்ட இடைவேளையின் பின் தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்திலேயே நிகழ்ந்தது. எனவே தமிழர் வீரம் நிகழ்ந்த காலம் என்பன முறையே சங்ககாலம், மூவேந்தர் காலம், புலிகளின் காலம் ஆகும்.

புலிகள் என்றால் தமிழர், தமிழர் என்றால் புலிகள் என மற்ற இனத்தவர் கருத வரலாற்றின் தன் வீரத்தால் எழுதியவர்கள் புலிகள் ஆவர்.

Note: The article is briefly translated into English for non-Tamil readers.

Liberation Tigers of Tamil Eelam aka LTTE could be interpreted into terrorists or liberators as per own view. Here, I would like to highlight some key feature of LTTE that impact on history, military and Tamils life. You should not be a LTTE sympathizer to learn. Even though, you can learn from all including from your enemy.
 • There was no liberation organization that had unique uniform like LTTE. 
 • There was no liberation organization like tigers that built beautiful and symmetrical graveyards for its members.
 • LTTE lost more than 30,000 fighters including more members of suicide squads than any organizations.
 • Tigers had well organized websites and social media structures.
 • Liberation Tigers had all type of military structure such as army, navy and air force, and elite units. Also, it had a government structure including justice, economy, finance, admiration, political, etc. 
 • Unlike other organizations, LTTE declared national flag, national emblem, national color, national flower, national animal, national tree and national bird for proposed motherland. 
 • LTTE is the only organization that killed two heads of two countries and attacked on country head.
 • Tigers had military might that destroyed military structures and attacked on key / import infrastructures.
 • Unlike other rebels, LTTE members always wear cyanide capsule. 
 • There was no accusation of wartime rape crime including on enemy’s woman.
 • Only rebel organization that gave military funeral respect to killed enemy soldiers.
 • LTTE members were prohibited on prostitution/illegal intercourse, alcohol, drugs and smoking habits.
 • Tigers ran a shadow government in their controlled area for nearly two decades. 
 • Unlike under government of Sri Lanka, LTTE controlled area had less crimes including bribery, rape, violent, robbery, etc.
 • LTTE was the organization that restored Sangam era and Chola, Sera & Pandiya warrior life. 
 • LTTE rewrote history that Tigers meant for Tamils and Tamils meant for Tigers.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.