பிள்ளைகளுக்கு உதவக்கூடிய 5 உணவுகள்

பிள்ளைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவக்கூடிய ஐந்து உணவுகள். இந்த 5 உணவுகளும் பிள்ளைகளின் வளர்ச்சிக்கும், உற்சாகத்திற்கும் உதவக்கூடியன.
பிள்ளைகளுக்கு உதவக்கூடிய 5 உணவுகள்

1. வஞ்சிர மீன் (சமன்)
அதிகளவில் புரதம், அடிப்படை கொழுத்த அமிலம் ஆகியன அதிகளவில் காணப்படுகிறது. இது மூளைக்கும் மத்திய நரம்புத் தொகுதிக்கும் பலமான அடித்தள அமைப்பை வழங்குகின்றது. எலும்பு நீக்கப்பட்ட வேகவைத்த மீன் துண்டுகளின் எலுமிச்சை சிறிது விட்டு உண்பது ஏற்றது.

2. சர்க்கரை வள்ளிக் கிழங்கு (வத்தாளைக் கிழங்கு)
இனிப்பான சிற்றூண்டி தேவையென்றால் இதனைப் பயன்படுத்துவது நல்லது. சரிவாக இதனை வெட்டி, இலவங்கப் பட்டை (கருவாப் பட்டை) சிறிது சேர்த்து வறுத்தெடுக்கவும். இதில் அதிகளவு உயிர்வளி இணைவு எதிர்ப்பியும் (antioxidant) விட்டமின் ஏயும் உள்ளது. இது பல்லிற்கும் புதிய நரம்பு உயிரணு உற்பத்திக்கும் ஏற்றது.

3. முட்டைகள்
காலையில் ஒரு முட்டைப் பொரியலை உங்கள் பிள்ளைக்குக் கொடுத்துப்பாருங்கள். பனிரெண்டாம் வாய்பாடு இலகுவில் நினைவுக்கு வரும். முட்டை மஞ்சள் கருவில் கோலின் உயிர்ச்சத்து (choline) அதிகளவில் உள்ளது. கோலின் நினைவு அதிகரிப்பிற்கும், பிள்ளைகளுக்கான முக்கிய ஊட்டச்சத்திற்கும் உதவுகிறது.

4. நீல பெரி, ஸ்ரோபெரி
பெரி (பெர்ரி) பழங்கள் தனியாக அல்லது இன்தயிர் (yogurt) கலந்து உண்ண ஏற்றது. இது மிகவும் அதிகமான உயிர்வளி இணைவு எதிர்ப்பி வழங்கி புலனறிவு, நினைவு ஆகியவற்றை அதிகரிக்க உதவுகின்றது. இதனால் கணிதம் மற்றும் ஒருமுகப்படுத்தப்பட்ட சிந்தனை ஆகியவற்றுக்கு உதவுகின்றது.

5. அவரை விதை
அவரை விதைகள் பலவகையுள்ளன. இவற்றில் ஒமேகா-3 கொழுத்த அமிலம் அதிகளவில் உள்ளது. இதனால் மூளையின் இரத்த குழாய்கள் நன்கு செயற்படவும், உயர் அளவில் நரம்புக் கலங்களை தூண்டவும் உதவுகின்றது. உருளைக் கிழங்கிற்குப் பதிலாக காய்கறிக் கலவை, சமைத்த கொச்சி அல்லது கூழ் என்பவற்றை சிறுது கலந்து உண்ணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.