சோகமான காதல் கதை

ஒரு அழகான கிராமம். அக்கிராமத்தின் தலைவருக்கு ஒரு அழகிய மகள் இருந்தாள். அந்தப் பெண் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு வாலிபனைக் காதலிக்க ஆரம்பித்தாள். அவர்களுக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க நகரத்திற்குச் சென்றிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு பேரூந்து மோதி அந்த வாலிபன் அந்தப் பெண் எதிரிலேயே உயிர் துறந்தான். உடனே அந்தப் பெண்னும் மனநிலை பாதிக்கப்பட்டாள்.

சோகமான காதல் கதை

நீண்ட நாட்களுக்குப் பிறகு நினைவு திரும்பிய அந்தப் பெண் குடும்பத்தினருடன் வசித்து வந்தாள். திடீரென்று ஒரு நாள் அப்பெண்னின் தாய் ஒரு கனவு கண்டாள். அதில் ஒரு தேவதை தோன்றி அவள் மகள் அவளுடைய காதலன் நினைவாக வைத்திருக்கும் உடையில் இருக்கும் இரத்தக் கறையை உடனே துவைக்க வேண்டும் என்றது, இல்லாவிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்தது.


அவள் தாய் கனவை மதிக்கவில்லை. அடுத்த நாள் அதே தேவதை அந்தப் பெண்னின் தந்தையிடமும் கனவில் எச்சரித்தது. ஆனால் அவரும் அதைக் கண்டு கொள்ளவில்லை

அடுத்த நாள் அப்பெண்னின் கனவிலேயே தோன்றி எச்சரித்தது. அவள் உடனே தாயிடம் கனவைப் பற்றிக் கூறினாள். அதன் பிறகே அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது. அவள் தாய் அதை துவைக்கக் கூறினாள். உடனே அந்தப் பெண்னும் அதைத் துவைத்தாள். இருந்தும் தேவதை மறுபடியும் அடுத்த நாள் கனவில் வந்து கறை சரியாகப் போகவில்லை என்று எச்சரித்தது. மறுபடியும் அப்பெண் அத்துணியைத் துவைத்தாள். இருந்தும் கறை போகவில்லை.

அடுத்த நாள் காலையில் அழைப்புமணி ஒலிக்கவே அந்தப் பெண் கதவைத் திறந்தாள். அப்போது கனவில் வரும் அதே பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் முகம் கனவில் வருவதைப் போல் கனிவாக இல்லாமல் வெளிறிப் போய் இருந்தது. உடனே இவள் பயத்தினால் அலறினாள்.

அந்தத் தேவதை கோபத்துடன் கூறியது, "லூசாடி நீ! கற போக, சேஃப் எக்ஸல் போடு" என்றது.

இது என்னுடைய சொந்த ஆக்கம் இல்லை. மின்னஞ்சல் மூலம் கிடைத்தது. சோகக் கதை என நினைத்து வாசித்த எனக்கு, அதன் முடிவு தந்த நகைச்சுவையும், வியாபார உத்தியும் பாராட்டுக்குரியதாய் இருந்ததால் இங்கு மீள் பதிவிடுகிறேன். இதன் ஆக்குனர் யார் என்று தெரியாது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.