நேர்மையான மனிதன்

ஒவ்வொரு ஆணும் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரை இது. ஆணைப் பற்றிய அறிய பெண்களும் படிக்கலாம். பெண்கள் இதைப் படித்தால், ஆண் எவ்வளவு பெறுமதிமிக்கவன் என அறிந்து கொள்ளலாம். ஆண்கள் இதைப்ப படித்தால், படித்து முடிந்ததும் தங்களைப் பற்றி பெருமைப்படலாம்.

நேர்மையான மனிதன்
நேர்மையான மனிதன்
ஒருநாள் ஒரு விறகுவெட்டி ஆற்றுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு மரத்தை வெட்டிக் கொண்டு இருந்தான். அப்போது தவறுதலாக அவனது கோடாரி ஆற்றில் விழுந்துவிட, அவன் சத்தமாக அழுதான். அப்போது கடவுள் அவ்விடத்தில் தோன்றி “ஏன் அழுது கொண்டிருக்கிறாய்?” எனக் கேட்டார்.

விறகுவெட்டி பதிலாக தன் கோடாரி ஆற்றில் வீழ்ந்துவிட்டதையும், அது தன் உழைப்புக்கு மிகவும் முக்கியம் என்பதையும் கூறியனான்.

அதைக் கேட்ட கடவுள் ஆற்றினுள் மூழ்கி, ஒரு பொற்கோடாரியுடன் வெளியே வந்தார். “இதுதானா உன்னுடைய கோடாரி?” எனக்கேட்டார்.

“இல்லை” என்று பதிலளித்தான்.

மீண்டும் கடவுள் ஆற்றினுள் மூழ்கி ஒரு வெள்ளிக் கோடாரிடன் வெளியே வந்தார். “உன்னுடைய கோடாரி இதுவா?” எனக் கடவுள் கேட்டார்.

“இல்லை” என விறகுவெட்டி பதிலளித்தான்.

கடவுள் மூன்றாவது முறையாக ஆற்றினுள் மூழ்கி ஒரு இரும்புக் கோடாரியுடன் வந்தார். கடவள் “இதுதானா உன்னுடைய கோடாரி?” எனக்கேட்டார்.

அதற்கு அவன் “ஆம், இது என்னுடையதுதான்” என்று கூறினான்.

அந்த மனிதனின் நேர்மையால் நெகிழ்ந்துபோன கடவுள், முன்று கோடாரிகளையும் அவனிடம் கொடுத்தார். அவனும் மகிழ்ச்சியாக வீடு சென்றான்.

சிலநாட்களுக்குப் பிறகு, அந்த விறகு வெட்டி மனைவியுடன் ஆற்றங்கரையால் சென்று கொண்டிருந்தான். அப்போது அவன் மனைவி தவறி ஆற்றில் வீழ்ந்துவிட்டாள். அவன் அழுது கொண்டிருந்தான். அப்போது கடவுள் அங்கு வெளிப்பட்டு “ஏன் அழுது கொண்டிருக்கிறபாய்?” எனக் கேட்டார்.

“கடவுளே, ஆற்றில் என் மனைவி வீழ்ந்துவிட்டாள்” எனப் பதிலளித்தான்.

அதைக் கேட்ட கடவுள் ஆற்றினுள் இறங்கி, நயன்தாராவுடன் வெளியே வந்தார். “இவள்தானா உன்னுடைய மனைவி?” எனக்கேட்டார்.

“ஆம்” என அழுது கொண்டு பதிலளித்தான்.

கடவுள் கோபத்துடன் “நீ பொய் சொல்லிவிட்டாய்! இவன் உன் மனைவியல்ல!” என்றார்.

விறகுவெட்டி பதிலாக, “ஓ, கடவுளே! என்னை மன்னியுங்கள். என் மனைவி நயன்தாரா இல்லையென்று சொன்னால்? நீங்கள் இரண்டாவது முறை அனுஷ்காவுடன் வருவீர்கள். அதற்கும் நான் ‘இல்லை’ என்று பதிலளிக்க, நீங்கள் மூன்றாவது முறையாக என் மனைவியுடன் வருவீர்கள். அதற்கு நான் ‘ஆம்’ என்று பதிலளிக்க, நீங்கள் மூவரையும் என்னிடம் கொடுத்துவிடுவீர்கள். நானே ஒரு ஏழை. என்னால் மூவரையும் கவனிக்க முடியாது. அதனால்தான் நயன்தாராவைக் கண்டதும் ‘ஆம்’ என்று பதிலளித்தேன்” என்றான்.

இந்த கோடாரிக் கதையின் அல்லது விறகுவெட்டியின் கதையின் மூலம் அறியப்படுவது என்னவெனில்; ஆண் பொய் சொல்லும்போது அது நல்லதாகவும் நேர்மையானதாகவும் இருக்கும். இது மற்றவர்களின் நன்மைக்காகவும் அமையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.