இஸ்லாமிய அச்சம் (இஸ்லாமேபோபியா)

முகநூல் வழியாக கீழே உள்ள ஒரு கருத்துச் சித்திரத்தைக் காண முடிந்தது. இஸ்லாம் எனும் நீரோட்டம் கிறிஸ்தவம் எனும் தடுப்பு அணையில் தடுக்கப்பட்டிருப்பதையும், அணைக்குப் இந்தப் பக்கம் குடியிருப்புக்கள் இருப்பதையும் காண முடிகிறது. அணையில் சிறிது வெடிப்பு இருப்பதையும் காண முடிகிறது.

இஸ்லாமிய அச்சம் (இஸ்லாமேபோபியா)
இஸ்லாமிய அச்சம் (இஸ்லாமேபோபியா)
இந்தப் படம் அதிகமாக மேலத்தேய முகநூல் பயனர்களிடம் பகிரப்பட்டது. இந்தக் கருத்துச் சித்திரத்தை கற்பனை கலந்து பார்த்தால், “ஐயோ, அணை உடைந்தால் அந்த அமைதியான இடத்தை நீர் மிகவும் ஆக்ரோசமாக அழித்துவிடுமே” என்று எண்ணத் தோன்றும். இதுதான் இன்றைய மேலத்தேய நாடுகளிலுள்ள மக்களிடம், பொதுவாக வலதுசாரிகளிடமும், தீவிர கிறிஸ்தவர்களிடமும் காணப்படும் கருத்தாகும்.

உலகம் முழுக்க ‘இஸ்லாமிய அச்சம்’ என்ற, ஆங்கிலத்தில் “இஸ்லாமேபோபியா” (Islamophobia) என்று அழைக்கப்படும் ஒருவித சமூக அச்சவுணர்வு அல்லது மனநிலை உள்ளது. மேலத்தேய கிறிஸ்தவர்கள், இந்திய இந்துக்கள், இலங்கை பௌத்தர்கள் என இந்த மனநிலை இஸ்லாமியர்களுக்கு எதிராக செயற்படத் தூண்டுவது தவிர்க்க முடியாது. இதற்கான காரணம் முஸ்லிம்கள் மதம் பரப்புகிறார்கள், தங்கள் மதம், காலச்சாரம், பண்பாடு போன்ற இவர்களால் அழிக்கப்படும் என நம்புகிறார்கள். வரலாற்றில் இஸ்லாமைப் பின்பற்றியவர்கள் செய்த ஆக்கிரமிப்புப் போர்கள், குரான் குறிப்பிடும் சில “சிக்கல்” உள்ள வசனங்கள் என்பன இந்த மனநிலைக்குக் காரணமாகும். மேலும், தற்காலத்தில் இஸ்லாமின் பெயரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் வன்முறைச் சம்பவங்கள், தீவிரவாதச் செயற்பாடுகள், மதம் பரப்பல் செயற்பாடுகள் என்பன மேலும் இக்கருத்திற்கு வலுவூட்டுகின்றன.

மேற்குலகைப் பொறுத்த வரை கிறிஸ்தவம் ஒருவித உறங்கு நிலையில் உள்ளது. பலர் கடவுள் இல்லை என்றோ அல்லது அதில் ஈடுபாடற்றுக் காணப்படுகின்றனர். அங்கு நாஸ்தீகருக்கும் கிறிஸ்தவர்களுக்குமிடையே கருத்தியல் சண்டை இடம்பெறுகின்றது. அங்கு செல்லும் முஸ்லிம் அகதிகள் எண்ணிக்கைப் பெருக்கம், அவர்கள் அங்கு தங்கள் சமய விடங்களுக்கு காட்டும் முன்னுரிமை என்பன அங்குள்ளவர்களைச் சினமூட்டுகிறது. வரலாற்றில், கிறிஸ்தவம் பலமடைந்ததும் ஐரோப்பாவில் இருந்த இஸ்லாமை விரட்டியது. அதன் பின் நடந்த கைத்தொழல் புரட்சி தனிநபர் சுதந்திரத்திற்கு வழி ஏற்படுத்தி, கிறிஸ்தவம் தன் கடுமையைக் குறைக்க வேண்டியதாற்று. அதன்பின் கிறிஸ்தவர்கள் பெயரளவுக் கிறிஸ்தவர்களாகவே வாழ்கின்றனர். அவர்கள் நினைப்பதுபோல், இஸ்லாம் அவர்கள் நாட்டை ஆக்கிரமித்து இஸ்லாமிச் சட்டங்களை நடைமுறைப்படுத்தினால் எப்படியிருக்கும்? தற்போதுள்ள சுதந்திரம் மறுக்கப்படும் என்பது முதல் உண்மை. அதன்பின் சமய, கலாச்சார இழப்புக்கள் ஏற்படும். ஆகவே இதற்கு பதிலடி கொடுக்கு அவர்கள் தேர்ந்தெடுத்த ஆயுதம் “மதம்”.

கிறிஸ்தவமும் இஸ்லாமும் பல போர்களைச் செய்துள்ளது. வெற்றி, தோல்வி மாறி மாறி ஏற்பட்டாலும், இன்று வரையிலும் கிறிஸ்தவ அல்லது மேலத்தேய நாடுகளின் கையே ஓங்கியுள்ளது. இஸ்லாமியர்களை ஒன்றிணைப்பது அவர்கள் சமயத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவம் ஆகும். கிறிஸ்தவர்களில் பெரும்பாண்மையானோர் அவ்வாறு இல்லை. அவர்களைச் சார்ந்த பலர் இன்று நாஸ்தீகர் அல்லது சமயம் அற்றவர்கள். ஆகவே இஸ்லாமிய அச்சத்தில் (நீர்) இருந்து அவர்களைப் பாதுகாக்கத் தேவையானது கிறிஸ்தவம் (அணை)  ஆகும். இதில் உள்ள சாத்தியத்தையும் உண்மையையும் மறுக்கவியலாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.