முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பேஸ்புக் அடிமைத்தன அளவுகோல்

இன்று இணையத்தை கைபேசியிலோ, கணனியிலோ பயன்படுத்தும் பலர் பேஸ்புக்கையும் (முகநூல்) பயன்படுத்தத் தவறுவதில்லை. ஆனால், பலர் மெது மெதுவாக இதற்கு அடிமையாகிவிடும் நிலை உள்ளது. நீங்கள் பேஸ்புக் பாவனையாளரா? அதன் மீதான உங்களது ஆர்வத்தை அளவிடும் பொருட்டு ஆராய்ச்சியாளர்கள் பேஸ்புக் அடிமைத்தன அளவுகோலொன்றினை உருவாக்கியுள்ளார்கள்.
பேஸ்புக் அளவுகோல்

நோர்வே நாட்டின் பேர்கன் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களே இதனை உருவாக்கியுள்ளனர். இதன் பெயர் ‘பேர்கன் முகநூல் அடிமைத்தன அளவுகோல்’ (Bergen Facebook Addiction Scale) ஆகும். சுமார் 400 பேரிடம் மேற்கொண்ட ஆராய்ச்சினையை அடுத்தே இதனை அவர்கள் தயாரித்துள்ளனர்.

பேர்கன் முகநூல் அடிமைத்தன அளவுகோல்


* நான் அடிக்கடி மிகவும் அதிகமான நேர்த்தை பேஸ்புக்கில் செலிவிடுகிறேன். (நான் நினைப்பதைவிட அதிக நேரம் அதில் செலிவிடுகிறேன்.
ஆம் | இல்லை 

* நான் இரவில் அதிக நேரம் போஸ்புக்கில் இருப்பதால், காலையில் அடிக்கடி சோர்வுக்குள்ளாகிறேன்.
ஆம் | இல்லை 

* நான் பேஸ்புக்கில் மிகவும் அதிக நேரம் செலவு செய்வது பற்றி என் நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஆம் | இல்லை 

* நான் வேலை தொடர்பற்ற காரணங்களுக்காக பேஸ்புக்கில் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாகச் செலவு செய்கிறேன்.
ஆம் | இல்லை 

* பேஸ்புக் பாவணை அனுமதிக்கப்படாதபோதும் வேலை செய்யுமிடத்தில் அல்லது பாடசாலையில் நான் அடிக்கடி பயன்படுத்துகிறேன்.
ஆம் | இல்லை 

* ஒரு நாள் முழுவதும் என் பேஸ்புக்கைப் பாவிக்காதுவிட்டால், நான் அதனை மிகவும் கடினமானதாக உணர்கிறேன்.
ஆம் | இல்லை

* பேஸ்புக்கில் அதிக நண்பர்களை சேகரிக்க நான் முயன்றுள்ளேன்
ஆம் | இல்லை 

* என் பேஸ்புக் நண்பர்கள் பலர் உண்மையில் என்னுடைய உண்மையான நண்பர்கள் இல்லை.
ஆம் | இல்லை 

* அளவுக்கதிகமான பேஸ்புக் பாவனையால் என்னுடைய வேலை அல்லது பாடசாலை செயற்பாடு பாதிக்கப்பட்டது.
ஆம் | இல்லை 

* அளவுக்கதிகமான பேஸ்புக் பாவனையால் என்னுடைய உறவுகள் பாதிப்புக்குள்ளதகின.
ஆம் | இல்லை 

* பேஸ்புக்கில் விளையாட்டுக்களை விளையாடுவதற்காக நான் அதிக நேரம் செலவிடுகிறேன்.
ஆம் | இல்லை 

* பேஸ்புக்கில் நான் ஒன்றைப் பதிவிடும்போது, அதற்கான கருத்துக்கள் கிடைக்காவிட்டால் நான் ஏமாற்றத்திற்குள்ளாகிறேன்.
ஆம் | இல்லை 

* நான் தனிப்பட்ட முறையில் ஒருவடன் பேசுவதைவிட பேஸ்புக்கில் பேசவே விரும்புகிறேன்
ஆம் | இல்லை 

* நான் பேஸ்புக் பயன்படுத்தும் நேரத்தைக் குறைக்க முயன்றும் பயனில்லை.
ஆம் | இல்லை 

* மற்ற செயற்பாடுகள் இணையத்தில் செய்வதைவிட பேஸ்புக்கிலேயே அதிக நேரத்தைச் செலவிடுகிறேன்.
ஆம் | இல்லை 

* மற்றப் பொறுப்புக்களைத் தவிர்க்க பேஸ்புக்கை அடிக்கடி பயன்படுத்துகிறேன்.
ஆம் | இல்லை 

* பேஸ்புக் பயன்படுத்தத் தொடங்கியதிலிருந்து மற்ற செயற்பாடுகளுக்கான நேரத்தை குறைத்துவிட்டேன்.
ஆம் | இல்லை 

* பேஸ்புக்கில் பல நண்பர்கள் இருந்தாலும், நான் தனிமையை உணர்கிறேன்.
ஆம் | இல்லை 

* மற்றவர்களுடன் வெளியே சென்றாலும் பேஸ்புக்கில் அடிக்கடி நுழைகிறேன்.
ஆம் | இல்லை 

* பேஸ்புக்கை காலையில் பார்ப்பது, முதலில் செய்ய வேண்டிய வேலைகளில் ஒன்றாகும்.
ஆம் | இல்லை 

* இரவில் இறுதியாகச் செய்யும் வேலைகளில் ஒன்றாக பேஸ்புக்கை பார்ப்பதும் உள்ளது.
ஆம் | இல்லை 

* மன அழுத்தம் அல்லது மனச்சோர்வு ஏற்படும்போது பேஸ்புக்கை பயன்படுத்தினால் நலமான உணர்கிறேன்.
ஆம் | இல்லை 

* பேஸ்புக் பாவனையால், நான் அடிக்கடி பாடசாலைக்கு, வேலைக்கு, கூட்டத்திற்கு அல்லது சந்திப்புக்கு தாமதமாகச் செல்கிறேன்.
ஆம் | இல்லை 

* என்னை நண்பர் ஒருவர் பேஸ்புக்கில் இணைக்காதுவிட்டால், நான் மிகவும் மனக்குழப்பத்திற்கு உள்ளாகிறேன்.
ஆம் | இல்லை 

* எனது நண்பர்கள் என்ன செய்கிறார்கள் / சொல்கிறார்கள் என்பதை தானியக்கமாக அறிவிக்கும்படி நான் எனர் பேஸ்புக்கை அமைத்துள்ளேன்.
ஆம் | இல்லை 

* என்னையும்விட ஒருவர் அதிகமான நண்பர்களை பேஸ்புக்கில் கொண்டிருந்தால், நான் கவலையாக உணர்கிறேன்.
ஆம் | இல்லை 

* ஒரு மாதத்திற்கு பேஸ்புக்கை கைவிடுவதென்பது சாத்தியமில்லை உணர்கிறேன்.
ஆம் | இல்லை 

* “உண்மை வாழ்க்கையில்” என ஒருவர் பேஸ்புக்கில் சொல்வது என்னை அடிக்கடி குழப்பத்துக்குள்ளாக்கிறது.
ஆம் | இல்லை 

* நான் ஒன்றுமே செய்வதற்கில்லை என சலிப்பாக உணர்கையில் நான் அடிக்கடி பேஸ்புக்கைப் பயன்படுத்துகிறேன்.
ஆம் | இல்லை 

புள்ளிகள்:

எத்தனை “ஆம்” பெற்றீர்கள் என உண்மையாகக் கணக்கிடுங்கள். நீங்கள் பெற்றுக் கொண்ட மொத்த எண்ணிக்கைக்கேற்ப கீழே தரப்பட்ட பந்தியை வாசியுங்கள்.

0 - 5:
நீங்கள் ஒரு இலகு பேஸ்புக் பயனாளர். இது உங்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்பில்லை.

6 - 10:
பேஸ்புக் உங்கள் வாழ்க்கைச் செயற்பாட்டில் ஒரு பகுதியாகிவிட்டது. இப்போது நீங்கள் அதிக நேரம் செலவிடுகிறீர்கள்.

11 - 20:
உங்கள் பேஸ்புக் பாவனை ஆரோக்கியமானதல்ல அல்லது ஆட்டுவிக்கப்படுகிறீர்கள். நீங்கள் பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுவது உண்மை வாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

21+: 
உங்கள் வாழ்க்கை பேஸ்புக்கைச் சுற்றியிருக்கிறது. உங்களால் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு பேஸ்புக்கை பயன்படுத்தாமலிருப்பது கடினமானது. உங்கள் உறவுகள், பாடசாலை அல்லது வேலை ஆகியன பேஸ்புக்கால் பாதிப்படையலாம். பேஸ்புக் அடிமைத்தனத்திலிருந்து மீள்வது பற்றி சிந்திக்க வேண்டும்.

மேற்காட்டப்பட்டுள்ள அட்டவணையின் மூலம் தாம் பேஸ்புக்கிற்கு அடிமையாகிவிட்டோமா? என சந்தேகப்படுபவர்கள் எவராக இருந்தாலும் இதில் பெறும் புள்ளிகள் மூலம் தம்மை சுயமாக கணிப்பிட்டுக்கொள்ளலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தமது ஆராய்ச்சி தொடர்பில் சுவாரஸ்யமான தகவல்கள் சிலவற்றையும் வெளியிட்டுள்ளனர்.

  • போதைப்பொருள் மற்றும் மதுபானங்களுக்கு அடிமையானவர்கள் எத்தகைய அறிகுறிகளைக் கொண்டிருப்பார்களோ அதே போன்ற அறிகுறிகளையே பேஸ்புக்கிற்கு அடிமையானவர்களும் கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 
  • அதிக கூச்ச சுபாவம் கொண்டவர்களே பேஸ்புக்கிற்கு அதிகமாக அடிமையாவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். 
  • பெரியோரை விட இளம்வயதினரே பேஸ்புக்கிற்கு அதிகமாக அடிமையாவதாகவும், தாம் சமூக பாதுகாப்பற்றதாக இருக்கின்றோம் என உணர்பவர்கள் பேஸ்புக்கினை அதிகம் உபயோகிப்பதாகவும் ஆய்வின் முடிவுகள் சுட்டிக்காட்டியுள்ளன. 
  • பெண்கள் அதிகம் பேஸ்புக்கிற்கு அடிமையாவதாகவும், இப்பழக்கத்தினால் தூங்கும் நேரம்,காலையில் கண்விழிக்கும் நேரம் என அனைத்தும் பாதிக்கப்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முக்கியமான சுகாதாரக் குறிப்புகள்

நாம் அன்றாடம் செய்யும் வேலைகளிலும், சாதாரண செயற்பாட்டின்போதும் விடும் தவறுகள் பாரிய எதிர்வினையைத் தோற்றுவிக்கலாம். சில முக்கிய சுகாதாரக் குறிப்புகள் பின்வருமாறு:


செல்பேசியில் பேசும்போது வலது காதைப் பயன்படுத்தவும்.ஒரு நாளில் இரு தடவைகள் கோப்பி குடிக்க வேண’டாம்.மாத்திரைகளை உட்கொள்ளும்போது குளிர் நீரைப் பயன்படுத்த வேண்டாம்.மாலை 5 மணிக்குப் பின் பாரிய உணவை உட்கொள்ள வேண்டாம்.தேனீர் அருந்தும் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள்.எண்ணையுள்ள உணவை சாப்பாட்டில் குறைத்துக் கொள்ளவும்.காலையில் நீரை அதிகமாகவும், இரவில் குறைவாகவும் பருகுங்கள்.செல்பேசி மின்னேற்றிகளை தூரமாக வைத்திருக்கவும்.நீண்ட நேரம் காதில் பொருத்தும் ஒலிவாங்கிக் கருவிகளை பயன்படுத்த வேண்டாம்.இரவு 10 மணி முதல் காலை 6 மணி முதல் உள்ள நேரம் உறங்குவதற்கு ஏற்ற சிறப்பான நேரம்.நித்திரைக்கு முன், மருந்து உட்கொண்ட உடனே படுக்க வேண்டாம்.செல்பேசி மின்கலம் மிகவும் குறைவான மின்சாரத்தைக் கொண்டிருக்கும்போது பயன்படுத்த வேண்டாம். அப்போது 1000 மடங்கு கதிர்வீச்சு வெளிப்படும்.

யானையும் குச்சியும்

யானையை எதில் கட்டிப் போடலாம்? யானையை ஒரு சின்னக் குச்சியில் கட்டிப் போட்டலாம். இது உண்மையா என நீங்கள் கேட்கலாம். ஆம் என யானையும் குச்சியும் (The Elephant And The Twig) என்ற நூல் கூறுகின்றது. ஜெஃப் தாம்ஸன் எழுதிய இந்த நூல் சுய விழிப்புணர்வுக்கும் சுய முன்னேற்றத்திற்கும் உகந்ததால், இது “நேர் சிந்தனைக் கலை” என்று அழைக்கப்படுகின்றது.


பெரிய மரங்களையே சாய்த்துவிடும் யானைக்கு குச்சி ஒன்றுமில்லைதான். ஆனால், குச்சியை ஒன்றுமில்லை என நினைக்காதவாறு அதற்கு மூளைச்சலவை செய்யப்பட்டுவிட்டது.

யானை குட்டியாய் இருக்கம்போது, ஒரு கனமான இரும்புச் சங்கிலியில் கட்டிப்போட்டுவார்கள். குட்டி யானை அதிலிருந்து விடுபடுவதற்கு பல முயற்சிகள் செய்து தோற்றுவிடும். சில நாட்கள் போராடிப் பார்த்த குட்டி, ஒருகட்டத்தில் தன்னால் இதிலிருந்து விடுபடமுடியாது என்ற முடிவுக்கு வந்து, பிணைப்பிலிருந்து விடுதலை பெறும் முயற்சியை நிறுத்திவிடும். வளர்ந்தும், தன்னைப் பிணைத்திருப்பது சாதாரண விடயம் என்று நினைப்பதில்லை.


நாமும் இந்த யானையைப் போல்தான். நமது திறமைகள் எவை, நம்மால் எதையெல்லாம் சாதிக்க முடியும் என்பதை விளங்கிக்கொள்ளாமல், சாதாரண மனத…

கண்ணதாசன் பார்வையில் காதல்

கண்ணதாசன் பார்வையில் காதல் பற்றி அவர் குறிப்பிட்ட பதிவுகளில் (காதல் பொன்மொழிகள்) சில பின்வருமாறு:இளமையிலே காதல்தான் ஒவ்வோர் உயிருக்கும் முதற்கொள்கை.

காதல் உன்னதமானதென்று முதன் முதலில் சொன்னவனே, அதில் தோல்வி கண்டவனாகத்தான் இருந்திருப்பான்.

அர்த்தமில்லாமல் வாழ்கிறோம் என்பதை உணரும்போது, சிலபேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். நிறையபேர் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.

தன்னைப் பார்ப்பதற்காக மனிதன் கண்ணாடியைப் படைக்காமலிருந்தால், உலகத்தில் காதலில் பாதி குறைந்திருக்கும். கண்ணையே படைக்காமல் இருந்திருந்தால், காதல் எவ்வளவு புனிதமாக இருந்திருக்கும்.

சரித்திரத்தில் கணிசமான அளவு போர்க்களங்களை இதுதான் ஏற்படுத்திற்று.

கண்ணும் கண்ணும் பார்க்கின்றன. மனமும் மனமும் நினைக்கின்றன. உடலும் உடலும் துடிக்கின்றன. இது காதல்.

நீதிமன்றத்தில் பாதி மன்றம் இதனால் விளையும் தகராறுகளைக் கவனிக்கிறது. தற்கொலைகளிலே முக்கால்வாசிக்கு இது தலைமை வகிக்கிறது.

காதல் இரண்டு வகைப்படும். ஒன்று, தோல்வியுறுவது. மற்றொன்று, முப்பது வயதுக்கு மேல் வருவது.

இயற்கையை முறியடிக்க, எல்லா வழிகளையும் கண்ட விஞ்ஞானிகள், காதலையும் முறியடிக்க முயன்றார்கள…