மைசூர்ப் பருப்பு

பருப்பு என்பது தானியங்களை அல்லது தாவர விதைகளை குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டாலும், பொதுவாக மைசூர்ப் பருப்பை குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மலிவு விலை, சுவை ஆகிய காரணங்களினால், இது இலங்கை, இந்தியா உட்பட்ட தென்னாசிய உணவுகளில் முக்கிய இடம் வகிக்கிறது. டால் (Dal) என்ற உணவுத் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் பருப்பு வகைகயில் இது முக்கிய இடம் பெறுகிறது. இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் பொதுவாக டால் என்பது மைசூர்ப் பருப்பினால் உருவாக்கப்பட்டும் உணவைக் குறிக்கும். பல இடங்களில் இது பொதுவாக “பருப்புக் கறி” என அழைக்கப்படுகிறது.

மைசூர்ப் பருப்பு
மைசூர்ப் பருப்பு
மைசூர்ப் பருப்பு ஆங்கிலத்தில் “லென்டில்” (lentil) எனப்படும் தாவரத்தில் இருந்து பெறப்படுகின்றது. இதன் தாவரவியல் பெயர் “லென்ஸ் குலினரிஸ்” (Lens culinaris) என்பதாகும். இதில் பல வகைகள் காணப்பட்டாலும் சிவப்பு நிற மைசூர்ப் பருப்பு அதிகம் விரும்பப்படுகிறது. கனடா, இந்தியா, அவுஸ்ரேலியா, துருக்கி, நேபாளம் ஆகிய நாடுகளில் மைசூர்ப் பருப்பு அதிகம் பயிரிடப்படுகிறது.

மைசூர்ப் பருப்பில் காணப்படும் ஊட்டச்சத்து விபரங்கள் பின்வருமாறு.ஊட்டச்சத்து மைசூர்ப் பருப்பு
(100 கிராம்)
ஆற்றல் 1,477 kJ (353 kcal)
காபோவைதரேற்று 63 g
கொழுப்பு 1 g
புரதம் 25 g
தயமின் பி1 0.87 mg
ரிபோஃபிளாவின் பி2 0.211 mg
நியாசின் பி3 2.605 mg
உயிர்ச்சத்து பி5 2.14 mg
உயிர்ச்சத்து பி6 0.54 mg
இலைக்காடி பி9 479 μg
உயிர்ச்சத்து சி 4.5
கல்சியம் 56 mg
இரும்பு 6.5 mg
மக்னீசியம் 47 mg
பொஸ்பரஸ் 281 mg
பொட்டாசியம்677 mg
சோடியம் 6 mg
துத்தநாகம் 3.3 g
நீர் 8.3 g

மைசூர்ப் பருப்பிற்கும் சில முக்கிய உணவுப் பொருட்களுக்குமிடையிலான ஊட்டச்சத்து வேறு விபரங்கள் பின்வருமாறு. (100 கிராமுக்கு ஏற்ப தரப்பட்டுள்ளது)

உணவு நார்ப்பொருள் புரதம் கொழுப்பு
மைசூர்ப் பருப்பு 10.7 கி 25 கி 1 கி
கோதுமை 20.6 21.3 2.5
அரிசி 1.6 8 0.8
சோயா 44.2 174 95
பால் 0 61 61.8
கரட் 41.1 14.7 3.6
உருளைக் கிழங்கு 14.4 13 0.6

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.