கிறிஸ்தவ தேவாலயத்தை கள்வர் குகையாக்கும் கிறிஸ்தவர்கள்

கிறிஸ்தவ வேதாகமத்தில் பின்வரும் பகுதிகளைக் காணலாம். இப்பகுதி லூக்கா 19:46-46 வசனங்களில் வாசிக்கலாம்.

நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கினீர்கள்
நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கினீர்கள்

இயேசு கோவிலுக்குள் சென்று அங்கு விற்பனை செய்து கொண்டிருந்தோரை வெளியே துரத்தத் தொடங்கினார். அவர்களிடம், 'என் இல்லம் இறைவேண்டலின் வீடு' என்று மறைநூலில் எழுதியுள்ளதே; ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கினீர்கள்' என்று கூறினார்.

இயேசு ஒரு யூதர். அவர் யூதர்களின் கோயிலுக்குச் சென்றபோது பலர் கோயிலில் வியாபாரத்தையே முதன்மைப்படுத்தி, ஆலயத்திற்கு உரிய மரியாதையைக் கொடுக்கவில்லை. அதனால் சினம் கொண்ட இயேசு அவர்களை வெளியே துரத்தத் தொடங்கினார்.

முகநூலில் இயேசு கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் ஆன்மீகத் தலைவரான பாப்பரசரை வெளியே துரத்தவது போன்ற ஓர் படத்தைக் காண நேர்ந்தது. ஒரு படம் ஆயிரம் சொற்களுக்குச் சமம் என்று சொல்வதுண்டு. இங்கும் இப்படம் ஆயிரம் சொற்களின் விளக்கத்தைத் தருகிறது. கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களை புண்படுத்தும் நோக்கில் இங்கு பகிரவில்லை. உண்மை என்னவென்று எல்லோருக்கும் தெரியும். அனைத்து மதங்களும் தத்தமது நிலை இழந்து நிற்பதை பகுத்தறிவு நிறைவுள்ள எந்த மனிதனும் அறிவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.