முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இஸ்லாமுக்கு கெட்ட பெயர் வாங்கிக் கொடுத்த முதல் ஐந்து பேர்

இஸ்லாம் மதம் பற்றிய மற்றவர்களுக்கு மோசமான கருத்தினை ஏற்பத்தியவர்களில் முதல் ஐந்து பேர் பின்வருமாறு. இறங்கு வரிசைப்படி இவர்களின் பெயர் தரப்பட்டுள்ளது.
இஸ்லாமுக்கு கெட்ட பெயர் வாங்கிக் கொடுத்த முதல் ஐந்து பேர்

ஒசாமா பின்லாடன் (Osama Bin Laden) 
அமெரிக்காவின் உலக வர்த்தக மையக் கட்டங்கள், இராணுவ தலைமையகம் ஆகியவற்றின் மீது 9/11 தாக்குதல்கள் என்றழைக்கப்பட்ட தாக்குதலின் பிரதான காரண கர்த்தா ஒசாமா பின்லாடன் ஆவார். இதைத்தவிர பல தாக்குதல்களுக்கும், பயங்கரவாத செயற்பாடுகளுக்கும் காரணமான இவரைக் கைதுசெய்ய பல நாடுகள் முயன்றன. இறுதியில், 1 மே 2011 அன்று அமெரிக்க சிறப்பு படைப்பிரிவான சீல் “நெப்டியூன் ஈட்டி நடவடிக்கை” என்று பொருள் தரும் நடவடிக்கை மூலம் கொல்லப்பட்டார். 40 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தை எடுத்துக் கொண்ட இந்நடவடிக்கை பாக்கிஸ்தானில் ஒசாமாவின் ஒரு மறைவிடத்தில் மேற்கொள்ளப்பட்டது. இவரது மரணம் மரபியல் அடையாளப்படுத்தல் மூலம் உறுதிசெய்யப்பட்டது. 6 நாட்கள் கழித்து அவரின் மரணத்தை அல்கைதா இயக்கம் உறுதி செய்தது.

சதாம் குசைன் (Saddam Hussein)
பாத் கட்சி மூலம் துணை அதிபராக 1968 இல் தெரிவான சதாம் குசைன், அதிபர் பதவி விலகியதும் 1979 இல் ஈராக்கின் அதிபரானார். 1980 முதல் 1988 வரையான காலப்பகுதியில் ஈரான் மீது போர் தொடுத்தார். அது வெற்றி தோல்லியின் முடிவடைந்தது. மேலும், 1980 களில் இவர் இரசாயண ஆயுதத் தாக்குதலை ஈராக்கிலிருந்த குர்திஸ் மக்கள் மீது மேற்கொண்டார். இதனால் சுமார் 5000 பேர் கொல்லப்பட்டனர். 1990 இல் குவைத் மீது படையெடுத்தார். ஆயினும் அமெரிக்கா வளைகுடாப் போர் மூலம் குவைத்தைக் காப்பாற்றியது. 2003 இல் அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்தது. இதனால் சதாம் தலைநகர் பக்தாத்தைவிட்டு பின்வாங்கினார். ஆயினும், டிசம்பர் 2003 இல் சதாமின் மறைவிடத்தைக் அமெரிக்கா கண்டுபிடித்தது. வழக்கு விசாரணையின் முடிவில், அவரை குற்றவாளியாகத் தீர்ப்பளித்த நீதிமன்றம் மரண தண்டனைக்குத் தீர்ப்பளித்து. 2006 டிசம்பரில் அவர் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார்.

ஹஜ் அமின் அல் குசேனி (Haj Amin al-Husseini)
மொஹமட் அமின் அல் குசேனி ஒரு பலஸ்தீனிய அரபு தேசியவாதியும் பலஸ்தீனிய பிரித்தானிய நிர்வாகத்தில் முஸ்லிம் தலைவராகவும் இருந்தார். பலஸ்தீனத்தில் யூதர்களுக்காக தேசிய தாயகம் அமைப்பதை எதிர்த்து வன்முறையில் ஈடுபட்டார். யூத இன எதிர்ப்பாளரான இவர் தன்னைப் பின்பற்றுவபர்களிடம் “கண்ணில் தென்படும் யூதர்களை கொல்லுங்கள்” எனக் கூறியனார். இரண்டாம் உலகப் போரின்போது நாசிக்கு ஒத்துழைப்பு வழங்கிய இவர், 1941 இல் நாசி சர்வாதிகாரி ஹிட்லரைச் சந்தித்தார். ஹிட்லரிடம் அரபுச் சுதந்திரத்திற்கு ஆதரவு தரும்படியும், யூதர்களுக்காக தேசிய தாயகம் அமைப்பதை எதிர்க்கும்படியும் கேட்டார். முஸ்லிம்களை அவர் நாசிப் படையின் சிறப்புப் படைப்பிரிவான வாஃபன் எஸ்எஸ் என்பதில் இணைத்தார். இப்படைப்பிரிவே பல கொலைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் காரணமாயிருந்தது. 1948 இஸ்ரேல் சுதந்திரப் போரின் பின் இவரது தலைமை குறையத் தொடங்கி, அரசியல் செல்வாக்கையும் இழந்தார். 1974 லெபனானின் பெய்ரூட்டில் மரணமடைந்தார்.

இடி அமின் (Idi Amin)
இடி அமின் டாடா ஔமி (இடியாமின்) 1971 முதல் 1979 வரை உகண்டாவை இராணுவ அதிகாரியாக ஆட்சி செய்த ஓர் சர்வதிகாரி. உகண்டாவில் காணப்பட்ட இன முரண்பாட்டைப் பயன்படுத்தி அக்கோலி, லங்கோ மற்றும் ஏனைய இனக் குழுக்களை துன்புறுத்த கட்டளையிட்டார். இவர் ஆட்சிக்காலத்தில் 100,000 முதல் 300,000 எண்ணிக்கையிலான மக்கள் சித்திரவதை செய்து கொல்லப்பட்டனர். 1972 இல் ஆசிய நாட்டவர்களை உகண்டாவைவிட்டு வெளியேற்றினார். இறைவனின் வழிகாட்டலின்படியே இதனைச் செய்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார். பல வருடமாக உகண்டா மக்கள் பலர் காணமல் போயினர். அவர்களின் சிதைக்கப்பட்ட உடல்கள் விக்டோரியா ஆற்றஙங்கரையில் ஒதுங்கின. அமின் நரமாமிசம் உண்ணும் ஒருவராக செயற்பட்டார். ஒருமுறை அவர் மனித இறைச்சி அதிக உப்புமிக்கது எனக் குறிப்பிட்டார்.

ருகொல்லாஹ் கொமேனி (Ruhollah Khomeini)
அயத்துல்லாஹ் கொமேனி 1979 முதல் 1989 வரை ஈரானின் சமயத் தலைவராக இருந்தார். அக்காலத்தில் இவர் சாரியா சட்டத்தை (இஸ்லாமிய சமயச் சட்டம்) ஈரானிய படையினரைக் கொண்டும் இஸ்லாமிய குழுக்களைக் கொண்டும் நடைமுறைப்படுத்தினார். சமய கட்டளைக்குக் கீழ்ப்படியாதவர்கள் மிகவும் மேசமாக தண்டிக்கப்பட்டனர். அரசியல் கைதிகள் அணைவரையும் கொல்லும்படி உத்தரவிட்டார். ஆயிரக்கணக்கானவர்கள் சிறையில் துரிதமாகக் கொல்லப்பட்டனர். கிட்டத்தட்ட 30,000 அரசியல் செயற்பாட்டாளர்கள் கொலை செய்யப்பட்டனர். உள்ளக இரத்தப் பெருக்கைக் கட்டுப்படுத்த 11 நாட்களாக நடந்த சத்திரசிகிச்சை பலனின்றி, இவர் 86 வயதில் புற்றுநோயால் இறந்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யாரிந்த தமிழீழ விடுதலைப் புலிகள்?

தமிழீழ விடுதலைப் புலிகள் என்பதைக் கேட்டால் பலருக்கும் பலவித மனநிலைகள் உருவாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் என்பது பலருக்கு வெறுப்பு, கோபம், பயங்கரவாதி, தீவிரவாதி போன்ற எண்ணங்களையும், பலருக்கு போராட்டம், விடுதலை, தியாகம், வீரம் போன்ற எண்ணங்களையும், வேறு சிலருக்கு திகில், கிலி போன்ற எண்ணங்களையும் உருவாக்கும்.


தமிழீழ விடுதலைப் புலிகள் நல்லவர்களா கெட்டவர்களா என்ற வாதிப்பிரதிவாதங்கள் ஒருபுறமிருக்க, அந்த இயக்கம் தமிழர் வாழ்வியலில், உலக வரலாற்றில், இராணுவ ரீதியில் ஏற்படுத்திய தாக்கங்கள் சிலவற்றைப் பார்ப்பது எவ்விதத்திலும் பிழையாகாது. விடுதலைப் புலிகள் பற்றி மாற்றுக் கருத்து இருந்தால் நீங்கள் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளலாம். விடுதலைப் புலிகள் பற்றி நல் அபிப்பிராயம் இருந்தாலும் நீங்கள் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளலாம். கற்றுக் கொள்ளலுக்கு எதிரி, நண்பன் என்ற பாகுபாடு தேவையில்லை.

உலகில் உள்ள விடுதலை அமைப்புக்கள் தனக்கென, தனித்துவமான தனியாக இராணுவச் சீருடைகளை அணிந்ததில்லை. விடுதலைப் புலிகள் புலியின் வரியைப் போன்ற சீருடைகளைக் கொண்டிருந்தனர். இராணுவப் பிரிவு பச்சை நிறம் அதிகம் சார்ந்த கிடையான க…

ஜப்பானியரின் ஒழுக்கமும் கடமையுணர்ச்சியும்

2018 ஆம் ஆண்டு உதைபந்தாட்ட இரசிகர்களுக்கு முக்கியமான ஆண்டு. ஏனெனில் 2018 யூன்-யூலை மாதங்களில் உலகக்கோப்பை கால்பந்து போட்டி இடம் பெற்றது. நீண்ட போட்டிகளின் பின் 32 அணிகள் மாத்திரம் இப்போட்டிகளுக்குத் தெரிவாகின. உலகக்கோப்பையைக் கைப்பற்றுவது யார் என்ற போட்டியும் எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருந்தன. ஜப்பானும் இதில் கலந்து கொண்டிருந்தது.


ஆட்டமிழப்பு நிலைப் போட்டியின்போது ஜப்பான் அணி 2-3 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வியுற்று வெளியேறியது. ஜப்பான் அணி கால்பந்து வீரர்களுக்கும், ஜப்பான் அணி இரசிகர்களுக்கும் பாரிய ஏமாற்றம். பலர் கண்ணீருடன் காணப்பட்டனர். நிச்சயமாக வேற எந்த செயலைச் செய்யவும் அவர்களுக்கு மணம் வந்திருக்காது.

ஜப்பான் அணியினர் உடையை மாற்றிவிட்டு, அங்கிருந்து கிளம்பிவிட்டனர். உடை மாற்றும் அறைக்குச் சென்ற உலகக்கோப்பை ஏற்பாட்டாளர்களுக்கு அதிர்ச்சியாகவிருந்தது. உடை மாற்றும் அறை மிகவும் நன்றாகச் சுத்தம் செய்யப்பட்டு, “நன்றி” என்று எழுதப்பட்ட ஓர் அட்டை அங்கு வைக்கப்பட்டு இருந்தது. அவ்வளவு பெரிய தோல்வியின் பின்னரும், அங்கிருந்த விளையாட்டு வீரர்களின் கடமையுணர்ச்சி குறையவில்லை. அவர்கள…

யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் சமயங்கள்

யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் சமயங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புபட்டவை. அதேபோல் வேறுபாடுகளும் கொண்டுள்ளன. ஆனால் தாங்கள்தான் சரியானவர்கள் என்பதை நிறுவுவதில் ஒவ்வொருவரும் முனைப்பாகவுள்ளனர்.

யூதம் சுமார் கி.மு 2000 இல் எபிரேயர்களின் மூதாதையர் ஒருவரால் (ஆபிரகாம்) இச்சமயத்தின் ஆரம்பம் உருவாகியது. யூதம் கிட்டத்தட்ட 3500 வருடங்கள் பழமையானது. ஓரிறைக் கொள்கையுடைய பழமையான சமயங்களில் இதுவும் ஒன்றாகவும், ஒரு கடவுள் கொள்கையுடைய பிரதான சமயங்களில் ஒன்றாகவும் இது உள்ளது. ஆயினும், 12 மில்லியன் பேரை அங்கத்தவர்களாகக் கொண்ட இது சிறிய சமயமாகவுள்ளது. எருசலேம் இச்சமயத்தின் புனித நகராகவுள்ளது. யூத நாட்காட்டி 29 அல்லது 30 நாட்களைக் கொண்டதால், 12.13 மாதங்களைக் கொண்டுள்ளது.


ஒரே கடவுள் இருப்பதாக நம்பும் யூதர்கள். அக்கடவுள் இந்த அண்டத்தை மாத்திரம் படைத்தவராக மட்டும் இல்லாது, ஒவ்வொரு யூதருடனும் தனிப்பட்ட ரீதியான உறவைக் கொண்டிருக்கக்கூடியவராகவும் கருதுகின்றனர். அவர்கள் உலகத்துக்குரிய அரசனான, மீட்பர் ஒருவருக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். பரலோகம் இருக்கிறதென்று நம்பினாலும், கடவுள் உலக வாழ்வை முடித்தவர்கள் எங்கு செல்ல வேண்டு…