போலி வேடம்

எலி சிலையாய் இருந்தால் பூஜை செய்கிறோம்.

உயிரோடு இருந்தால் சாக அடிக்கிறோம்.


பாம்பு சிலையாக இருந்தால் பாலை ஊற்றுகிறோம்.

உயிரோடு இருந்தால் அடித்து சாகடிக்கிறோம்.


தாய், தந்தை போட்டோவில் இருந்தால் மாலை போட்டு வணங்குகிறோம்.

உயிரோடு இருந்தால் அனாதை இல்லத்தில் விட்டு விடுகிறோம்.


இறந்து போனவனுக்கு தோள் கொடுக்கிறோம்.

உயிரோடு இருப்பவனுக்கு கை கொடுத்து உதவமாட்டோம்.


கல்லிலே தெய்வத்தன்மை இருக்கின்றது என்று கண்டு பிடித்த நமக்கு,

மனிதனில் மனிதத்தன்மை இருக்கிறதென்று என்பதை கண்டு பிடிக்காமல் போகிறோம்.


உயிரில்லாதவற்றின் மேல் பக்தி எதற்கு?

உயிரோடு இருந்தால் வெறுப்பு எதற்கு?


போலி வேடம் போடாமல், நஸ்தீகன் என கவனத்தை தீருப்பாமல், சுய பரிசோதனை செய்வோமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.