இரட்டை வேடம் போடும் கிறிஸ்தவ எதிர்பாளர்கள்

இந்தியாவில் 1652 மொழிகள் உள்ளன. அதில் 230 மொழிகளுக்கு மட்டுமே எழுத்துகள் உள்ளன. இந்த நாட்டில் இந்தி மொழி இருக்கவில்லை இந்துஸ்தானி, பெர்சியன், உருது, அரபி, சமஸ்கிருதம் போன்ற பல மொழிகள் இருந்தன. ஆனால் இந்த மொழிகளை பிரபலப்படுத்த உள் நாட்டவருக்கோ,வெளி நாட்டவர்க்கோ பெரிய விருப்பம் இருக்கவில்லை 

இங்கிருந்த மொழிகள் நீச மொழிகள் என்பதால் அவைகளை பிரபலப்படுத்த சமஸ்கிருத மொழி பின்புலத்தில் உள்ளவர்கள் விரும்பவில்லை. இந்தியும் அதுபோலவே இருந்தது.

இரட்டை வேடம் போடும் கிறிஸ்தவ எதிர்பாளர்கள்

1880 களில் ஒரு கிறிஸ்தவ சமயப்பரப்பாளர் கலாநிதி சாமுவேல் கென்றி கெல்லொக் 12 மத்திய இந்திய உள்ளூர் மொழிகளுக்கு எழுத்துக்களை உருவாகி  இந்தி மொழியில் இலக்கணம் எழுதினார்.

இவர் எழுதிய முதல் இலக்கண புத்தகம்தான் இந்தி மொழிக்கான முதல் இலக்கணமாக இன்றைக்கும் பல்கலைக்கழகங்களில் பயிற்றுவிக்கப்படுகிறது.

கிறிஸ்தவ சமயப்பரப்பாளர்கள் அதன் பிறகு இந்தி மொழியில் புத்தகங்களை அச்சடித்து, பத்திரிக்கைகளை வெளியிட்டு, பள்ளிகளை, கல்லூரிகளை, பல்கலைக்கழகங்களை  உருவாக்கி இந்தி மொழி பயிற்றுவித்தனர். 

இன்றைக்கு மந்திரிகளாக, சட்ட மன்ற உறுப்பினர்களாக இந்த நாட்டை ஆளுகிறவர்களாக மாறி உள்ளனர். ஆனால் இப்பொழுது சொல்லுகின்றனர் கிறிஸ்தவ சமயப்பரப்பாளர்கள் இந்த நாட்டுக்கு (இந்தியா) தீமை செய்துவிட்டனர் என்று.

கிறிஸ்தவம் வித்திட்ட பல திட்டங்களில் இருந்து கொண்டு கிறிஸ்தவ எதிர்ப்பிரச்சாரம் செய்பவர்கள் கிறிஸ்தவம் உருவாக்கிய திட்டங்கள் (சட்டம் உட்பட) மாற்ற முன்வருவார்களா?

மேலத்தேய கலாச்சாரத்தை நகைப்புக்குளாக்குபவர்கள் அணித்திருக்கும் மேலத்தேய உடையகளை களைந்துவிட்டு, தங்கள் சுயாதீன உடைக்குத்திரும்புவார்களா? தங்கள் சமூகத்திற்கும் அதை வலியுறுத்துவார்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.