ஒரு நல்ல நூல் எழுத வேண்டுமா?

ஒரு நல்ல நூல் எழுத வேண்டுமா? முப்பத்திரண்டு உத்திகளை கூறுகிறார்  தொல்காப்பியர்.

"ஒத்த காட்சி உத்தி வகை விரிப்பின்-
நுதலியது அறிதல்/ அதிகார முறையே/
தொகுத்துக் கூறல்/ வகுத்து மெய்ந் நிறுத்தல்/
மொழிந்த பொருளொடு ஒன்ற வைத்தல்/
மொழியாததனை முட்டு இன்றி முடித்தல்/
வாராததனான் வந்தது முடித்தல்/
வந்தது கொண்டு வாராதது உணர்த்தல்/
முந்து மொழிந்ததன் தலைதடுமாற்றே/
ஒப்பக் கூறல்/ ஒருதலை மொழிதல்/
தன் கோள் கூறல்/ முறை பிறழாமை/
பிறன் உடன்பட்டது தான் உடம்படுதல்/
இறந்தது காத்தல்/ எதிரது போற்றல்/
மொழிவாம் என்றல்/ கூறிற்று என்றல்/
தான் குறியிடுதல்/ ஒருதலை அன்மை/
முடிந்தது காட்டல்/ ஆணை கூறல்/
பல் பொருட்கு ஏற்பின் நல்லது கோடல்/
தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல்/
மறுதலை சிதைத்துத் தன் துணிபு உரைத்தல்/
பிறன் கோள் கூறல்/ அறியாது உடம்படல்/
பொருள் இடையிடுதல்/ எதிர் பொருள் உணர்த்தல்/
சொல்லின் எச்சம் சொல்லியாங்கு உணர்த்தல்/
தந்து புணர்ந்து உரைத்தல்/ ஞாபகம் கூறல்
உய்த்துக்கொண்டு உணர்த்தலொடு மெய்ப்பட நாடிச்
சொல்லிய அல்ல பிற அவண் வரினும்
சொல்லிய வகையான் சுருங்க நாடி
மனத்தின் எண்ணி மாசு அறத் தெரிந்து கொண்டு
இனத்திற் சேர்த்தி உணர்த்தல் வேண்டும்-
நுனித்தகு_புலவர்_கூறிய_நூலே."

மேற்படி உத்திகளை கையாண்டு எழுதினால் மிகச்சிறந்த நூலாக அறியப்பெறும்.

பின் குறிப்பு: இக்கட்டுரை எமது ஆக்கம் அல்ல. முகநூல் பதிவு ஒன்றில் இதனைக் காண நேர்ந்தது. ஆனாலும், கட்டுரையின் சிறப்புக் கருதி மீள் பதிவு செய்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.