முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனைவியின் அகராதி

மனைவியின் அகராதி உங்களுக்குத் தெரிந்திருந்தால், அவர்களின் பேச்சுக்கான விளக்கத்தைப் பெற்றுக் கொள்வீர்கள். வேறு பொருளில் சொல்வதென்றால், அவர்களின் பேச்சை மொழிபெயர்க்கத் தெரிந்திருக்க வேண்டும். உதாரணமாக: மனைவியிடம் வருகிற ஞாயிற்றுக் கிழமை நண்பர் ஒருவரை சந்திக்கச் செல்ல வேண்டும். ஆகவே சினிமாவுக்கு போவதை ஒத்திப்போடலாமா எனக் கேட்கிறீர்கள். அதற்கு உங்கள் மனைவி “தாராளமா... செய்யுங்க” என்றால், அதன் பொருள் “எனக்கு உடன்பாடில்லை” என்பதாகும். மேலும் சில மனைவியின் சொற்களுக்கான அல்லது வாக்கியங்களுக்கான பொருள் விளக்கங்கள் பின்வருமாறு:

மனைவியின் அகராதி
மனைவியின் அகராதி
மனைவி : நமக்கு வேணும்.
பொருள் : எனக்கு வேணும்.

மனைவி ; உங்க முடிவு.
பொருள் : நான் சொல்றதுதான் சரி. அதுக்கப்புறம் உங்க விருப்பம்.

மனைவி : உங்களுக்கு என்ன விருப்பமோ அதை செஞ்சிக்கங்க.
பொருள் : பின்னாடி எப்படியும் என்கிட்டதான் வருவீங்க.

மனைவி : எனக்கு ஏதும் வருத்தமில்லை
பொருள் : வருத்தமாயிருக்கிறேன்

மனைவி : நீங்க ரொம்ப ஆண் தன்மையா இருக்கீங்க.
பொருள் : முதல்ல சவரம் பண்ணுடா வெண்ணை.

மனைவி : இந்த குசினி ரொம்ப சின்னதா, வசதியில்லாம இருக்கு
பொருள் : வேற வீடு பாக்கணும்

மனைவி : உங்களுக்கு என்னை பிடிக்குமா?
பொருள் : பெரிசா ஏதோ கேட்க போறேன்

மனைவி : என்னை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்?
பொருள் : உங்களுக்கு பிடிக்காத ஒரு விடயத்தை செஞ்சிருக்கேன்.

மனைவி : நான் குண்டாயிட்டேனா?
பொருள் : அழகாயிருகேன்னு சொல்லு

மனைவி : சரி
பொருள் : இல்லை

மனைவி : இல்லை
பொருள் : சரி

மனைவி : புதுசா செஞ்ச இந்த டிபன் பிடிச்சிருக்கா?
பொருள் : பழகிக்கங்க

மனைவி ; ஒண்ணுமில்லை
பொருள் : நிறைய இருக்கு

மனைவி : நான் அதை பத்தி பேச விரும்பலை
பொருள் : இப்படி ஏத்திவிட்டுத்தான் பேச ஆரம்பிக்கணும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முக்கியமான சுகாதாரக் குறிப்புகள்

நாம் அன்றாடம் செய்யும் வேலைகளிலும், சாதாரண செயற்பாட்டின்போதும் விடும் தவறுகள் பாரிய எதிர்வினையைத் தோற்றுவிக்கலாம். சில முக்கிய சுகாதாரக் குறிப்புகள் பின்வருமாறு:


செல்பேசியில் பேசும்போது வலது காதைப் பயன்படுத்தவும்.ஒரு நாளில் இரு தடவைகள் கோப்பி குடிக்க வேண’டாம்.மாத்திரைகளை உட்கொள்ளும்போது குளிர் நீரைப் பயன்படுத்த வேண்டாம்.மாலை 5 மணிக்குப் பின் பாரிய உணவை உட்கொள்ள வேண்டாம்.தேனீர் அருந்தும் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள்.எண்ணையுள்ள உணவை சாப்பாட்டில் குறைத்துக் கொள்ளவும்.காலையில் நீரை அதிகமாகவும், இரவில் குறைவாகவும் பருகுங்கள்.செல்பேசி மின்னேற்றிகளை தூரமாக வைத்திருக்கவும்.நீண்ட நேரம் காதில் பொருத்தும் ஒலிவாங்கிக் கருவிகளை பயன்படுத்த வேண்டாம்.இரவு 10 மணி முதல் காலை 6 மணி முதல் உள்ள நேரம் உறங்குவதற்கு ஏற்ற சிறப்பான நேரம்.நித்திரைக்கு முன், மருந்து உட்கொண்ட உடனே படுக்க வேண்டாம்.செல்பேசி மின்கலம் மிகவும் குறைவான மின்சாரத்தைக் கொண்டிருக்கும்போது பயன்படுத்த வேண்டாம். அப்போது 1000 மடங்கு கதிர்வீச்சு வெளிப்படும்.

யானையும் குச்சியும்

யானையை எதில் கட்டிப் போடலாம்? யானையை ஒரு சின்னக் குச்சியில் கட்டிப் போட்டலாம். இது உண்மையா என நீங்கள் கேட்கலாம். ஆம் என யானையும் குச்சியும் (The Elephant And The Twig) என்ற நூல் கூறுகின்றது. ஜெஃப் தாம்ஸன் எழுதிய இந்த நூல் சுய விழிப்புணர்வுக்கும் சுய முன்னேற்றத்திற்கும் உகந்ததால், இது “நேர் சிந்தனைக் கலை” என்று அழைக்கப்படுகின்றது.


பெரிய மரங்களையே சாய்த்துவிடும் யானைக்கு குச்சி ஒன்றுமில்லைதான். ஆனால், குச்சியை ஒன்றுமில்லை என நினைக்காதவாறு அதற்கு மூளைச்சலவை செய்யப்பட்டுவிட்டது.

யானை குட்டியாய் இருக்கம்போது, ஒரு கனமான இரும்புச் சங்கிலியில் கட்டிப்போட்டுவார்கள். குட்டி யானை அதிலிருந்து விடுபடுவதற்கு பல முயற்சிகள் செய்து தோற்றுவிடும். சில நாட்கள் போராடிப் பார்த்த குட்டி, ஒருகட்டத்தில் தன்னால் இதிலிருந்து விடுபடமுடியாது என்ற முடிவுக்கு வந்து, பிணைப்பிலிருந்து விடுதலை பெறும் முயற்சியை நிறுத்திவிடும். வளர்ந்தும், தன்னைப் பிணைத்திருப்பது சாதாரண விடயம் என்று நினைப்பதில்லை.


நாமும் இந்த யானையைப் போல்தான். நமது திறமைகள் எவை, நம்மால் எதையெல்லாம் சாதிக்க முடியும் என்பதை விளங்கிக்கொள்ளாமல், சாதாரண மனத…

கண்ணதாசன் பார்வையில் காதல்

கண்ணதாசன் பார்வையில் காதல் பற்றி அவர் குறிப்பிட்ட பதிவுகளில் (காதல் பொன்மொழிகள்) சில பின்வருமாறு:இளமையிலே காதல்தான் ஒவ்வோர் உயிருக்கும் முதற்கொள்கை.

காதல் உன்னதமானதென்று முதன் முதலில் சொன்னவனே, அதில் தோல்வி கண்டவனாகத்தான் இருந்திருப்பான்.

அர்த்தமில்லாமல் வாழ்கிறோம் என்பதை உணரும்போது, சிலபேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். நிறையபேர் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.

தன்னைப் பார்ப்பதற்காக மனிதன் கண்ணாடியைப் படைக்காமலிருந்தால், உலகத்தில் காதலில் பாதி குறைந்திருக்கும். கண்ணையே படைக்காமல் இருந்திருந்தால், காதல் எவ்வளவு புனிதமாக இருந்திருக்கும்.

சரித்திரத்தில் கணிசமான அளவு போர்க்களங்களை இதுதான் ஏற்படுத்திற்று.

கண்ணும் கண்ணும் பார்க்கின்றன. மனமும் மனமும் நினைக்கின்றன. உடலும் உடலும் துடிக்கின்றன. இது காதல்.

நீதிமன்றத்தில் பாதி மன்றம் இதனால் விளையும் தகராறுகளைக் கவனிக்கிறது. தற்கொலைகளிலே முக்கால்வாசிக்கு இது தலைமை வகிக்கிறது.

காதல் இரண்டு வகைப்படும். ஒன்று, தோல்வியுறுவது. மற்றொன்று, முப்பது வயதுக்கு மேல் வருவது.

இயற்கையை முறியடிக்க, எல்லா வழிகளையும் கண்ட விஞ்ஞானிகள், காதலையும் முறியடிக்க முயன்றார்கள…