ஸ்டீபன் ஹோக்கிங்கின் 10 பொன்மொழிகள்

ஸ்டீபன் வில்லியம் ஹோக்கிங் (Stephen William Hawking; ஸ்டீபன் ஹாக்கிங்), ஜனவரி 8 , 1942 இல் பிறந்து, 21 வயதில் அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (Amyotrophic Lateral Sclerosis) என்னும் நரம்பு நோயால் தாக்கப்பட்டு, 76 வது வயதில் (14 மார்ச் 2018) இயற்கை எய்திய புகழ்பெற்ற அறிவியலாளர். இவரின் ஆய்வுகளும், அவர் எழுதிய நூல்களும் நம்மில் பலருக்கு விளங்காமல் இருக்கலாம். ஆனால், அவர் பேசிய வார்த்தைகள் பல தலைமுறைகளுக்கு விளங்கிக் கொண்டே இருக்கும். ஸ்டீபன் ஹோக்கிங் என்ற மாமனிதனின் வாழ்நாளில் வாழ்ந்தோம் என்ற மகிழ்வோடு அவரின் பேச்சுக்களில் இருந்து சில பிரபலமான மேற்கோள்கள் சில:

ஸ்டீபன் ஹோக்கிங்கின் 10 பொன்மொழிகள்
ஸ்டீபன் ஹோக்கிங் பொன்மொழிகள்

  • அறிவின் பெரும் எதிரி அறியாமையல்ல, மாறாக அறிவின் மாயையாகும்.
  • நுண்ணறிவு என்பது மாற்றத்தை தழுவிக் கொள்ளும் திறனாகும்.
  • அமைதியானவர்கள் பெரும் ஒலிமிக்க மனதைக் கொண்டவர்கள்.
  • உங்கள் அன்புக்குரியவர்கள் இல்லாவிட்டால், அண்டம் கூட அவ்வளவு பெரியதாகிவிடாது.
  • நினைவிற் கொள்ளுங்கள், நீங்கள் பார்க்க வேண்டியது விண்மீன்களையன்றி உங்கள் பாதங்களையல்ல.
  • பெண்கள், முற்றிலும் புரியாத புதிர்.
  • கோபம், மனுக்குலத்தின் பெரும் தீமை. இது மனித நாகரீகத்தை அழிக்கும்.
  • நான் வளர்ச்சியடையாத குழந்தை போன்றவன். எப்போதும் “எப்படி”, “ஏன்” என்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். சிலவேளைகளில், நான் பதிலைக் கண்டுகொள்கிறேன்.
  • வேடிக்கை இல்லாவிட்டால், வாழ்க்கை துன்பியல் நிகழ்வாகிவிடும்.
  • நீ எப்போதும் கோபப்பட்டுக் கொண்டும் முறையிட்டுக் கொண்டும் இருந்தால் மற்றவர்கள் உன்னிடம் நேரம் செலவிடமாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.