பெரியவர்களை மதித்தல்

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது அல்லது சுபகாரியங்களின் போது கட்டாயம் பெரியவர்கள் ஆசிர்வாதம் பெற்றே செல்வார்கள் சிங்களவர். அது அவர்கள் தொட்டில் பழக்கம். இதை தமிழர் நாமே பெருசாக பேசித்திரிக்கிறோம். ஆனால் சிங்களவர்கள் இதை அலட்டிக்கொள்வதில்லை.

Gota
நாட்டின் அதிபரானாலும் தன் தமையனுக்கு மரியாதை செய்தல்

இது அவர்கள் இரத்தத்தில் ஊறிய கலாச்சாரம். 

பெரியவர்களை எப்போதும் மதிப்பவர்கள். 

நாம்தான் பெரியவர்களை மதிப்பதில் எவ்வாறானவர்கள் என்று தெரியுமே. அதனால் இது நம்மைப்பொறுத்தவரை ஆச்சரிய பேசுப்பொருளே. 

வடக்கில் ஒரு மாணவன் பரிசில் பெற்றதும் கல்வி அமைச்சர் காலில் விழமாட்டேன் என்று அடம்பிடித்ததை பெரிய கதாநாயகன் அளவுக்கு பதிவிட்டு மகிழ்ந்த நமக்கு இது ஆச்சரியமே. 

87 வயது சம்பந்தர் அவர்களை எப்போ சாகப்போகிறாய், நீ இன்னமும் சாகவில்லையா என்று 20 வயது இளைஞன் போடும் பதிவிற்கு ஹா ஹா என மறுமொழி போடும் நமக்கு இது ஆச்சரியம்தான். 

முகநூலில் போடும் கெட்ட பதிவுகளுக்கு, ஹாஹா போட்டு இப்படித்தான் கூறவேண்டும் நண்பா என்று ஊக்கப்படுத்தும் நமக்கு இது ஆச்சரியம்தான். 

இந்த ராஜபக்சக்கள் சம்பந்தன் அவர்களை மதிக்கும் அளவுக்கு நம் தமிழர்கள் மதிப்பதில்லை. இது உண்மை. 

இந்த உண்மை விளங்காத நமக்கு இது ஆச்சரியம்தான். 

இப்போது நீங்கள் பெற்றோர் அல்லது பெரியவர்கள் காலில் விழ வேண்டாம். குறைந்தபட்டசம் பெரியவர்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். 

கலாச்சாரம், பண்பாடு, மொழி ஆகியவைகள் ஒரு இனத்தின் முக்கிய அடையாளங்கள். இவற்றை இழக்கும் போது, உங்கள் இன அழிவிற்கு நீங்கள் காரணமாவீர்கள். மற்றவர்களும் உங்களை மதிக்க மாட்டார்கள். தமிழ் போராட்டத்தை நசுக்கி சிங்களவர்கள் எப்படி வெற்றி கொண்டர்கள் என்பதை அறிய வேண்டுமானால், முதலில் உங்கள் இன அடையாளமான கலாச்சாரம், பண்பாடு, மொழி ஆகியவற்றை உங்கள் வாழ்கையில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.