அமைதியான பாடம் புகட்டல்

கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் வீட்டில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. எனவே, ஒருவருக்கு ஒருவர் பேசாமல் அமைதியான முறையில் பாடம் புகட்டினர். சடுதியாக, அடுத்த நாள் தனக்கு அதிகாலையில் விமானப்பயணம் உள்ளதை உணர்ந்த கணவன், தன் மனைவி தன்னை அதிகாலை 5:00 மணிக்கு எழுப்பி உதவி செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தார்.
அமைதியான பாடம் புகட்டல்
அமைதியான பாடம் புகட்டல்

ஆனாலும் முதலில் அமைதியைக் கலைத்து மனைவியிடம் தோற்காமல் இருக்க, ஒரு காகிதத்தில் “தயவுசெய்து என்னை அதிகாலை 5:00 இற்கு எழுப்பிவிடவும்” என எழுதி மனைவி இலகுவில் கண்டு கொள்ளுமாறு வைத்துவிட்டு நித்திரையாகிவிட்டார்.

அடுத்த நாள் காலை 9 மணிக்கு எழும்பியவர், விமானத்தை தவறவிட்டிருந்தார். கோபத்துடன், மனைவி தன்னை ஏன் எழுப்பிவிடவில்லை என அறியச் சென்றவர், தான் எழுதி வைத்திருந்த காகிதத்தின் அருகில் இன்னுமொரு காகிதத்தைக் கண்டார். அதில் “இப்போது மணி அதிகாலை 5:00 ஆகிவிட்டது. எழும்புங்கள்” என்ற குறிப்பைக் கண்டார்.

ஆண்கள் இவ்வாறான போட்டிகளில் விளையாட முடியாதவர்களாகவே உள்ளனர்.

இறைச்சிகளின் ஊட்டச்சத்து

முன்னைய ஒரு பதிவில் (100கி மாட்டிறைச்சி எதிர் 100கி அவரை விதை) முகநூலில் பொய்யான தகவல்களை எப்படி மக்கள் மத்தியில் பரப்புகிறது எனப் பார்த்தோம். குறிப்பாக உணவு பற்றிய திரிபுபடுத்தப்பட்ட தகவலை விக்கிப்பீடியாவின் உதவியுடன் தெளிவுபடுத்தியிருந்தோம். அத்தேடல் மேலும் ஒரு பதிவுக்கு வழி ஏற்படுத்தியது.

இம்முறை இறைச்சிகளின் ஊட்டச்சத்து வேறுபாடுகளை இப்பதிவில் காணலாம். இதற்காக, பரவலாக உணவுக்காக சேர்க்கப்படும் இறைச்சி வகைகளான மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, பன்றி இறைச்சி என்பனவற்றின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து மாட்டிறைச்சி (100கி) ஆட்டிறைச்சி (100கி) கோழி இறைச்சி (100கி) பன்றி இறைச்சி (100கி)
ஆற்றல் 1,047 kJ (250 kcal) 889 kJ 916 kJ (219 kcal) 1,013 kJ (242 kcal)
காபோவைதரேற்று 0 g 0 g 0 g 0 g
கொழுப்பு 15 g 12.62 g 12.56 g 13.92 g
புரதம் 26 g
24.68 g 27.32 g
உயிர்ச்சத்து ஏ -
44 μg
தயமின் பி1 0.046 mg



ரிபோஃபிளாவின் பி2 0.176 mg


நியாசின் பி3 5.378 mg


உயிர்ச்சத்து பி5 -


உயிர்ச்சத்து பி6 0.383 mg

0.464 mg
இலைக்காடி பி9 9 μg



உயிர்ச்சத்து பி12 2.64 μg

0.70 μg
கோலின்


93.9 mg
உயிர்ச்சத்து சி


0.6 mg
உயிர்ச்சத்து டி 7 IU 2.5 IU
53 IU
உயிர்ச்சத்து ஈ 0.45 mg 0.08 mg

உயிர்ச்சத்து கே 1.2 μg


கல்சியம் 18 mg

19 mg
செம்பு 0.85 mg


0.073 mg
இரும்பு 2.6 mg
1.16 mg 0.87 mg
மக்னீசியம் 21 mg

28 mg
மங்கனீஸ் 0.012 mg


பொஸ்பரஸ் 198 mg

246 mg
பொட்டாசியம் 318 mg

423 mg
செலேனியம் 21.6 μg


சோடியம் 72 mg 70 mg 67 mg 62 mg
துத்தநாகம் 6.31 mg

2.39 mg
நீர் 58 g
63.93 g 57.87 g

மேலுள்ள பட்டியலில் அதிக பெறுமதிகள் உள்ள ஊட்டச்சத்துகள் தடித்த எழுத்தில் தரப்பட்டுள்ளன.

முகநூல் | மாட்டிறைச்சி - அவரை விதை

இணையத்தின் வளர்ச்சி இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கிய கட்டத்தில் உள்ளது. அறிவைத் தேடுவோருக்கும், பொழுபோகாமல் இருப்பவர்களுக்கும் இருந்த இடத்திலேயே அவரவர்களுக்குத் தேவையானவற்றை வழங்குவதில் இணையத்திற்கு நிகர் இணையமே. இங்கு சமூக ஊடகங்களின் பங்களிப்பு மிகவும் முக்கிய நிலையில் உள்ளது. இவற்றில் முகநூல் (Facebook; பேஸ்புக்) பலரின் வாழ்வில் ஒன்றிணைந்துவிட்டது. பலர் இதற்கு அடிமையாகிவிட்டனர். அன்று ஆலமரத்தடி நிழலிழும் தெருச் சந்திகளிலும் நிகழ்ந்த அரட்டைகள் இன்று முகநூலில் சாதாரணமாகிவிட்டது.
Beef and beans
முகநூல் | மாட்டிறைச்சி - அவரை விதை

எப்படியிருப்பினும் பல போலித் தகவல்களும் பொய்களும் வதந்திகளும்  உலவும் இடமாக முகநூல் உட்பட்ட சமூக வலைத்தளங்கள் மாறியுள்ளமை எச்சரிக்கை மணியினை அடிக்கிறது. இந்த வகைத் தகவல் ஒன்றினை அண்மையில் பார்க்க நேரிட்டது. 100g Beef Vs 100g Beans (100கி மாட்டிறைச்சி எதிர் 100கி அவரை விதை) என்ற தலைப்பில் படம் ஒன்று பகிரப்பட்டிருந்தது. இந்தப் படத்தின் முக்கிய நோக்கம் 100 மாட்டிறைச்சியைவிட 100 அவரை விதை சிறந்தது என்று காட்டுவதாகும். அங்கு இருந்த ஒப்பீடு பின்வரும் அட்டவணை போன்று இருந்நது (தமிழாக்கம் சேர்க்கப்பட்டுள்ளது).

100g Beef (மாட்டிறைச்சி) 100g Beans (அவரை விதை)
22g of Protein – புரதம் 22g of Protein
0g of fiber – நார்ப்பொருள் 15g of fiber
1.9mg of Iron – இரும்பு 5mg of Iron
16mg of Calcium – கல்சியம் 123mg of Calcium
23mg of Magnesium – மக்னீசியம் 171mg of Magnesium
74mg Cholesterol – கொலஸ்ரோல் 0mg Cholesterol
1480 liters of water – நீர் 103 liters of water

இது உண்மையா என விக்கிப்பீடியாவில் தேடியதில் கிடைத்த விடை கீழுள்ள அட்டவணையில் உள்ளது. முகநூல் தகவல் பொய் என்பதை இங்கு காணலாம். அத்துடன் பல ஊட்டச்சத்துக்கள் முகநூல் தகவலில் காணக்கிடைக்கவில்லை. விடுபடப்பட்டவை மற்றும் சரிசெய்யப்பட்டவை என்பவற்றின் அடிப்படையில் உருவாக்கபட்ட முழுமையான அட்டவணை பின்வருமாறு.

ஊட்டச்சத்து 100 கி மாட்டிறைச்சி 100 கி அவரை விதை
ஆற்றல் 1,047 kJ (250 kcal) 334 kJ (80 kcal)
காபோவைதரேற்று 0 g 10.5 g
கொழுப்பு 15 g 0.5 g
புரதம் 26 g 9.6 g
உயிர்ச்சத்து பி6 0.383 mg
இலைக்காடி பி9 9 μg
உயிர்ச்சத்து பி12 2.64 μg
உயிர்ச்சத்து டி 7 IU
உயிர்ச்சத்து ஈ 0.45 mg
உயிர்ச்சத்து கே 1.2 μg
கல்சியம் 18 mg
செம்பு 0.85 mg
இரும்பு 2.6 mg
மக்னீசியம் 21 mg
மங்கனீஸ் 0.012 mg
பொஸ்பரஸ் 198 mg
பொட்டாசியம் 318 mg
செலேனியம் 21.6 μg
சோடியம் 72 mg
துத்தநாகம் 6.31 mg
நீர் 58 g

முகநூலில் பகிரப்பட்ட தகவல் மோசடியைப் பார்க்கும்போது, அது சைவ உணவு / தாவர உணவு விரும்பிகளால் அல்லது மாட்டிறைச்சி உண்ணாதவர்களால் / வெறுப்பவர்களால் பரப்பப்பட்ட ஒரு நடவடிக்கையாகக் கொள்ள வேண்டியுள்ளது.

ஸ்டீபன் ஹோக்கிங்கின் 10 பொன்மொழிகள்

ஸ்டீபன் வில்லியம் ஹோக்கிங் (Stephen William Hawking; ஸ்டீபன் ஹாக்கிங்), ஜனவரி 8 , 1942 இல் பிறந்து, 21 வயதில் அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (Amyotrophic Lateral Sclerosis) என்னும் நரம்பு நோயால் தாக்கப்பட்டு, 76 வது வயதில் (14 மார்ச் 2018) இயற்கை எய்திய புகழ்பெற்ற அறிவியலாளர். இவரின் ஆய்வுகளும், அவர் எழுதிய நூல்களும் நம்மில் பலருக்கு விளங்காமல் இருக்கலாம். ஆனால், அவர் பேசிய வார்த்தைகள் பல தலைமுறைகளுக்கு விளங்கிக் கொண்டே இருக்கும். ஸ்டீபன் ஹோக்கிங் என்ற மாமனிதனின் வாழ்நாளில் வாழ்ந்தோம் என்ற மகிழ்வோடு அவரின் பேச்சுக்களில் இருந்து சில பிரபலமான மேற்கோள்கள் சில:

ஸ்டீபன் ஹோக்கிங்கின் 10 பொன்மொழிகள்
ஸ்டீபன் ஹோக்கிங் பொன்மொழிகள்

  • அறிவின் பெரும் எதிரி அறியாமையல்ல, மாறாக அறிவின் மாயையாகும்.
  • நுண்ணறிவு என்பது மாற்றத்தை தழுவிக் கொள்ளும் திறனாகும்.
  • அமைதியானவர்கள் பெரும் ஒலிமிக்க மனதைக் கொண்டவர்கள்.
  • உங்கள் அன்புக்குரியவர்கள் இல்லாவிட்டால், அண்டம் கூட அவ்வளவு பெரியதாகிவிடாது.
  • நினைவிற் கொள்ளுங்கள், நீங்கள் பார்க்க வேண்டியது விண்மீன்களையன்றி உங்கள் பாதங்களையல்ல.
  • பெண்கள், முற்றிலும் புரியாத புதிர்.
  • கோபம், மனுக்குலத்தின் பெரும் தீமை. இது மனித நாகரீகத்தை அழிக்கும்.
  • நான் வளர்ச்சியடையாத குழந்தை போன்றவன். எப்போதும் “எப்படி”, “ஏன்” என்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். சிலவேளைகளில், நான் பதிலைக் கண்டுகொள்கிறேன்.
  • வேடிக்கை இல்லாவிட்டால், வாழ்க்கை துன்பியல் நிகழ்வாகிவிடும்.
  • நீ எப்போதும் கோபப்பட்டுக் கொண்டும் முறையிட்டுக் கொண்டும் இருந்தால் மற்றவர்கள் உன்னிடம் நேரம் செலவிடமாட்டார்கள்.